Thursday, March 16, 2017

FORUM முடிவை அமலாக்க உறுதியுடன் செய்லபடும் விருதுநகர் மாவட்ட சங்கம்

15/03/2017 அன்று நடைபெற்ற மெகா மேளாவில் நமது BSNLEU  மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் நமது உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் . வழக்கம் போல் ராஜபாளையம் தோழர்கள் இன்று 220 சிம்களை விற்றும்  3 M N P பெற்றும் முதலிடத்தில் வந்துள்ளனர் இங்கு நமது கிளை செயலர் தோழர் பொன்ராஜ், மாவட்ட சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன் ,வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுச்சாமி ,மூத்த தோழர் தியாகராஜன் ஓய்வூ தியர் சங்க . சிவஞானம்  ஆகியோர் பங்கேற்றனர் இங்கு 2 தரைவழி இணைப்புகளும் 2 பிராட் பேண்ட் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு உள்ளன ..சிவகாசி கட்டளைப்பட்டியில்  100 சிம்கள் விற்பனை செய்யப்பட்டு 3 தரை வழி இணைப்புகள் பிராட்பேண்டுடன் பெறப்பட்டு உள்ளன .. இங்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி,கிளை செயலர் M.கருப்பசாமி ,நாகேந்திரன் ,இருளப்பன் ஆகியோர் பங்கேற்றனர் .W புதுப்பட்டியில் 78 சிமகளும்  , கான்சாபுரம் பகுதியில்  69 சிம்களும் விற்கப்பட்டுள்ளன .M   ரெட்டியாபட்டியில் தனி நபராக தோழர் ராஜேந்திரன் 110 சிம்களை விற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் RR நகரில் 2 தரைவழி இணைப்புகளை  பிராட் பேண்ட் வசதியுடன் பெற்றுள்ளார் .  .Wபுதுப் பட்டி மற்றும் கான்சாபுரத்தில் மாவட்ட செயலர் , சண்முகசுந்தரம் , கோவிந்தராஜ் மற்றும் நமது தோழியர்கள் மேரி , முத்துலெட்சுமி ஆகியோர்  பங்கேற்றனர் , ரோசல்பட்டியில் கிளைச் செயலர்கள் மாரிமுத்து இளமாறன் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சந்திரசேகரன் , மாரியப்பா ,வெங்கடப்பன் பங்கேற்ற நிகழ்வில் 10 சிம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 
 Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 3 people, people sitting, child and outdoor 
 Image may contain: 2 people

Sunday, March 12, 2017

அஞ்சலி


         நமது BSNLEU முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகியான சிவகாசி தோழர் ரசூல் அவர்கள் இன்று 12-03-2017  இயற்கை எய்தினார். அன்னார்  மறைவுக்கு BSNLEU மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த   அஞ்சலியை செலுத்துகிறது. அவர் மறைவால் துயறுரும் அவர் தம்  குடும்பத்தார்க்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

