Friday, March 8, 2019

உலகமகளிர் தின சிறப்பு கூட்டம்

முதன்மை பொதுமேலாளர் அலுவலக கிளை மற்றும் ஒப்பந்த ஊழியர் விருதுநகர் கிளை சங்கம் சார்பாக  உலகமகளிர் தின சிறப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .நடைபெற்ற கூட்டத்திற்கு GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் விருதுநகர் OD கிளை செயலர் தோழர் மாரிமுத்து தலைமை தாங்கினர் .மாவட்ட செயலர் ரவீந்திரன் தனது உரையில் ஆதிகால பொதுவுடமை சமுதாயத்தில் பெண்கள் வகித்த முன்னணி பங்கு ,மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பெண்களின் போராட்டம் ,தற்போது BSNL ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை விரிவாக பேசி நம்முன் இருக்கின்ற ஜனநாயக கடமையை உரிய முறையில் பொதுத்துறைகளை காக்க கூடிய இயக்கங்களுக்கு  ஆதரிக்க செய்வது தான் இந்த மகளிர் தின சபதமாக  கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார் .தோழர்கள் மாரிமுத்து மற்றும் இளமாறன் அவர்கள் வாழ்த்தி பேசினார்கள் .
Image may contain: 4 people, people sitting
Image may contain: 7 people, including Chandrasekar Selvi, people smiling, people sitting
Image may contain: 11 people, people smiling, people sitting
Image may contain: 8 people, people sitting
Image may contain: 5 people
Image may contain: 7 people, people sitting
Image may contain: 1 person, standing
Image may contain: 3 people, people sitting and people eating

CMD அவர்களுடன் பேச்சுவார்த்தை

AUAB தலைவர்கள் நமது CMD அவர்களுடன் நேற்று மாலை பிப்ரவரி  மாத சம்பளம் அணைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பட்டுவாடா செய்யாமல் இருப்பது விசயமாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை  எடுப்பது  விஷயமாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர் .அப்போது நமது CMD அவர்கள் பிப்ரவரி  மாதம் வரை அனைவர்க்கும் GPF ,EPF ,பேங்க் லோன் ,LIC மற்றும்   இதர பிடித்தங்கள் முறையாக செலுத்தப்பட்டு விட்டது என்றும் அதனால் சம்பளம் போடுவதற்கு நிதி இல்லை என்றும் ,தற்போது சம்பளம் வழங்க ரூபாய் 700 கோடி ஆகும்  என்றும் ,தற்போது ஒரு நாளைக்கு 70 கோடி வீதம் வருமானம் வருவதாகவும் ,அந்த வருமானத்தில் வைத்து தான் சம்பளம் வழங்க வேண்டியது உள்ளதால் 700 கோடி வந்தவுடன் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளித்தார் .மேலும் நமது BSNL நிறுவனம் வங்கிகளில் இருந்து கடன் வாங்குவதற்கு DOT ஒப்புதல் தரவில்லை என கூறினார் .அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி DOT உத்தரவிட்டும் இதுவரை எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினார் .இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் AUAB சார்பாக துவங்க இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது .

உலக மகளிர் தின வாழ்த்துக்கள்

Image may contain: text
Image may contain: one or more people and text

Sunday, March 3, 2019

நன்றி

தோழர் சமுத்திரம் அவர்கள் இல்ல திருமண விழாவை ஒட்டி ,அந்த தோழர் 02/03/2019  நடைபெற்ற மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவு செலவை ஏற்று கொண்டார் , தோழர் சமுத்திரம் அவர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது .

