புயல் பாதித்த பகுதிகளில் நமது ஊழியர்களுக்கு வட்டியில்லாமல் 1 மாத PAY அட்வான்ஸ் வழங்க நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது
கவுன்சில்களில் கூடுதல் உறுப்பினர் நியமிப்பதில் கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் உத்தரவு வெளியிட நமது பொது செயலர் தோழர் அபிமன்யு, மற்றும் அனிமேஷ் மித்ரா அவர்கள் 23-10-2013 அன்று பொதுமேலாளர் ( SR ) திரு .நீரஜ் வர்மா அவர்களை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர் . இன்னும் ஓரிரு நாட்களில் சட்ட ஆலோசனை பெறப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார் .
நிதி நிலையில் சரிந்த நமது நிறுவனத்தை நிலை நிறுத்துவதற்கு அனைத்து சங்கங்களின் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையின் அடிப்படையில் விரைவில் அக் கூட்டம் நடத்தப் படும் என இயக்குனர் (மனித வளம் ) திரு A .N .ராய் அவர்கள் உறுதி அளித்துள்ளார்
நமது சங்கத்தின் அடுத்த மத்திய செயற்குழு பிப்ரவரி மாத மத்தியில் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் .
டிசம்பர் 12 ம் தேதி பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பிற்கான கோரிக்கைகளை மையபடுத்தி 18-11-2013 முதல் 23-11-2013 வரை கோரிக்கை வாரம் அனுஷ்டிக்க நமது சங்கம் அறை கூவல் விடுத்துள்ளது .கிளை மற்றும் மாவட்ட மையங்களில் திரளான கூட்டம் நடத்த வேண்டும் .
No comments:
Post a Comment