Sunday, June 26, 2016

தொடங்கியது 8 வது மாவட்ட மாநாடு

     விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர்சங்கத்தின் 8 வது மாவட்ட மாநாடு இன்று இனிதே தொடங்கியது.மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமை வகிக்க மாவட்ட செயலர் சமர்ப்பித்த ஆய்படு பொருள் ஏற்று கொள்ளப்பட்டு, தோழர் முத்துசாமி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, தலைவர் உரையுடன் மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் அமர்வு தொடங்கியது. முறையாக பிரதிநிதிகள் அமர்வை மாநில அமைப்பு செயலர் தோழர் கிறிஸ்டோபர் தொடக்கி வைத்து 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நாம் பெற்ற பிரமாண்டமான வெற்றி, மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, நாம் நிறுவனத்தை மேம்படுத்த நடத்தி கொண்டு உள்ள நடவடிக்கைகள், செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றி கரமாக நடத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து 4 வது முறையாக வெற்றி பெற்றது மட்டும் இன்றி இந்த 7 வது சரிபார்ப்பு தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக 50% வாக்குகள் மேல் பெற்று வெற்றி பெற்றதை பாராட்டினார். நமது ஆண்டறிக்கையில் மார்க்கெட்டிங் பணிகளுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை வரவேற்றார். மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் சமர்ப்பித்த ஆண்டறிக்கை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. தோழர் வெங்கடப்பன் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கை மாவட்ட மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 21 பிரதிநிதிகளும், மாவட்ட சங்க நிர்வாகிகளில் 18 பேரும், பார்வையாளர்களாக 8 பேரும், AIBDPA சார்பாக தோழர் புளுகாண்டியும் கலந்து கொண்டனர்.
இன்றைய முடிவுகள் :-
1. மாவட்ட மாநாட்டு பொது அரங்க நிகழ்ச்சிக்கு அனைவரும்  குடும்பத்தோடு கலந்து கொள்வது.
2. செப்டம்பர் 2 வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நமது மாவட்டத்தில் நடத்துவது. 
3. தொழிற்சங்க பயிற்சி வகுப்பை இயற்கை எழில் சூழ்ந்த அச்சன்கோவிலில் வரும் 2016 ஆகஸ்ட் மாதம் நடத்துவது.இதற்கான பொறுப்பை சென்னை RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் மேற்கொள்வது.  
4. வரும் நவம்பர் மாதம் தோழர் செல்வராஜ் பணி ஓய்வு விழாவை ஒரு கலை இலக்கிய ,குடும்ப விழாவாக நடத்த தோழர் செல்வராஜ் அவர்களிடம் ஒப்புதல் கேட்பது. 
5. ஸ்ரீவில்லிபுத்தூர் தோழியர் பகவதி அவர்கள் பணி ஓய்வு பாராட்டு விழாவை ஒரு விரிவடைந்த செயற்குழுவாக மற்றும் செப்டம்பர் 2 வேலை நிறுத்த ஆயுத்த கூட்டமாக நடத்த  வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த ஒப்புதல் கேட்பது 
6. இனி வரும் காலங்களில் செயற்குழு கூட்டங்களை முழு நாளாக நடத்த வேண்டும்.
7. அனைத்திந்திய மாநாட்டு நன்கொடையாக வரும் 29 ஆம் தேதி 90,000/- ரூபாயாக கொடுத்து விடுவது .( ஏற்கனவே ரூபாய் 70,000/- வழங்கி விட்டோம்). இலக்கை முடிக்க அனைத்து கிளைகளும் ஒப்புதல் வழங்கி உள்ளன.
8. 21-06-2016,22-06-2016 இரண்டு நாட்கள் நமது தோழர்கள் பங்கேற்ற மார்க்கெட்டிங் பணிகள் பாராட்டப்பட்டது. 




















Tuesday, June 21, 2016

சபாஷ்!

