Sunday, December 18, 2016

விடை கொடுத்தோம் அன்பு தோழனுக்கு


சென்னையில் சாலை விபத்தில் காலமான நமது அன்பு தோழர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தோம் நேற்று காலையில் .மாவட்ட செயலருடன் ,கிளை செயலர்கள் முத்துசாமி ,மதி கண்ணன் ,மாரிமுத்து ,சமுத்திரம் அவர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகள்  சந்திரசேகரன் ,ராஜு ,அனவ்ரதம் ,அஷ்ரப்தீன் ,I .முருகன் ,தியாகராஜன் ,காதர் ,வெங்கடசாமி அவர்களும் , இராஜை கிளையின் ஏறக்குறைய அனைத்து உறுப்பினர்களும், SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார், மாநில  சங்க நிர்வாகி கோவிந்தராஜ், மாவட்ட உதவிச் செயலர் தோழர் வெங்கடேஷ் உட்பட பெரும் எண்ணிக்கையில் மறைந்த தோழருக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செய்தனர் .மாவட்ட சங்கம் ஒரு நல்ல தொழிற்சங்கவாதியை இழந்தது மட்டும் அல்ல ஒரு திறமை மிக்க தொழில் நுட்ப ஊழியரை மாவட்ட நிர்வாகமும் இழந்து  விட்டது .சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நமது தோழருக்கு நமது தமிழ் மாநில  செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் SNEA மாநில  செயலர் ராஜசேகர்  அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளனர் .

Friday, December 16, 2016

அஞ்சலி

அஞ்சலி
Image may contain: 2 people
ராஜபாளையம் கிளை செயலராகவும் ,லோக்கல்  கவுனசில் உறுப்பினராகவும் குறுகிய காலத்தில் நமது BSNLEU சங்க வளர்ச்சிக்கு பெரும் உதவிகரமாக இருந்த தோழர் T.முத்துராமலிங்கம் அவர்கள் JTO பயிற்சிக்கு சென்னையில் இருந்தபோது சாலை விபத்தில் காலமானார் .அவர் தம் மறைவால் துயர் உறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நமது சங்க கொடியை இறக்கி அஞ்சலி செலுத்த அனைத்து கிளை செயலர்களையும் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது 


Thursday, December 15, 2016

போராளிகளுக்கு நன்றி

புதிய டவர் நிறுவனம் அமைப்பது BSNL நிறுவனத்தை மறைமுகமாக தனியார்மயத்தில் இட்டு செல்லும் மற்றும் நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்ந்து டிசம்பர் 15 போராட்டத்தில் பங்கேற்ற போராளிகளுக்கு நெஞ்சார்ந்த  நன்றி .விருதுநகர் மாவட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை பின்வருமாறு .
மொத்த அதிகாரிகள் எண்ணிக்கை               = 107
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள்       =53
வழக்கம் போல் விடுமுறை எடுத்தவர்கள்  =46
நமது நிறுவனம் அழிந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு சென்றவர்கள்                                    = 8

மொத்த ஊழியர்கள்  எண்ணிக்கை                  =369
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள்         =258
வழக்கம் போல் விடுமுறை எடுத்தவர்கள்     =75
நமது நிறுவனம் அழிந்தாலும் பரவாயில்லை என்று வேலைக்கு சென்றவர்கள்                                    = 35

           Total Officers and Officials                                    = 476
                                              Strike                                    =311
                                              Leave                                    =121
                                              Duty                                      = 43
Strike %    Non Executives                                             = 69.91%
                         Executives                                              =49.53%
Leave %   Non   Executives                                           =20.32%
                           Executives                                            =42.99% 
Duty%       Non Executives                                             =9.49%
                          Executives                                                               =7.47%

    

Sunday, December 11, 2016

மகாகவி பாரதியார் பிறந்த தினம்


தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன் மகாகவி பாரதி பிறந்தநாள் -
மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்..!
சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!
எட்டயபுரம், பிறந்த ஊர். சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர். மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!.மேலும் படிக்க :-Click Here
                          
நன்றி :- ஆனந்த விகடன் 


வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்


Friday, December 9, 2016

டிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள்

டிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் நேற்று ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் SNEA தலைவர்கள் தோழர் தங்கவேல் மற்றும் தோழர் கோவிந்தராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .இக் கூட்டங்களில் தோழர்கள் ரவீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி  அவரகள் பங்கேற்றனர் .
இன்று சிவகாசியில் SNEA கிளை செயலர் தோழர் M சுப்ரமணியன் தலைமையில் மிக சிறப்பாக போராட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது .
 இன்று நடைபெற்ற K .G.போஸ் நினைவு தினம் மற்றும் அனைத்திந்திய மாநாட்டு தின கொடியேற்ற நிகழ்வுகள் .
ராஜபாளையம் 
இன்று ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தோழர் தியாகராஜன் தலைமை வகிக்க மூத்த தோழர் ராஜேந்திரன் சங்க  கொடியை ஏற்றினார் 
ஸ்ரீவில்லிபுத்தூர் 
இங்கு நடைபெற்ற நிகழ்வுக்கு தோழர் வெங்கடசாமி தலைமை வகிக்க தோழர் பொன்னுச்சாமி கொடி ஏற்றினார் 



                                        சிவகாசி 
இங்கு நடைபெற்ற நிகழ்வுக்கு தோழர் அழகுராஜ்  தலைமை வகிக்து  கொடி ஏற்றினார்



11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...