நேற்று (02-01-2015)அருப்புகோட்டை கோட்ட அதிகாரி தான் கையெழுத்து போட்டு உத்தரவு பிறப்பித்ததை இன்று அவரே அமல்படுத்த மறுத்ததை எதிர்த்து நமது அருப்புகோட்டை கிளை சங்கம் போர்கோலம் பூண்டது .தொடர்ந்த பேச்சுவார்த்தை .பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்காமல் கமா போட்ட கோட்ட அதிகாரியின் போக்கை நமது இயக்கம் கடிவாளம் போட்டு நிறுத்தியது .உத்தரவு வெளியாகி நமது தோழர்கள் இன்று புதிய பணியில் சேர்ந்து விட்டனர் . போராடிய அருப்புகோட்டை கிளை தோழர்களுக்கு சபாஷ் ! .இதே போல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 2 மாதம் ஊதியம் வழங்குவதை லேபர் ஆபீசர் உத்தரவை மதிக்காது நிர்வாகம் காலதாமதம் செய்யுமானால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விரைவில் "MARCH TO MADURAI " போராட்டத்தை மாவட்ட சங்கம் நடத்தும் .


No comments:
Post a Comment