21/06/2016 மற்றும் 22/06/2016 இரண்டு நாட்கள் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரோடு ஷோ நடைபெற்றது .நமது BSNLEU சிவகாசி தோழர்கள் சமுத்திரகனி தலைமையில் 790 சிம்கள் விற்று சாதனை புரிந்துள்ளார்கள் .சபாஷ் சிவகாசி தோழர்களுக்கு .மேலும் 6 லேண்ட் லயன் இணைப்புகள் சிவகாசியில் பெறப்பட்டன ஏழாயிரம்பண்ணையில் நடைபெற்ற ரோடு ஷோவில் மாவட்ட செயலருடன் ,ஜெயராமன்   பங்கேற்றார் .அங்கு 350 சிம்கள் விற்கப்பட்டன .சொக்கனாதன்புதூரில் ராஜை கிளைச் செயலர் முத்துராமலிங்கம் கலந்து கொண்டார் .அங்கு 323 சிம்கள் விற்கப்பட்டு 2 பிராட் பேண்ட் இணைப்புகள் பெறப்பட்டன . `மம்சாபுரத்தில் தோழர்.ராமச்சந்திரன் 97 சிம்கள் விற்றுள்ளார். ராஜீவ் நகர் அருப்புக்கோட்டையில் நமது கிளைச் செயலர் மதிக்கண்ணன் பங்கேற்றதில் 130 சிம்கள் , 4 MNP பெறப்பட்டன ஸ்ரீவில்லிபுத்தூரில் நமது கிளைச் செயலர் தோழர் சமுத்திரம் பங்கேற்ற நிகழ்வில் 98 ம் , தோழர் தங்கதுரை பங்கேற்ற கிருஷ்ணன் கோவிலில் மற்றும் வத்ராப் பகுதியில் நமது இளம் தோழியர் ராஜேஸ்வரி ,TTA அவர்களும் பங்கேற்ற நிகழ்வில்  300 ம் ,GM அலுவலக மற்றும் SDOP கிளை செயலர்கள் இளமாறன் மாரிமுத்து மற்றும் மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன்,ராஜேந்திரன் ,தனராஜ் பங்கேற்ற R R நகரில் 147 சிம்களும், காதர் ,ஜெயச்சந்திரன் மற்றும் சரவணகுமார் TTA  பங்கேற்ற சாத்தூரில்் 137 சிம்களும் , சாத்தூர் கிளைச் செயலர் கலைஅரசன் பங்கேற்ற சுப்பையாபுரத்தில் 35 சிம்களும் ,அஷ்ரப்தீன் ,சோலை பங்கேற்ற அருப்புக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் ரோடு ஷோவில் 100 ம் , TMB வங்கியில் 24 சிம்களை தோழர் உதயகுமார் விற்பனை செய்துள்ளார் .காரியாபட்டிமற்றும் மல்லாங்கிணற்றில் தோழர் கணேசமூர்த்தி தலைமையில் 160 சிமகள் விற்கப்பட்டு உள்ளன .சிவகாசி குரூப்ஸ் பகுதியில் நமது கிளை செயலர் தோழர் முத்துசாமி பங்கேற்பில் 88 சிம்கள் விற்கப்பட்டு உள்ளன தோழர் I .முருகன் பங்கேற்ற சத்திரப்பட்டியில் 108 சிம்களும் ,தோழர் அய்யனார் பங்கேற்ற M .ரெட்டியாபட்டியில் 25 சிம்களும் ,தோழர் ராதாகிருஷ்ணன் ,தியாகராஜன் ,குட்டிராஜா பங்கேற்ற ராஜபாளையத்தில் 42 சிம்களும் விற்பனை செய்யப்பட்டன.சொக்கநாதன் புத்தூர் ,சிவகாசி ,சாத்தூர், அருப்புக்கோட்டை பகுதிகளில் லேண்ட் லயன் மற்றும் பிராட் பேண்ட் இணைப்புகளும் பெறப்பட்டு உள்ளன .
மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட நம் தோழர்களுக்கு நெஞ்சு நிறை நன்றி

ராஜபாளையம் கிளை மாநாடு

12 வது  ராஜபாளையம் கிளை மாநாடு 20/06/2016 அன்று ராஜபாளையம் நகரில் தோழர் அனவ்ரதம் ,கிளை தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .நமது மூத்த தோழர் பொன்னுச்சாமி நமது சங்க கொடியை ஏற்றி வைக்க ,அஞ்சலி உரையை தோழர் சிவஞானம் நிகழ்த்த ,கிளை செயலர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது .கிளை பொருளர் சிவஞானம் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது .மாவட்ட செயலர் தொடக்க உரை நிகழ்த்த ,SNEA கிளை செயலர் தோழர் தங்கவேலு ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மாற்று சங்கங்களில் இருந்து விலகி நமது சங்கத்தில் இணைந்த தோழர்கள் குட்டிராஜா ,சோமசுந்தரம் ,கிருஷ்ணன் ஆகியோர் கிளை சங்கத்தால் கவுரவிக்கப்பட்டனர் .புதிய  நிர்வாகிகளாக தோழர்கள் தியாகராஜன் ,முத்துராமலிங்கம் ,அனவ்ரதம் ஆகியோர் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளாளர்க தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

சாத்தூர் கிளை மாநாடு

சாத்தூர் கிளை மாநாடு 18/06/2016 அன்று கிளை தலைவர் தோழர் .வெங்கடாசலபதி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர் ஜெயச்சந்திரன் அஞ்சலி  உரை நிகழ்த்த ,கிளை செயலர் தோழர் காதர் மைதீன் வரவேற்புரை நிகழ்த்த ,முறையாக கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தொடக்கி வைத்தார் .கிளை செயலர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை ,பொருளாளர் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன .புதிய நிர்வாகிகளாக தோழர்கள் வெங்கடாசலபதி, கலையரசன் ,ஜெயச்சந்திரன் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி மற்றும்  RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் ,ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் ராமச்சந்திரன் ,SNEA கிளை செயலர் முத்தையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .

Friday, June 17, 2016

ராஜபாளையம் கிளை மாநாடு

ராஜபாளையம் கிளை மாநாடு 
நாள் ::- 20.06.2016, திங்கள்கிழமை . நேரம் :- மாலை 5-00 மணி
 இடம் :- தொலைபேசி நிலைய வளாகம், இராஜபாளையம்.

                     நிகழ்ச்சி நிரல்

சங்ககொடி ஏற்றுபவர் : 
தோழர் P.பொன்னுச்சாமி , TM
தலைமை : 
தோழர் T.அனவரதம் – கிளைத்தலைவர் , BSNLEU
தியாகிகளுக்கு அஞ்சலி : 
தோழர் P.சிவஞானம்-கிளைப்பொருளாளர் , BSNLEU
வரவேற்புரை : 
தோழர் T.முத்துராமலிங்கம் – கிளைச்செயலாளர் , BSNLEU 
துவக்கவுரை : தோழர் S.ரவீந்திரன், மாவட்ட செயலாளர், BSNLEU

                  **  ஆய்படுபொருள்  **
  • ஆண்டறிக்கை,வரவு செலவு அறிக்கை.
  • அமைப்பு நிலை விவாதம்
  • தீர்மானங்கள்
  • புதிய நிர்வாகிகள் தேர்வு,இன்ன பிற தலைவர் அனுமதியுடன்.
சிறப்புரை : தோழர்  சமுத்திரக்கனி, மாவட்டத்தலைவர் , BSNLEU
வாழ்த்துரை : தோழர் S.தங்கவேல், கிளைச்செயலாளர் , SNEA
               தோழர் ராமச்சந்திரன் – மாவட்டச்செயலர் , TNTCW
               தோழர் M .வேலுச்சாமி – மாநில அமைப்புச்செயலர்,TNTCW   
நன்றியுரை : புதிய செயலர்.

தோழர், தோழியர் அனைவரும் தவறாது கலந்துகொள்ள அன்புடன்
அழைக்கின்றோம்.


                        தோழமையுடன்,

                 இராஜபாளையம் கிளை         

Monday, June 13, 2016

13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு

13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு 13-06-2016 அன்று   மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக சிறப்பாக தோழர் வெங்கடசாமி, கிளை தலைவர் தலைமையில் நடைபெற்றது. தோழர் .ரவிச்சந்திரன்  அஞ்சலி தீர்மானம் வாசிக்க அனைவரும் தியாகிகளுக்கு 1 நிமிடம் அஞ்சலி  செலுத்தினர். ஆண்டறிக்கை சமர்ப்பித்து கிளை செயலர் தோழர் சமுத்திரம் பேசினார் .கிளையின் வரவு செலவு அறிக்கை தோழர் சுந்தர மகாலிங்கம் அவர்களால் சமர்பிக்கப்பட்டது. விவாதத்திற்கு பின் ஆண்டறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கை ஏற்று கொள்ளப்பட்டது. முறையாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார். வாழ்த்துரையாக தோழர்கள் சமுத்திரகனி, மாவட்ட தலைவர், கண்ணன், மாவட்ட உதவி தலைவர், முத்துசாமி, மாவட்ட உதவி செயலர், அஷ்ரப்தீன், மாவட்ட உதவி செயலர்,  L.தங்கதுரை, LCM உறுப்பினர், கிளை செயலர்கள் தோழர்கள் முத்துராமலிங்கம். காதர் மொய்தீன், கருப்பசாமி, ஓய்வூதியர் சங்கம் தோழர் புளுகாண்டி, SNEA மாநில அமைப்பு செயலர் தோழர் கோவிந்தராஜன், SDO, தோழர் வெங்கடேஷ் JTO, SNEA, மாவட்ட உதவி செயலர் ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் வெங்கடசாமி, சமுத்திரம், சுந்தர மகாலிங்கம் ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளாளர் ஆக தேர்ந்து எடுக்க பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...