Saturday, March 2, 2019

5வது மாவட்ட செயற்குழு

விருதுநகர் BSNLEU சங்கத்தின் 5வது மாவட்ட செயற்குழு ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக சிறப்பாக நடைபெற்றது .செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் R ,ஜெயக்குமார் தலைமை  வகித்தார் .மாவட்ட உதவி செயலர் தோழர்  வெள்ளைப்பிள்ளையார் தியாகிகளுக்கு அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் தலைவர் விவாதக்குறிப்புக்கு ஒப்புதல் கேட்க ,விவாத குறிப்பு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது .முறையாக மாவட்ட செயற்குழுவை மாநில அமைப்பு செயலர் தோழர் A .சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் ,அதன் பின் விவாத குறிப்பை விளக்கி மாவட்ட செயலர் பேசினார் ,நடந்து முடிந்த ஜனவரி 8,9 போராட்டம் மற்றும் 18 முதல் 20 வரை நடைபெற்ற மூன்று நாட்கள் வேலை நிறுத்தங்களில் நமது கிளைகளில் ஏற்பட்ட பலம் மற்றும்  பலவீனங்களை எடுத்துரைத்தார் .வர இருக்கும் காலங்களில் சரி செய்யப்பட வேண்டிய விசயங்களை அவர் சுட்டி காட்டினார் .ஒட்டு மொத்தமாக பார்த்தால் 3 நாள் வேலை நிறுத்தத்தில் அதிக ஊழியர்கள் பங்கேற்க வைப்பதில் முனைப்பு காட்டிய அத்துணை தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் நன்றியை தெரிவித்தது .மாநில சங்க நிதியாக அனைத்து உறுப்பினர்களிடம் தலா 200 வீதம் நன்கொடை பெற்று அனுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு மாவட்ட செயற்குழு கேட்டு கொண்டது ,மாறுதல் கொள்கையில்  நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை மாவட்ட செயற்குழுவில் விரிவாக விவாதம் செய்யப்பட்டது ,மாவட்டத்தில் உள்ள அனைத்து மாறுதல்களையும் ஒட்டு மொத்தமாக அமல்படுத்தி பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்க மாவட்ட செயற்குழு முடிவு எடுத்தது .நமது தோழமை சங்கத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இந்த அம்சங்களை கணக்கில் எடுத்து பேச மாவட்ட செயற்குழு ஒப்புதல் கொடுத்தது .தோழமை சங்கத்துடன் பேசி அடுத்த கட்டமாக கிளை செயலர் கூட்டத்தில் இறுதி முடிவை நமது சங்கம் எடுக்கும் ,முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் ஒரு நல சங்கம் அறிவிப்பு பலகையில் தொடர்ந்து தரக்குறைவாக எழுதப்படுவது வாடிக்கையாகிவிட்டது .மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை பேசியும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் அனுஷ்டிக்கிறது .இந்த மௌனத்தை கலைக்க ஒரு நீண்ட நெடிய போராட்ட திட்டத்தை மாவட்ட செயற்குழு ஏகமனதாக எடுத்துள்ளது .
1.முதன்மை பொது மேலாளர் மற்றும் தலைமை பொது மேலாளர் அவர்களுக்கு அனைத்து ஊழியர்களும் அஞ்சல் அட்டை அனுப்புவது .(POST CARD CAMPAIGN).
2.முதன்மை பொது மேலாளரை சந்திப்பது .
3.ஒரு நடவடிக்கையும் இல்லை என்றால் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாத போக்கை கண்டித்து  காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துவது .
4. மாநில சங்கம் மூலமாக தலைமை பொது மேலாளரை சந்திப்பது .
Image may contain: one or more people and people sitting
Image may contain: 1 person, sitting
Image may contain: one or more people, people sitting, outdoor and indoor
Image may contain: 5 people, people sitting
Image may contain: 2 people, people sitting, table and indoor
மார்ச்சில் பணி ஓய்வு பெற இருந்தாலும் நான் போராட்டத்தில் பின்வாங்கமாட்டேன் என்று சொல்லி 3 நாட்கள் போராட்டத்தில் முத்திரை பதித்த தோழன் மாயக்கிருஷ்ணன் ,TT அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெரவித்தார் மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி 
Image may contain: 3 people, people smiling, people standing
மாவட்ட சங்கம் சார்பாக நினைவு பரிசு வழங்கிய தோழர் தங்கதுரை மற்றும் கிளை செயலர் வெங்கடசாமி 
Image may contain: 4 people, people sitting
Image may contain: one or more people and indoor
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  புதிய மாவட்ட செயலராக தேர்ந்து எடுக்கப்பட்ட தோழர் B.ராஜா ,சாத்தூர் 
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 3 people, people sitting and people standing
Image may contain: 3 people, people smiling, people sitting and people standing
Image may contain: 2 people, people sitting and people standing
Image may contain: 4 people, people sitting and people standing
Image may contain: 3 people, people sitting and table
Image may contain: 3 people, people smiling, people sitting and table
Image may contain: 2 people, people sitting, table and outdoor
Image may contain: 2 people, people sitting and people standing
Image may contain: 2 people, people sitting
Image may contain: 1 person, standing and sitting
Image may contain: 1 person, smiling, sitting and table
Image may contain: 3 people, people sitting, people standing, table and indoor
Image may contain: 3 people, people sitting, people standing and table
Image may contain: 1 person, sitting and standing
Image may contain: 4 people, people smiling, people sitting and table
Image may contain: 1 person, sitting, standing, table and indoor
Image may contain: 2 people, people smiling, people sitting and indoor
Image may contain: 2 people, people sitting, people standing, table and indoor
Image may contain: 2 people, people sitting, people standing and outdoor
Image may contain: 1 person, sitting
Image may contain: 4 people, people sitting and people standing
Image may contain: 4 people, people sitting
Image may contain: 1 person, sitting, standing, tree, outdoor and nature

Friday, March 1, 2019

மாவட்ட செயற்குழு கூட்டம்

நமது BSNLEU மாவட்ட செயற்குழு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மைக்ரோ வேவ் நிலையத்தில் 02/03/2019 அன்று காலை 10 மணிக்கு   நமது மாவட்ட தலைவர் தோழர் R ,ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது ,நமது மாநில அமைப்பு செயலர் தோழர் A .சமுத்திரக்கனி அவர்கள் மாவட்ட செயற்குழுவை   தொடக்கி வைப்பார் .
ஆய்படு பொருள் :
1.18,19,20 தேதிகளில் நடைபெற்ற 3 நாள் வேலை நிறுத்தம் -ஒரு ஆய்வு 
2. மாநில சங்க நிதி 
3. மாறுதல்கள் 
4.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 

ஆர்ப்பாட்டம்

BSNL ஊழியர்கள் , அதிகாரிகள் அனைவருக்கும் பிப்ரவரி மாத சம்பளம் பட்டுவாடா செய்யாமல் இருப்பதை கண்டித்து இன்று அனைத்து கிளைகளிலும் AUAB சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
சிவகாசி 
Image may contain: 2 people, people standing
Image may contain: 2 people, people standing
Image may contain: 7 people, people standing
சாத்தூர் 
Image may contain: 10 people, people smiling, people standing and outdoor
Image may contain: 1 person, standing
விருதுநகர் 
Image may contain: 6 people, people standing and outdoor
Image may contain: 7 people, people standing, crowd and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: 3 people, people smiling, people standing
ராஜபாளையம் 

Image may contain: 2 people, people smiling
Image may contain: 7 people, people smiling, people standing and outdoor
Image may contain: 7 people, people smiling, outdoor

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...