Friday, October 13, 2017
Thursday, October 12, 2017
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,விருதுநகர்
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,விருதுநகர் மாவட்ட கூட்டம் 9 ஆம் தேதி NFTE அலுவலகத்தில் அதன் மாவட்ட செயலர் தோழர் ராமசேகர் தலைமையில் நடைபெற்றது .இக் கூட்டத்தில் BSNLEU சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் மாரியப்பா ஆகியோரும் சேவா BSNL சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகி சகோதரர் பிரேம்குமார் மற்றும் தோழர் ராமநாதன் அவர்களும் ,SNEA சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் அவர்களும் ,AIBSNLEA சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் மற்றும் அதன் மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ஆகியோரும் ,AIGETOA சங்கம் சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் விக்டர் சாம்சன் அவர்களும் ,TEPU சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் சரவணன் ஆகியோரும் பங்கேற்றனர் .வர இருக்க கூடிய போராட்டங்களை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்க முடிவு செய்யப்பட்டது .ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,விருதுநகர் மாவட்ட அமைப்புக்கு தோழர் ராம் சேகர் தலைவராகவும் ,தோழர் ரவீந்திரன் கன்வீ னராகவும் ,தோழர் செந்திகுமார் அவர்கள் பொருளாளராகவும் இருக்க முடிவு செய்யப்பட்டது .இணை கன்வீனர்களாக தோழர்கள் பிரேம்குமார் மற்றும் பிச்சைக்கனி ஆகியோர் செயல்படுவார்கள் .இணை தலைவர்களாக தோழர்கள் நாராயணன் மற்றும் விக்டர் சாம்சன் ஆகியோர் செயல்படுவர் .துணை .பொருளாராக தோழர் சரவணன் செயல்படுவார் .போராட்ட நிதியாக BSNLEU சார்பாக 1200 ,NFTE,AIBSNLEA,SEWA BSNL, AIGETOA சங்கங்கள் சார்பாக தலா 1000 ரூபாய் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது .TEPU சார்பாக ரூபாய் 200 கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது .
1)16/10/2017 அன்று மாவட்டம் முழுவதும் ஊழியர்களை திரட்டி GM அலுவலகம் முன்பாக காலை 1030 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது .
2) மக்களவை உறுப்பினரை சந்திக்க ஏற்பாடு செய்ய AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி முயற்சி செய்வது
3) 16/11/2017 அன்று மனித சங்கிலி இயக்கத்தை மதுரை ரோட்டில் நடத்துவது ,அதற்குரிய போலீஸ் பெர்மிசன் பெறுவது
4) டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 2 நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க மாவட்டம் முழுவதும் இணைந்து சுற்றுப்பயணம் செய்வது .என்று முடிவுகள் எடுக்கப்பட்டன .




எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் நடைபெற்ற ராஜபாளையம் கிளை மாநாடு
அக்டோபர் 7 ஆம் தேதி ராஜபாளையம் கிளை மாநாடு மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் அதன் தலைவர் தோழர் R .தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது .எழுச்சி மிகு கோஷங்களுடன் நமது சங்க கொடியை தோழர் ரவிச்சந்திரன் ஏற்றி வைத்தார் .TNTCWU சங்க கொடியை அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ஏற்றி வைத்தார் .தியாகிகளுக்கு அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட சங்க நிர்வாகி தோழர் அனவ்ரதம் வாசிக்க அனைவரும் தியாகிகளுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர் அதன் பின் முறையாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் கிளை மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் ..வர இருக்கும் போராட்டங்கள் ,மதுரையில் நடைபெற உள்ள நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் திரளாக பங்கேறக் வேண்டிய அவசியத்தை கூறினார் .தோழர் பொன்ராஜ் ,கிளை செயலர் முன் வைத்த ஆண்டறிக்கை மீது விவாதம் நடைபெற்று ஒப்புதல் பெறப்பட்டது .இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர் முத்துச்சாமி மற்றும் தோழர் வெள்ளை பிள்ளையார் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,SNEA கிளை செயலர் தோழர் தங்கவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி சிறப்புரை நிகழ்த்தினார் .பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . ஒட்டு மொத்தத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் எஃகு கோட்டை விருதுநகர் மாவட்டம் என்பதை பறைசாற்றியது ராஜபாளையம் கிளை மாநாடு.புதிய நிர்வாகிகளாக தோழர்கள் தியாகராஜன் ,பொன்ராஜ் ,ரவிச்சந்திரன் ஆகியோர் முறையே தலைவர் செயலர் பொருளாராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .

