BSNL ஐக் காப்போம்! இந்தியாவைக் காப்போம்!! கையெழுத்து இயக்கத்தை அருப்புக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். ஜனவரி 21 ஆம் நாள் மாலை 5 மணிக்கு நடத்தப் பெற்ற இயக்கத்தினை அருப்புக்கோட்டை JCTU அமைப்பாளர் தோழர் ராஜாராம் ஒருங்கிணைத்தார். ஆயுள் காப்பீட்டு சங்க ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு இயக்கத்தை நடத்திக் கொடுத்தனர். AIBSNLEA வைச் சேர்ந்த தோழர் ஜான்சன் சாமுவேல் உடனிருந்து இயக்கத்தில் ஈடுபட்டார்.
பகுத்தறிவாளர் கழகப் புரவலரும், மீனாம்பிகை பேருந்து அதிபருமான மானமிகு ஆனந்தம் அவர்கள் இன்றைய நாளின் முதல் கையெழுத்தை இட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். காமாராஜர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியை முனைவர் ஷமீம் ரிஷ்வானா அவர்களும் கையெழுத்திட்டு இயக்கத்தை வாழ்த்திச் சென்றார். தொடர்ந்து ஒருமணிநேரத்திற்கு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் 600 கையெழுத்துகள் பெறப்பட்டன.
தேச நலனிலும் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட மரியாதைக்குரிய LIC தோழர்களுக்கு மாவட்டச் சங்கம் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment