நமது BSNLEU சங்க தோழர்கள் தொடர்ந்து தீவிரமாக மார்க்கெட்டிங் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .குறிப்பாக ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதிகளில் நமது தோழர்கள் திட்டமிட்டு திறம்பட பணி புரிவதை மாவட்ட சங்கம் நெஞ்சார பாராட்டுகளை உரித்தாக்குகிறது.அதே போல் நமது ஆண் ஊழியர்களே தயக்கம் காட்டும் இப் பணிகளில் தொடர்ந்து இப் பணிகளில் எடுபடும் நமது தோழியர்கள் பாண்டிச்செல்வி ,பாண்டியம்மாள் ,மேரி ,ம்கற்றும் முத்துலட்சுமி ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுக்கள் .27/03/2017 அன்று வத்ராப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் 156 சிம்களும் ,28/03/2017 அன்று W .புதுபட்டி யில் 93 சிம்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன .28/03/2017 அன்று சிவகாசியில் நடைபெற்ற நிகழ்வில் 140 சிம்கள் விற்கப்பட்டு 5 தரைவழி இணைப்புகள்பிராட் பேண்ட் வசதி உடன் பெறப்பட்டு உள்ளன .இங்கு கருப்பசாமி ,ராஜு ,முத்துசாமி ,முனியாண்டி ,சமுத்திரக்கனி மற்றும் சந்திரசேகரன் கலந்து கொண்டு உள்ளனர் .ராஜ்பாளையம் பகுதியில் 28/03/2017 அன்று நடைபெற்ற நிகழ்வில் 208 சிம்கள் பெறப்பட்டு உள்ளன .இங்கு ராதாகிருஷ்ணன் ,பொன்னுசாமி ,வெள்ளை பிள்ளையார் ,தியாகராஜன் ,ரவிச்சந்திரன் ,கிளை செயலர் பொன்னுச்சாமி ஆகியோர் பங்கேற்று உள்ளனர் .




No comments:
Post a Comment