Thursday, March 9, 2017

கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி

இன்று மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி எழுச்சிமிகு பேரணிக்கு  .பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தலைமை வகிக்க , SNEA சங்க மாநில சங்க நிர்வாகி கோவிந்தராஜன் பேரணியை தொடக்கி வைத்தார் .AlBSNLEA மாவட்ட செயலர் பிச்சைக் கனி ,மற்றும் அதன் மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் , SNEA மாவட்ட செயலர் செந்தில் குமார் , பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சமுத்திரகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .பி எஸ் என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலர்கள் தோழர்கள் இளமாறன் , மாரிமுத்து ,மதிக்கண்ணன் , முத்துச்சாமி ,கருப்பசாமி , பொன்ராஜ் , சமுத்திரம் , கலை அரசன் என அனைவரும் பங்கேற்றனர் .மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் அனவரதம் , முருகன் , ராதாகிருஷ்ணன் , தங்கதுரை , ராஜாராம் மனோகரன் , சண்முகவேலு ,வெங்கடப் பன் ,ஜெயக்குமார் , கணேசமூர்த்தி ,சந்திரசேகரன் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் ராமச்சந்திரன் , அதன் மாநில சங்க நிர்வாகி வேலுச்சாமி தலைமையில் பெரும் அளவில் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர் .நமது BSNLEU ஊழியர்களுடன் SNEA மற்றும் AlBSNLEA அதிகாரிகள் பெரும் அளவில் பங்கேற்றனர் .பேரணி முடிவில் கலெக்டர் உயர்திரு சிவஞானம் IAS அவர்களை ஒரு நீண்ட  நேரகாத்திருப்புக்கு பின் மாலை 6.30 மணி அளவில்  மாவட்ட செயலர் ரவீந்திரன் SNEA மாவட்ட செயலர் செந்தில்குமார் மற்றும் AIBSNLEA மாவட்ட தலைவர் நாராயணனுடன் சென்று மெமோரண்டதை சமர்பித்தார் . ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர்கள் சிவஞானம் மற்றும் ஜெயப்பாண்டியன் மட்டும் பங்கேற்றனர் .எழுச்சிமிகு பேரணியில் பங்கேற்ற அனைத்து ஊழியர்கள் ,அதிகாரிகள், ஒப்பந்த மற்றும் ஓய்வூதியர்களுக்கு நெஞ்சு நிறை நன்றி 
.Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 8 people, people standing, tree and outdoor
Image may contain: one or more people, tree and outdoor
Image may contain: 5 people, people standing, people walking, crowd and outdoor
Image may contain: 1 person, standing, crowd and outdoor
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 1 person, standing, walking, crowd and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing, motorcycle, sky and outdoor
Image may contain: 3 people, people standing, tree and outdoor
Image may contain: 2 people, people standing, crowd and outdoor
Image may contain: 6 people, crowd, tree and outdoor
Image may contain: 4 people, people standing, tree and outdoor

மேளா

08/03/2017 அன்று நடைபெற்ற மேளாவில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன்  மற்றும் மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கணேசமூர்த்தி இருவரும் காரியப்பட்டியில் மேளாவில் பங்கேற்றனர் . இங்கு 83 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .ராஜபாளையத்தில் நடைபெற்ற மேளாவில் தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,வெள்ளைப்பிள்ளையார் ,ரவிச்சந்திரன் ,அனவ்ரதம் , தியாகராஜன் ,கிளை செயலர் பொன்ராஜ் ,ஓய்வூதியர் சங்க தோழர் சிவஞானம்,சுப்பையா   ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 151 சிம்களும் 1` mnp பெறப்பட்டது .சிவகாசியில் 3 தரைவழி இணைப்புகளும் ,4 பிராட் பேண்டு இணைப்புகளும் பெறப்பட்டு உள்ளன .04/03/2017 அன்று வ்.புதுப்பட்டியில்  நடைபெற்ற மேளாவில் 129 சிமகள்  விற்கப்பட்டு உள்ளது .இங்கு தோழியர்கள் பாண்டிச்செல்வி ,மேரி  ,சுந்தரம்மாள் ,கோவிந்தராஜ் தோழர்களுடன் மாவட்ட செயலர் ரவீந்திரனும் பங்கேற்றார் .
Image may contain: 1 person, outdoor
Image may contain: 1 person, outdoor

மார்ச் 8 உலக மகளிர் தினம்

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை ஒட்டி விருதுநகர் GM அலுவலக கிளையும் ,SDOP,விருதுநகர் கிளையும்  இணைந்து ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தின. .கிளை செயலர்கள் இளமாறன் மற்றும் மாரிமுத்து முன்னிலையில்  நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடப்பன் ஆகியோர் பங்கேற்று மகளிர் தின உரை நிகழ்த்தினர்.நமது பெண் தோழியர்கள் அனைவரும் பங்கேற்றது சிறப்புமிக்கது .
Image may contain: 1 person, sitting
Image may contain: 4 people
Image may contain: 7 people, people sitting
Image may contain: 4 people, people sitting
Image may contain: 9 people, people sitting
Image may contain: 4 people, people standing and people sitting

Tuesday, March 7, 2017

மார்ச்-8 சர்வதேச மகளிர் தினம்

மார்ச்- 8 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழ் மாநில BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை படிக்க :-Click Here

இரங்கல்

Image may contain: 1 person, selfie and close-up
கடந்த சனிக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில்  . சிவகாசியில் பணி புரிந்த ஒப்பந்த ஊழியர் அசோக்குமார் காலமானார் .அன்னார் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட பிஎஸ் என் எல் ஊழியர் சங்கம் அவர் தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...