Wednesday, August 17, 2016

PLI கமிட்டி கூட்டம்

தேவையற்ற தாமதத்தைத் தவிர்த்து உடனடியாக PLI கமிட்டியைக் கூட்டும்படி
(HR) இயக்குனரிடம்
BSNLEU வலியுறுத்தியதைத் தொடர்ந்து…
PLI கமிட்டி கூட்டம் 24-08-2016ல் நடைபெறும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

Thursday, August 11, 2016

ரோடு ஷோ

மாவட்டம் முழுவதும் நமது BSNLEU தோழர்கள் பெரும் எடுப்பில் ரோடு ஷோக்களில் மூன்று நாட்களாக பங்கேற்றனர் .கடந்த மூன்று நாட்களில் மட்டும் 2376   சிம்கள் விற்கப்பட்டு உள்ளன .MNP  7 ம் லேண்ட் லைன் 8,பிராட் பேண்ட் 12 WLL 1 பெறப்பட்டு உள்ளன .சிவகாசியில் 10/08/2016 அன்று நடைபெற்ற மேளாவில் நமது தோழர்கள் முருகன் மற்றும் சுப்ரமணியன் பங்கேற்றனர் .ராஜபாளையத்தில் நடைபெற்ற மேளாவில் 250 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .3 mnp பெறப்பட்டது .இங்கு நமது தோழர்கள் முத்துராமலிங்கம் ,ரவிச்சந்திரன் ,தியாகராஜன் ,அனவ்ரதம் ,ராதாகிருஷ்ணன் ,பொன்னுசாமி ,சக்தி மோகன் ,வெள்ளை பிள்ளையார் ,AIBDPA தோழர் சிவஞானம் ஆகியோர் பங்கேற்றனர் .சங்கரலிங்கபுரம் மற்றும் கன்னிசேரி புதூரில் நடைபெற்ற மேளாவில் மாவட்ட செயலர் ரவீந்திரன் ,ராஜேந்திரன் ,தங்கராஜ்  மற்றும் முத்தையா ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 162 சிம்கள் விற்கப்பட்டன .மல்லாங்கிணற்றில் இரண்டாம் நாள் மேளாவில்  தோழர் கணேசமூர்த்தி கலந்து கொண்டார் .சிவகாசியில் இரண்டாம் நாள் மேளாவில் 300 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .தோழர்கள் ராஜமாணிக்கம் ,சமுத்திரக்கனி ,முனியாண்டி ,செல்லம் ,நாகேந்திரன் ,M.கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர் .வத்ராப் பகுதியில் நமது தோழர் தங்கதுரை பங்கேற்றார் .

Wednesday, August 10, 2016

பேரணி

புன்னகையுடன் சேவை இயக்கத்தை முழுமையான வீச்சில் கொண்டுபோவதற்கு  FORUM சார்பாக மாவட்ட தலைநகரங்களில் ஒரு பேரணியை நடத்தவேண்டும் என்ற முடிவை ஒட்டி இன்று விருதுநகர் மாவட்டத்தில் ஒரு எழுச்சிமிக்க பேரணியை விருதுநகர் மாவட்ட FORUM நடத்தியது. 50 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உட்பட சுமார் 300 பேர் பேரணியில் பங்கேற்றனர். முறையாக நமது பேரணியை நமது பொது மேலாளர் உயர்திரு திருமதி S.E. ராஜம், ITS அவர்களும், ஸ்டேட் பேங்க் தலைமை மேலாளர் அவர்களும் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.


பேரணியை விளக்கி தோழர்கள் ரவீந்திரன், நாராயணன், செந்தில்குமார், பிச்சைக்கனி, குருசாமி, விக்டர் சாம்சன் ஆகியோர் பேசினர். நமது BSNL நிறுவனத்தின் சேவைகளை விளக்கி நமது சேவையை பயன்படுத்தவேண்டிய அவசியம் குறித்து பொது மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்ற விஷயம் சிறப்புமிக்கது. சேவைகளை பற்றி தோழர்கள் மதிக்கண்ணன்,இளமாறன் மற்றும் முத்துசாமி ஆகியோர் விரிவாக பேரணியில் பேசிய வண்ணம் வந்தனர். பேரணியை தலைமை தாங்கி FORUM பொறுப்பாளர்கள் BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன், SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார்,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி, மற்றும் அதன் தலைவர் தோழர் நாராயணன், சேவா அமைப்பின் மாவட்ட செயலர் தோழர் பரமேஸ்வரன், அதன் துணை செயலர் தோழர் கேசவன், அதன் முன்னாள் RJCM  உறுப்பினர் தோழர் குருசாமி, AIBSLOA மாநில சங்க நிர்வாகி கனகவேல், BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி, AIGETOA மாநில  சங்க நிர்வாகி விக்டர் சாம்சன் ஆகியோர் வழி நடத்தினர்.

















