ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.650 கோடி அபராதம்?: ரோமிங் விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுக்க பட உள்ளது .தொலைத் தொடர்பு சேவை அளித்து வரும் ஏர்டெல் நிறுவனம் விதிகளை மீறி செயல்பட்டதாக மத்திய தொலைத் தொடர்பு துறை குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக நீண்ட தூர நகரங்களில் இருப்பவர்களை லோக்கல் கால் கட்டணத்தில் தொடர்பு கொண்டு பேசும் வசதியை ஏர்டெல் நிறுவனம் அளித்தது. தொலைபேசியை பயன்படுத்துபவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி பலன் அடைந்தனர்.மும்பையில் இருந்து டெல்லிக்கு எஸ்.டி.டி.யில் பேசுபவர்கள் கூட லோக்கல் கால்கட்டணம் செலுத்தினார்கள்.
இதனால் ஏர்டெல் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த விதி மீறல்கள் 2003-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை நடந்தது. இதற்கு விளக்கம் கேட்டு மத்திய தகவல் தொடர்பு துறை ஏர்டெல் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.ஏர்டெல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய தொலைத்தொடர்பு துறை ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு விசாரணை நடத்தி ஒரு மண்டலத்துக்கு ரூ.50 கோடி அபராதம் விதிக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய தொலைத் தொடர்பு துறை மந்திரி கபில்சிபல் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து அபராதத் தொகையை பெற மத்திய தொலைத் தொடர்புதுறை தீவிரமாகியுள்ளது. 13 மண்டலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.650 கோடியை ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க திட்டமிட்டுள்ளன
No comments:
Post a Comment