Friday, October 25, 2013

முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

          இந்தியாவின் செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இவரது வருவாயில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டபோதும் இந்த முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார். இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.
          லண்டனில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 15.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். திலீப் சங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 12 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 4-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத் தலைவர் சிவ நாடார் 8.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா 8.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகரான ஷாருக்கான் 400 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் இப்பட்டியலில் 114 வது இடத்ததை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யப்பா! இப்பயே கண்ணக் கட்டுதப்பா!

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...