29/03/2017 அன்று TNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு அதன் தலைவர் தோழர் M .S . இளமாறன் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் ராமச்சந்திரன் சமர்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது . BSNLEU மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் சமுத்திரகனி , சிவகாசி OCB கிளைச் செயலர் முத்துச்சாமி வாழ்த்துரை வழங்கினர் .மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி பேசினார் . சிறப்புரையாக அகில இந்திய துணை பொதுச் செயலர் தோழர் பழனிச்சாமி சிறப்புரையில் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளில் நமது சங்கத்தின் தலையீடு ,கேரளாவில் உள்ள சம்பள விகிதம் போல் தமிழ்நாட்டுக்கு கேட்டு நமது மத்திய சங்கம் எடுத்துள்ள நிலைபாடு ,EPF , ESI பிரச்சனைகள் என அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்தார் .சந்தாவை முறையாக வசூலிப்பது , ஏப்ரல் 15ம் தேதி கூட்டம் நடத்துவது , EPF விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது , சமீபத்தில் காலமான சிவகாசி ஒப்பந்த ஊழியர் அசோக்குமார் குடும்ப நிவாரண நிதி வசூல் செய்வது . வருங்காலத்தில் மேல் மட்ட முடிவுகளை அருப்புக்கோட்டை கிளை உறுதியான முறையில் அமல்படுத்துவது, என முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.



















No comments:
Post a Comment