இன்று விருதுநகரில் BSNLEU ஊழியர் சங்கம் சார்பாக "SAVE BSNL SAVE NATION" பேரணி மிக சிறப்பாக நடைபெற்றது . விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக துவங்கிய பேரணி மதுரை ரோடு ,உழவர் சந்தை வழியாக பழைய பஸ் நிலையம் முன்பாக நிறைவு பெற்றது .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பேரணிக்கு முன்பாக தொடக்க உரை நிகழ்த்தினார் .முறையாக பேரணியை மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் .எழுச்சி மிகு கோஷங்களை தோழர்கள் சமுத்திரக்கனி ,இளமாறன் ,முத்துசாமி ஆகியோர் எழுப்பினர் .பேரணி நிறைவு பெற்ற பஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் தோழர்கள் இளமாறன் ,ரவீந்திரன்,ஜெயக்குமார் ,சமுத்திரக்கனி சந்திரசேகரன் ஆகியோர் பேரணியின் நோக்கம் குறித்து விரிவாக பொது மக்கள் முன்பாக பேசினர் .ஏராளமான பெண் ஊழியர்கள் உட்பட திரளானோர் பேரணியில் பங்கேற்றனர் .






















No comments:
Post a Comment