Monday, November 5, 2018
ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் வகையில் தலையிட CMD BSNLஇடம் வேண்டுகோள்:.
02.11.2018 அன்று DOT செயலாளரிடம் பேச்சு வார்த்தை முடிந்த பின் BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் NFTE பொது செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங் ஆகியோர், BSNL CMD அவர்களை சந்தித்தனர். நிர்வாக தரப்பில் வீட்டு வாடகைப்படி மாற்றத்தை வழங்க விரும்பாத காரணத்தால் ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பிரச்சனையில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதை அவரிடம் தெரிவித்தனர். 31.12.2016ல் இருந்ததை போன்று வீட்டு வாடகைப்படியை முடக்கும் நிர்வாகத்தின் முன்மொழிவை ஊழியர் தரப்பில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் தலைவர்கள் CMDஇடம் சுட்டிக் காட்டினார்கள். கால தாமதமின்றி ஊதிய மாற்ற உடன்பாட்டில் கையெழுத்திடும் வகையில், BSNL CMD தலையிட்டு, நிர்வாக தரப்பு உறுப்பினர்களுக்கு பொருத்தமான வழிகாட்டுதல்களை தரவேண்டும் என இரண்டு பொது செயலாளர்களும் அவரைக் கேட்டுக் கொண்டனர். ஊழியர் தரப்பின் கோரிக்கைகளை கவனித்த BSNL CMD, இதில் ஆவன செய்வதாக தெரிவித்தார்.
DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு மற்றும் AUABயின் அமைப்பு நிலை தொடர்பான முடிவுகள்
DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு மற்றும் AUABயின் அமைப்பு நிலை தொடர்பான முடிவுகள் மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here
Friday, November 2, 2018
Com.Irfan Pasha, Assistant Circle Secretary, BSNLEU, Karnataka circle, donated one month's take home salary.
Com.Irfan Pasha, Assistant Circle Secretary, BSNLEU, Karnataka circle, has donated Rs.40,000/-, which is his one month's take home salary, as his contribution for the 9th All India Conference of BSNLEU, to be held at Mysuru, from 17th to 20th December, 2018. The cheque for Rs.40,000/- was handed over to Com.J.V.Keshav, Treasurer of the 9th AIC Reception Committee today, in the presence of Com.C.K.Gundanna, circle secretary, Karnataka. CHQ heartily congratulates Com.Irfan Pasha, and hope that his generous contribution will set a good example for other comrades also to follow.
DOT செயலாளர், 02.11.2018 மாலை 05.00 மணிக்கு AUAB தலைவர்களை சந்திக்கிறார்.
DOTயின் செயலாளர் திருமிகு அருணா சுந்தரராஜன் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு 02.11.2018 இன்று மாலை 05.00 மணிக்கு நடைபெறும் என BSNL கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்துள்ளது. AUAB விடுத்துள்ள போராட்ட அறைகூவல்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2018, நவம்பர் 30ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை எனில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குவது என்கிற முடிவை DOTயின் செயலாளருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.DOTயின் செயலாளருக்கும் AUAB தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடப்பது என்பது உண்மையில் நல்லதொரு முன்னேற்றம் தான். ஆனால் 02.11.2018 அன்று நடைபெறக் கூடிய கூட்டத்திலேயே நமது அனைத்து கோரிக்கைகளும் தீர்த்து வைக்கப்படும் என நமது தோழர்கள் கருதி விடக்கூடாது. மத்திய அமைச்சர் கொடுத்த உறுதிமொழியின் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் எட்டு மாத காலம் DOT இருந்தது என்பதுதானே நமது கடந்த கால அனுபவம். எனவே 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், வாங்கும் உண்மை சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீடு மற்றும் நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள் தொடர்பான 2வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை ஒட்டு மொத்தமாக அமலாக்குவது ஆகிய நமது கோரிக்கைகளை வென்றடைவதற்கான வேலை நிறுத்த போராட்டங்களுக்கு ஊழியர்களை தயார் படுத்தும் பணியில் தங்கு தடை ஏதும் இன்றி தொடர்ந்து ஈடுபடுவோம். ஒன்று பட்ட உறுதியான போராட்டங்களே நமது கோரிக்கைகளை வென்றடையச் செய்யும்.
37வது தேசிய கவுன்சில்
37வது தேசிய கவுன்சில் நடைபெற வேண்டிய கால அவகாசம் தாண்டி வெகு நாட்கள் ஆகி உள்ளதை சுட்டிக்காட்டி மனித வள இயக்குனருக்கு நமது மத்திய சங்கம் தனது அதிருப்தியை தெரிவித்து கடிதம் எழுதியது. 01.11.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தின் மனித வள பிரிவு BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களிடம் 20.11.2018 அன்று அந்தக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
Tuesday, October 30, 2018
பத்திரிகையாளர் சந்திப்பு
AUAB முடிவின்படி இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நமது விருதுநகர் மாவட்ட BSNLEU அலுவலகத்தில் நடைபெற்றது .இதில் BSNLEU மாவட்ட செயலர் ரவீந்திரன் , SNEA மாவட்ட செயலர் செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ,AIGETOA மாநில நிர்வாகி தோழர் சாம்சன் ,TEPU மாவட்ட செயலர் தோழர் சரவணன் ,BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஜெயக்குமார்,சந்திரசேகரன்,மாரியப்பா ,பாஸ்கரன் ,கிருஷ்ணகுமார் உட்பட பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் பங்கேற்றனர் . 16 இக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள், தனியார் சேனல்கள் இந்த பேட்டியில் பங்கேற்றனர் .இதே போல் சிவகாசியிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது .





Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...