7 வது மாவட்ட விரிவடைந்த செயற்குழு ,கருத்தரங்கம் மற்றும் தோழர் R .முனியாண்டி அவர்களின் பணி நிறைவு பாராட்டு
இன்று சிவகாசியில் விரிவடைந்த மாவட்ட செயற்குழு , பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் "PROMOTE FTTH SERVICE" என்ற பொருளில் கருத்தரங்கம் நடைபெற்றது .
இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் ,தலைமை தாங்கினார் . தியாகிகளுக்கு ,குறிப்பாக நமது மாநில உதவி செயலர் முருகையா அவர்கள் மறைவிற்கும் , இலங்கை குண்டு வெடிப்பில் பலியான அப்பாவி மக்களுக்கும் மாவட்ட துணை தலைவர் தோழர் இன்பராஜ் அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்த அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் . அதன் பின் தலைவர் தலைமையுரை நிகழ்த்தினார் .மாவட்ட செயலர் தனது தொடக்க உரையில் இன்று BSNL நிறுவனம் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார் .அதே போல் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை விரிவாக விளக்கினார் .நமது மத்திய சங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் தெரு முனை பிரச்சார கூட்டங்களை ராஜபாளையம் ,சாத்தூர் ,ஸ்ரீவில்லிபுத்தூர் ,விருதுநகர் மற்றும் சிவகாசியில் நடத்தி உள்ளதை சுட்டி காட்டினார் ,அதே போல் மே தின பேரணியை விருதுநகரில் மாலை 5.30 மணிக்கு மே 1 ஆம் தேதி நடத்த அனைத்து கிளைகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என எடுத்துரைத்தார் .பின்னர் பணி நிறைவு பெற்ற தோழர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது . பணி நிறைவு பெற்ற தோழர்களை மாவட்ட தலைவர் ,செயலர், மாவட்ட உதவி செயலர் சந்திரசேகரன் மற்றும் மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பாராட்டி பேசினர் .அதன் பின் மாநில அமைப்பு செயலர் சமுத்திரக்கனி அவர்கள் இன்றைய சூழல் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார் .அதன் பின் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமை வகித்து FTTH பற்றி விரிவாக எடுத்துரைத்தார் .இந்த கருத்தரங்கில் மாவட்ட துணை பொது மேலாளர் உயர் திரு மாரியப்பன் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர் .மாவட்ட பொருளாளர் தோழர் பாஸ்கரன் நன்றி நவின்றார் .அனைத்து தோழர்களுக்கும் ஒரு இனிய மதிய உணவை வழங்குவதிற்கு தோழர் முனியாண்டி அவர்கள் முழு பங்களிப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment