Friday, April 28, 2017

பணி ஓய்வு பெறுபவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் பாராட்டு

30/04/2017 அன்று பணி ஓய்வு பெறுபவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் பாராட்டு விழா நேற்று தளவாய்புரம் மற்றும் சிவகாசியில் நடைபெற்றது .சொக்கநாதன்புதூர் டெலிகாம் டெக்னீசியன் தோழர் சோமசுந்தரத்திற்கு பார்த்து விழா ராஜபாளையம் கிளை தலைவர் தோழர் தியாகராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் பொன்ராஜ் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் முருகன் ,ராதாகிருஷ்ணன் ,அனவ்ரதம் ஆகியோர் பாராட்டி பேசினர் .தோழர் சோமசுந்தரம் அவர்களின் வேலை திறன் ,மற்றும் நமது சங்க கொள்கைகள் மற்றும் நமது போராட்ட தன்மை கண்டு நமது சங்கத்தில்  கடந்த ஆண்டு இணைந்தது மட்டும் இன்றி நமது AIBDPA சங்கத்திலும் இணைந்ததை பாராட்டி மாவட்ட செயலர் பேசினார் .ராஜபாளையம் கிளை தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர் .AIBDPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் தோழர் சிவஞானம் ஆகியோரும் பங்கேற்றனர் 
Image may contain: 6 people, people sitting and people standing
Image may contain: 6 people, people standing and people sitting
Image may contain: 7 people, people sitting and people standing
Image may contain: 8 people, people sitting
Image may contain: 7 people, people sitting, people standing and outdoor
Image may contain: 5 people, people sitting and people standing
Image may contain: 3 people, people sitting and people standing
Image may contain: 3 people, people sitting and people standing
Image may contain: 5 people, people smiling, people standing, people sitting and indoor
அன்று மாலை 4 மணிக்கு சிவகாசியில் தோழர் வைரவசாமி அவர்களுக்கு நடைபெற்ற பார்த்து விழாவில் சிவகாசியில் பல் தோழர்கள்  பங்கேற்றனர் .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ராஜமாணிக்கம் ,தோழர் ராஜு ,முன்னாள் மாவட்ட சங்கநிர்வாகி முனீஸ்வரன் ,AIBDPA  மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ஜெயபாண்டியன் ,கிளை செயலர் தோழர் கருப்பசாமி ,கிளை பொருளர் தோழர் இன்பராஜ் உட்பட பலர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் தோழர் வைரவசாமியை பாராட்டி கௌரவித்தார் .
Image may contain: 6 people, people standing
Image may contain: 3 people, people standing
Image may contain: 6 people, people standing and people sitting
Image may contain: 6 people, people standing

மெகா மேளா

26/04/2017 அன்று நடைபெற்ற மெகா மேளாவில் நமது சங்க பங்களிப்பு 
வத்றாப்பில் மாவட்ட செயலர் மற்றும் நமது தோழர் கோவிந்தராஜ் பங்கேற்ற ரோடு ஷோ .இங்கு 129 சிம்கள் விற்கப்பட்டன
Image may contain: 2 people
மல்லாங்கிணற்றில் நடைபெற்ற ரோடு ஷோவில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி மற்றும் தோழர் ராஜேந்திரன் . இங்கு 72 சிம்கள் விற்க்கப்பட்டன
Image may contain: 5 people, people standing and outdoor
27/04/2017 அன்று கல்குறிச்சியில் நடைபெற்ற  ரோடு ஷோவில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி . இங்கு 86 சிம்கள் விற்க்கப்பட்டன
Image may contain: 4 people, people standing and outdoor
சிவகாசியில் நமது தோழர்கள் 192 சிம்கள் விற்பனை செய்து  4 தரைவழி இணைப்புகளையும்  பெற்றுள்ளனர் .ராஜபாளையம் தோழர்கள் 206 சிம்களை விற்று சாதனை செய்துள்ளனர் .இங்கு கிளை செயலர் பொன்ராஜ் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் ,கிளை தலைவர் தியாகராஜன் ,வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுச்சாமி மற்றும் சுப்பையா ஆகியோர் பங்கேற்றனர் .அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் .
விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுநகர் மாவட்டத்தில் மாநில சங்க அறைகூவலின்படி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 
Image may contain: 12 people, people standing and outdoor
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: 9 people, people standing and outdoor
Image may contain: 3 people, people standing, crowd and outdoor
Image may contain: 3 people, people standing and outdoor

Thursday, April 20, 2017

சிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம்

TNTCWU தமிழ் மாநில சங்க செயற்குழு முடிவின்படி 15/04/2017 அன்று நடைபெறவேண்டிய கிளை கூட்டம் கேபிள் பழுது களைய இரவு முழுவதும் வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருந்ததால் 19/04/2017 அன்று  சிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் அதன் தலைவர் தோழர் செல்லம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் ராமர் ஆய்படு பொருளை சமர்ப்பித்து உரை நிகழ்தினார் .அதன் பின் BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் ராமசந்திரன் , BSNLEU மாவட்ட செயலர் தோழர்  ரவீந்திரன் ஆகியோர் புதிய சம்பள மாற்றத்திற்கான நமது இயங்கங்கள் ,ஒப்பந்த ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்புக்கான நமது முன்னேற்றங்கள் ,மறைந்த  தோழர் அசோக்குமார் குடுமப நிவாரண நிதியை வரும் 29/05/2017 அன்று நடைபெற உள்ள GM  அலுவலக கிளை மற்றும் SDOP கிளைகளின் கூட்டு மாநாட்டு  அன்று வழங்கவதுற்கு தேவையான ஏற்பாட்டை விரைந்து முடிப்பது போன்றவற்றை விரிவாக பேசினர் .
Image may contain: 3 people, people standing
Image may contain: 1 person, sitting, beard and indoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 1 person, standing and indoor

Sunday, April 16, 2017

TNTCWU மாநில செயற்குழு முடிவின்படி ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள்  .
Image may contain: 3 people, people sitting and people standing
Image may contain: 2 people, people sitting
Image may contain: 6 people, people sitting
Image may contain: one or more people, people sitting and indoor

Friday, April 14, 2017

இரங்கல்

            BSNLEU விருதுநகர் மாவட்ட துணைச் செயலர் தோழர் அஷ்ரஃப்தீன் அவர்களின் தகப்பனார் திருமிகு செய்யது முகம்மது அவர்கள் இன்று (14-04-2017) அதிகாலை 3 மணியளவில் இயற்கை எய்தினார்.
இறுதிப் பயணம் மாலை 6 மணிக்கு நடைபெறும்.

பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு நம் இரங்கலை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

Thursday, April 13, 2017

பட்டுக்கோட்டையார் பிறந்தநாள்.

         ‘நான் அமர்ந்திருக்கம் முதலமைச்சர் நாற்காலியின் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களால் ஆனது’ என்று முன்னால் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனால் நினைவுகூறப்பட்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்தநாள் (1930) ஏப்ரல் 13.


குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! -                (உனக்கு…
மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதிமந்தமடா -(உனக்கு…

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்டு மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ததிடும் சொந்தமடா (உனக்கு…

பாபச் சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக் காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்க ளானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் _ முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் _ மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார் – அவரு
செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? _ நீ
துணிவிருந்தாக் கூறு! _ ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! _ அவர் எங்கே போனார் பாரு!     – அவரு

பொம்பளை எத்தனை? ஆம்பிளை எத்தனை?
பொறந்த தெத்தனை? எறந்த தெத்தனை?
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை?
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு _ இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! ஆனந்தம்!               (உனக்கு…

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...