Tuesday, March 7, 2017

நெடுவாசல்

நெடுவாசல்.ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை ஆதரித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் விருதுநகர் மாவட்டத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 5 people, people standing

Thursday, February 23, 2017

டெல்லி பேரணி –

22.2.2017 அன்று டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக, BSNL ஊழியர் சங்கமும், BSNL கேஷுவல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து நடத்திய பிரம்மாண்ட பேரணி –

1.குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18000

2.சம வேலைக்கு சம சம்பளம்

3.பணி நிரந்தரத்துக்கான திட்டம்

4.ஈ.பி.எஃப்., ஈ.எஸ்.ஐ., கிராஜுவிட்டி, போனஸ்

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 250 பேர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவர்க்கும் விருதுநகர் மாவட்ட சங்கத்தின்  புரட்சிகர நாள் வாழ்த்துக்கள்  
மேலும் புகைப்படங்கள் பார்க்க :Click Here

இலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள இலஞ்சி என்ற இடத்தில் தோழர் பார்வதி நாதன் அரங்கில் AIBDPAசங்கத்தின் தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது. மாநில தலைவர் தோழர் S.மோகன் தாஸ் அவர்களின் தலைமையில் பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 350க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் S.செல்லப்பா மற்றும் தமிழ் மாநில செயலாளர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோர் 21ஆம் தேதி கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நாகர்கோவில், தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்ட AIBDPA சங்கங்கள் இணைந்து நடத்திய அந்த மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட BSNL ஊழியர் சங்கம், மாவட்ட செயலாளர் தோழர் N.சூசை மரிய அந்தோணி தலைமையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது அனைவராலும் பாரட்டப்பட்டது. இந்த மாநில மாநாட்டில் தோழர் P.மாணிக்க மூர்த்தி தலைவராகவும், தோழர் C.K.நரசிம்மன் மாநில செயலாளராகவும், தோழர் S. நடராஜா மாநில பொருளாளராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய மாநில சங்கத்தின் பணி சிறக்க விருதுநகர் மாவட்ட  BSNL ஊழியர் சங்கத்தின் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
Image may contain: text
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 5 people
Image may contain: 4 people
Image may contain: one or more people
Image may contain: 1 person
Image may contain: one or more people, crowd and indoor
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, crowd and indoor
Image may contain: 1 person
Image may contain: 1 person

BSNLEU சங்கத்தின் இடைவிடாத மார்க்கெட்டிங் பணி

இன்று மாலைவிருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமமான  குமாரலிங்கபுரத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில்  மாவட்ட செயலர் ரவிந்திரன் , மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் , கிளைச் செயலர் மாரிமுத்து , முன்னணி தோழர் ராஜேந்திரன் ,ஓட்டுனர் முனியசாமிமற்றும் செக்யூரிட்டி தோழர் ரவீந்திரன்  ஆகியோர் பங்கேற்றனர் .1 மணி நேரத்தில் 53 சிம்கள் அங்கு விற்பனை செய்யப்பட்டது.
Image may contain: one or more people, people sitting and people standing
Image may contain: one or more people
Image may contain: one or more people and people sitting
Image may contain: one or more people and people standing

மெகா மேளா

நேற்று  மாவட்ட செயலர் நமது தோழியர்கள் பாண்டியம்மாள் , பாண்டி செல்வி , மேரி மற்றும் ஓட்டுனர் முனியசாமி உடன் மெகா மேளாவில் W புதுப் பட்டியில் கலந்து கொண்ட நிகழ்வு. இங்கு  138 சிம்கள் விற்கப்பட்டன
Image may contain: 3 people, outdoor
Image may contain: 3 people, people sitting
நேற்றைய மெகா மேளாவில்  சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் 170 சிம்கள் விற்க்கப்பட்டது மட்டுமன்றி 11 பிராட்பேண்ட இணைப்புகளும் பெறப்பட்டு உள்ளது .தோழர் சமுத்திரகனி மற்றும் கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.மல்லாங்கிணற்றில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி பங்கேற்ற நிகழ்வில் 11 சிம்கள்களும் ,சுந்தரபாண்டியம் பகுதியில் நமது மாவட்ட உதவி செயலர் பங்கேற்ற நிகழ்வில் 57 சிம்களும் விற்பனை செய்யப்பட்டு  உள்ளது .

சிம் விற்பனையில் தனியொருவன்

Image may contain: 2 people
நேற்றைய மெகா மேளாவில்  கோட்டூர் மற்றும் A .புதுப்பட்டி பகுதிகளில் தனியொருவனாக நமது சங்க முன்னணி ஊழியர் ராஜேந்திரன் 175 சிம்களை விற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .இவர் நமது அனைத்திந்திய மாநாட்டில் செந்தொண்டராக பணியாற்றியவர் .இந்த  அற்புத தோழனை மார்க்கெட்டிங் பணிகளில் தொடர்ந்து முத்திரை பதிப்பதை பாராட்டுவோம் . வாழ்த்துவோம் .

Tuesday, February 21, 2017

சபாஷ் தோழியரே !

சபாஷ் தோழியரே !

நமது GM அலுவலகத்தில் கடந்த 03/03/2016 அன்று பரிவு அடிப்படையில் RM கேடரில் பணி நியமனம் பெற்ற  தோழியர் D.மேரி .அந்த தோழியர் தனது சொந்த கிராமமான W .புதுப்பட்டியில் தனி நபராக நமது BSNL சிம்களை விற்பதற்கு வீடு வீடாக கேன்வாஸ் செய்து இன்று 5 மணி கால அவகாசத்தில் 199 சிம்களை விற்பனை செய்தார் . அவருடைய வயசு 48. இந்த வயதில் அதுவும் பணி நியமனம் பெற்று 1 வருடம் கூட ஆகாத நிலையில் கூட    FORUM எடுத்த முடிவை நான் செய்கிறேன் என்ற அந்த தோழியருக்கு நெஞ்சு  நிறை  பாராட்டுக்கள் .அவருடன் துணை புரிந்த தோழியர் பாண்டிசெல்விக்கும் பாராட்டுக்கள் .மாவட்ட செயலர் ரவீந்திரன் அவர்களும் அவர்களுடன் இந்த பணிக்கு துணை நின்றார் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...