.

















Saturday, September 23, 2017
7வது மாவட்ட செயற்குழு
இன்று விருதுநகரில் 7வது மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக எழுச்சியுடனும் ,உற்சாகத்துடனும் நடைபெற்றது .மூத்த தோழர் A ,கண்ணன் ,மாவட்ட உதவிசெயலர் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் தீர்மானம் வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் மறைத்த தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்த ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆய் படு பொருள் மீது விரிவான கருத்தை பதிவு செய்தார் .தனது உரையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியை சுட்டி காட்டினார் .நமது அணியை விட்டு ஜெபக்குமார் ,BSNL காங்கிரஸ் தலைவர் என்று சொல்லும் தளவாய் பாண்டியன் ,தந்தி பிரிவை சேர்ந்த தோழர்கள் எங்கள் பக்கம் என்று சொல்லி 6 வது சரிபார்ப்பு தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று மார் தட்டியவர்களை வெற்றி கண்டு 300 பொட்டலம் பிரியாணியை வேஸ்ட் செய்ய வைத்தோம் .இன்று அதே பாணியில் அவர்கள் நாம் உதிர்த்து விட்ட காய்ந்த சருகுகளை அள்ளி வைத்து எக்காளம் இடுகிறார்கள் .சென்னை RGB தேர்தலில் வீடுவீடாக கை கடிகாரம் கொடுத்தும் கையொடிந்து போன கதையை சொல்லியும் , .எத்தனை சரிபார்ப்பு தேர்தல் வந்தாலும் நமது BSNLEU சங்கத்தை தோற்கடிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்பதை மாவட்ட செயலர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார் .இந்த செயற்குழுவில் புதிய மாவட்ட உதவி செயலராக தோழர் A.கண்ணன் அவர்களும் ,புதிய மாவட்ட அமைப்பு செயலராக தோழர் கலையரசன் அவர்களும் ,மற்றொரு புதிய மாவட்ட உதவி செயலராக தோழர் K .சமுத்திரம் அவர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .அதே போல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ,செயல் இழந்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் மாவட்டம் தழுவிய ஒரு எழுச்சி மிகு போராட்டத்தை நடத்த மாவட்ட செயற்குழு முடிவு எடுத்துள்ளது .அக்டோபர் 21ஆம் தேதி நடை பெற உள்ள நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கத்திற்கு அதிக ஊழியர்களை திரட்டுவது . .நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தர்ணாவுக்கு போதுமான ஊழியர்களை திரட்டுவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன .சிறப்புரை நிகழ்த்திய நமது தமிழ் மாநில செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் ஊதிய மாற்றம் ,துணை டவர் நிறுவனம் ,வர இருக்கின்ற போராட்டங்கள் ஈரோடு மாவட்ட ஒப்பந்த ஊழியர் பிரச்சனை ஆகியவற்றை பற்றி விரிவாக பேசினார் .மணிலா அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஸ்தல மட்ட பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினார் .மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் அருமையாக ஒருங்கிணைத்து தனது பணியை சிறப்பாக செய்தார் .மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் நன்றி நவின்றார் .








Friday, September 22, 2017
7 வது மாவட்ட செயற்குழு
அன்பார்ந்த தோழர்களே !
வருகின்ற 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் 7 வது மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது .நமது தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட செயற்குழுவை தொடக்கி வைத்து உரை நிகழ்த்த உள்ளார் .
ஆய் படு பொருள் :
1.அமைப்பு நிலை
2.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற
Saturday, September 16, 2017
துணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
துணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்


விருதுநகர்


Friday, September 15, 2017
நன்றி நன்றி
மாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டுக்கு நிதி வேண்டும் என்று அவர்களால் கோரப்பட்ட போது மாவட்டம் முழுவதும் மாவட்ட சங்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதற்கான நிதியை வசூல் செய்தது .கிளை வாரியாக இதுவரை வந்த நிதி .
1.விருதுநகர் = Rs.18,650
2.சிவகாசி =Rs 17,600
3.அருப்புக்கோட்டை =Rs 5,600
4.ஸ்ரீவில்லிபுத்தூர் =Rs 5,100
5.சாத்தூர் =Rs 400
6.ராஜபாளையம் = Rs .9,900
-----------------------
57,250
________________
அள்ளி தந்த அனைத்து உள்ளங்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி .நிதி வசூலில் மாவட்ட சங்கத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள் .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...













