Tuesday, April 30, 2019

மாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி

இன்று மாவட்ட சங்கம் மாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி கண்டது .இந்த பேட்டியின் போது மாவட்ட செயலருடன் ,மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ,மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன் மாநில அமைப்பு செயலர் தோழர் ,சமுத்திரக்கனி ஆகியோர் பங்கேற்றனர் .
1.ஊழியர் பற்றாக்குறை இருக்க கூடிய இடங்களில் ஊழியர் நியமனம் செய்யப்பட வேண்டும் .
2. ஸ்ரீவில்லிபுத்தூர் CSC க்கு  ராஜபாளையம் பகுதியில் இருந்து போடப்பட்ட மாறுதல் Transfer Policy க்கு முரணாக இருப்பதை சுட்டி காட்டினோம் .ஆதலால் ஊழியர்களை deputation அடிப்படையில் அனுப்புவது என்று முடிவு எடுக்கப்பட்டது .ஊழியர்கள் பணி புரிய உகந்த சூழல் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இல்லாமல் இருப்பது உடனடியாக சரி செய்யப்படும் என முதன்மை பொது மேலாளர் உறுதி அளித்தார் .
3.மருத்துவ சிகிச்சைக்காக அளிக்கப்படும் Referral லெட்டர் கொடுப்பதில் இருக்கும் நடைமுறைகள் விரிவாக விவாதிக்கபட்டன .அது விசயமாக மாவட்ட செயலருக்கு கொடுக்கப்பட்ட மெமோ மீது நமது கருத்துக்களை விரிவாக முதன்மை பொது மேலாளர் அவர்களிடம் விவாதித்தோம் .தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வன்மம் வைத்து மெமோ  வழங்கும் CAO (F )  அவர்களின் நடவடிக்கைகள் மாவட்டத்தின் தொழில் அமைதிக்கு பங்கம் வகிக்கும் என்பதை சுட்டி காட்டி உள்ளோம் .இது விஷயமாக நமது தமிழ் மாநில சங்கத்திற்கும் தகவல் அனுப்பி உள்ளோம் .
4.ஒப்பந்த ஊழியர் இட மாறுதலை உடனடியாக அமல்படுத்த முதன்மை பொது மேலாளர் AGM(Admn) அவர்களுக்கு  உத்தரவு  பிறப்பித்தார் . 
5.மருத்துவ பில்களை settle செய்வதில் Visit ரிப்போர்ட் காலதாமதமாய் வருவதை சுட்டி காட்டி உள்ளோம் .


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...