BSNLEU சங்கத்தின் அனைத்து கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகளில் ஒருவரை தவிர அனைவரும் பங்கேற்றனர். ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன், மாவட்ட தலைவர் இளமாறன், மாவட்ட உதவி தலைவர் தோழர் முனியசாமி, மாநில சங்க நிர்வாகி வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர். 4 கோட்ட பொறியாளர்களில் சிவகாசி தவிர்த்து அனைவரும் கலந்து கொண்டது சிறப்புமிக்கது. AIBDPA சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி, மாநில பொறுப்பாளர் பெருமாள்சாமி, முருகேசன், முத்தையா ஆகியோர் தலைமையில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். தேசபந்து மைதானத்தில் முடிவடைந்த பேரணியில் பொது மக்கள் இடையே தோழர்கள்  மதிகண்ணன், ரவீந்திரன், செந்தில்குமார், பிச்சைக்கனி ஆகியோர் பேசினர். BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் நன்றியுரை கூறி பேரணி கூட்டத்தை நிறைவு செய்தார். மாவட்டத்தின் நிகழ்வுகளில் ஒரு புதிய அத்தியாயம் படைத்த அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள், FORUM அமைப்பின் தலைவர்கள் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி .

Tuesday, August 9, 2016

JAO போட்டி தேர்வு முடிவு

JAO போட்டி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன .கீழ்கண்ட தோழர்கள் வெற்றி பெற்று உள்ளதற்கு BSNLEU மாவட்ட சங்கம் தன வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
1.தோழர் பேச்சிமுத்து ,  JE
2.தோழர் அஷ்ரப் அலி .JE
3.தோழர் துரைமுருகன் ,JE
4.தோழர் ஜேசுராஜா , JE
5.தோழியர் கலைமணி JE,

ரோடு ஷோ

08/08/2016 முதல் 10/08/2016 வரை ரோடு ஷோ நடத்துவது என்ற விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முடிவை ஒட்டி மாவட்டம் முழுவதும் நமது ஊழியர்கள் ரோடு ஷோக்களில் பங்கேற்றனர் .மாவட்ட செயலர் எரிச்சநத்தம் ,நத்தம்பட்டி பகுதியிலும் ,GM அலுவலக கிளை செயலர் இளமாறன் ,SDOP விருதுநகர் கிளை செயலர் மாரிமுத்து அவர்கள் மல்லாங்கிணற்றில் பங்கேற்றனர் .மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் RR நகரிலும் ,ராஜபாளையம் கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் மம்சாபுரத்திலும் ,ராஜபாளையம்  கிளை தலைவர் தோழர் தியாகராஜன் ,வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுசாமி ,ரவிச்சந்திரன் ஆகியோர் சம்மநதாபுரத்திலும் கலந்து கொண்டனர் .சேல்ஸ் பகுதியில் பணி புரியும் நமது தோழர்கள் தங்கராஜ் ,ராதாகிருஷ்ணன் ,சுப்பையா ,நென்மேனி நமது தோழர் அண்ணாசாமி ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கணேசமூர்த்தி ஆவியூரிலும் பங்கேற்றனர் .
எரிச்சநத்தம் --------46
நத்தம்பட்டி ----------96
மல்லாங்கிணர் ---123+ 3 MNP 
ராஜபாளையம் --- 100 + 3 MNP 
மம்சாபுரம் ---------  30
RR நகர் ---------------- 25
அப்பயநாயகன் பட்டி --- 50\
ஆவியூர் ------------------------12
அருப்புக்கோட்டை --------10

