BSNL நிறுவன புத்தாக்கதிற்காக மத்திய அரசின் கவனத்தை
ஈர்க்க தேசம் தழுவிய அளவில் மார்ச் 17 முதல் தொடங்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி 30-01-2015 அன்று கடலூரில் FORUM சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது .BSNL மற்றும் MTNL நிறுவன இணைப்பு நமது BSNL நிறுவனத்திற்கு எவ்விதத்திலும் பயன் தராது என்பது மட்டும் அன்றி நமது நிறுவனத்தை மேலும்
சீரழித்து விடும் என்றும் , 01-01-2017 முதல் அமலாகவேண்டிய ஊதிய மாற்றம் என்பது நலிவடைந்த நமது நிறுவனத்திற்கு மறுக்கப்படும் அபாயத்தையும் , இதனால் ஓய்வூதியம் பெறுவோரும் பாதிக்கப் படும் நிலை உள்ளதையும் நமது பொது செயலர் சுட்டி காட்டினார் .நிறுவனத்தை பாதுகாக்க அனைவரும் சங்க வேறுபாடு இன்றி ஒன்று திரண்டது வர உள்ள போராட்டத்தை 100% வெற்றிகரமாக்க கடலூர் கருத்தரங்கம் பறைசாற்றியது .நமது மாவட்டத்தில் இருந்து நமது BSNLEU சங்கம் சார்பாக 41 பேர் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் .ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் வேல்சாமி கலந்து கொண்டார் .
No comments:
Post a Comment