எழுச்சியுடன் நடைபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் 08/08/2016 அன்று தோழர் வெங்கடசாமி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது ஆய்படு பொருளான செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் ,அகில இந்தியமாநாட்டு நிதி , ஆகஸ்ட் 10 ஆம் தேதி FORUM சார்பாக நடைபெற உள்ள பேரணி ,31ஆம் தேதி நடைபெற உள்ள விரிவடைந்த செயற்குழு மற்றும் தோழியர் பகவதி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மீது அனைத்து தோழர்களும் பங்கேற்ற விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 வேலை நிறுத்ததை வெற்றி அடைய செய்ய வேண்டிய அவசியம் குறித்து மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஜெயக்குமார் ,அஷ்ரப் தீன் ,தங்கதுரை ஆகியோர் பேசினர் .அகில இந்திய மாநாட்டு நிதியாக முதல் தவணை ரூபாய் 12,500 இக் கூட்டடத்தில் வழங்கப்பட்டது .செப்டம்பர் 2  போராட்டத்தை 100% வெற்றி அடைய செய்வோம் என்று கூறி  கிளை பொருளர் தோழர் சுந்தரமஹாலிங்கம் நன்றியுரை கூறினார் .

Saturday, August 6, 2016

அகில இந்திய மாநாட்டு நிதி

மாவட்ட செயற்குழுவின் முடிவின் படி அகில இந்திய மாநாட்டு நிதி வசூல் இயக்கம் முறையாக 01/08/2016 முதல் தொடங்கியது .மாவட்ட மாநாட்டின் போது விருதுநகர் மாவட்ட சங்கம் சார்பாக ரூபாய் 1,80,000/- வழங்கப்பட்டு விட்டது இலக்கான ரூபாய் 3,00,000 இல் மீதம் 1,20,000/- ரூபாயை திரட்டும் நிகழ்ச்சியை அனைத்து கிளைக்களும் முறையாக தொடங்கியுள்ளது பாராட்டத்தக்கது .தற்போது நிதி வழங்கிய தோழர்களின் பட்டியல் பின்வருமாறு :
1.P .லக்ஷ்மணன் ,TT /VGR----------------3000
2.S.வெங்கடப்பன் TT /VGR---------------3000
3.C .சந்திரசேகரன் TT /VGR--------------3000
4.மலைச்சாமி ,TT /VGR--------------------2000
5.S .ரவீந்திரன் ,OFF .supdt /VGR----------2000
6.A .மாரிமுத்து ,TT /VGR------------------2000
7.M .S.இளமாறன் ,ஆபீஸ் .அஸோ.2000 
8.R .ஜெயக்குமார் ,JE/VGR--------------- 2000
9.A.முனியசாமி ,Off .assis/VGR---------2000
10..K .S.சீனிக்கண்ணு ,TT /VGR--------2000
11.R.சுசிலா ,OFF .supdt /VGR-------------1000
12.K.சிங்காரவேலு ,TT /VGR-----------1000 
13.P.வசந்தா ,OFF .supdt /VGR-------------500
14.கிருபா ஜோய்ஸ் ,JE//VGR------------500
15.M.சதீஷ்குமார் ,Off .assis/VGR------ --200
16.ராஜாமணி ,Off .assis/VGR--------------200
17.M.முத்துலட்சுமி ,Off .assis/VGR-----200
18.T.பாண்டியம்மாள் ,Off .assis/VGR--200
19.G.முத்துலட்சுமி ,Off .assis/VGR------200
20..V.லக்ஷ்மணன் ,TT /VGR--------------700
21.A.மாரியப்பா ,TT /VGR------------------1000
22.T.தங்கபாண்டியம்மாள் ,Off .assi----200
23.P.மாரியம்மாள் ,Off .assis/VGR----- ---200
24.P.சுந்தரம்மாள் ,Off .assis/VGR----------200
25.D.மேரி ,Off .assis/VGR----------------------200
26.பெரியநாயகி ,Off .assis/VGR------------200
27.G.அஷ்ரப் அலி ,JE/VGR----------------- 500

                            பட்டியல் தொடரும் ...................................
                                    

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...