Sunday, February 14, 2016

விரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர்

12-02-2016 அன்று மாநில  செயற்குழுவும் , 13-02-106 அன்று விரிவடைந்த மாநில செயற்குழுவும்  வேலூர் மாநகரத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாநில தலைவர் தோழர் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இரண்டு நிகழ்சிகளும் மாவட்ட, மற்றும் கிளை சங்க நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி  ஊட்டக்கூடியதாக அமைந்தது .முதல் நாள் நிகழ்ச்சியில் நமது மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார் .நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் தனது நீண்ட உரையில் நரேந்தர மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றியும் கடந்த மூன்று ஆண்டுகள் BSNL நிறுவன புத்தாக்கத்திற்கு நமது BSNLEU சங்கம் செலுத்திய பங்களிப்பையும் , Non executive ஊழியர்களுக்கு நாம் செய்துள்ள பணிகளையும் விரிவாக பேசினார் . நமது மாநில செயலர்  சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது நடந்த விவாதத்தில் அனைத்து  மாவட்ட செயலர்களும் ,மாநில சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் . 2 ஆம் நாள் நடைபெற நிகழ்ச்சியில் 30-04-2016 அன்று பணி ஓய்வு பெற உள்ள மதுரை மாவட்ட செயலர் தோழர் சூரியன் தேசிய கொடியை ஏற்றி வைக்க நமது சங்க கொடியை மாநில  சங்க நிர்வாகி தோழர்  வெங்கட்ராமன் ஏற்றி வைக்க ,தோழர் சுப்ரமணியனின் அஞ்சலி உரையுடன், மாநில செயலரின் வரவேற்பு உரையுடன்  விரிவடைந்த மாநில செயற்குழு தொடங்கியது .தொடக்க உரை  நிகழ்த்திய நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் வர   உள்ள 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU  சங்கம் மிக பெரிய வெற்றியை பெறும்  என  அறிவித்த போது  கரவொலி அடங்க நீண்ட நேரமாகியது . 6 வது சரிபார்ப்பு தேர்தலில் போனஸ் , மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் LTC   ஆகியன நிறுத்தப்பட்ட விசயங்களை நமக்கு எதிரான பிரச்சாரங்களாக  மாற்றிய NFTE  சங்கம் 4 % மேற்பட்ட வாக்குகளை இழந்தது . ஆனால்  நமது BSNL ஊழியர் சங்கம் 2.8% வாக்குகளை அதிகரித்து சாதனை வெற்றி பெற்றது . தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் கையாண்டு தீர்வு செய்துள்ள பல்வேறு  பிரச்சனைகள்   மற்றும் நமது நிறுவன புத்தாக்கத்திற்கு செய்துள்ள  நிகழ்வுகள் நம்மை மிக பெரிய வெற்றியை நோக்கி செல்லும் என அறுதியிட்டு கூறினார் .மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வாரியாக கிளை செயலர்கள் பேசினர் .நமது  மாவட்ட சங்கம் சார்பாக ராஜை கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் ,TTA  அவர்கள் பேசினார் .அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற செய்த வேலூர் தோழர்களுக்கு நன்றி உரித்தாக்குகிறோம்


Thursday, February 11, 2016

விரிவடைந்த மாநில செயற்குழு

மாநில சங்க நோட்டீஸ் படிக்க :-Click Here

ரோடு ஷோ

நமது மாவட்ட சங்கம் சார்பாக தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் ரோடு ஷோகள் நடடிபெற்று வருகின்றன .6 ஆம் தேதி திருச்சுழியில் 345 சிம்கள் விற்கப்பட்டன . 9 ஆம் தேதி  மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் 200 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .3 MNP பெறப்பட்டது . 10 ஆம் தேதி சிவகாசி அருகில் சித்துராஜபுரம் புகுதியில் 151 சிம்கள் வழங்கப்பட்டன .சென்ற ஜனவரி மாதம் 28, 29 தேதிகளில் காரியாபட்டியில் 675 சிம்கள் விற்கப்பட்டன . இது தவிர கல்லூரிகளில் மார்க்கெட்டிங் விங் சார்பாக நடைபெறும் விநாடி வினா போட்டிகளில் நமது சங்கம் முழுமையாக கலந்து கொண்டு வருகிறது .

Tuesday, February 2, 2016

கெயில் தீர்ப்பும் வந்தே மாதரமும்!


விகடன் செய்திகள் படிக்க :-Click Here

விரிவடைந்த மாவட்ட செயற்குழு

விரிவடைந்த மாவட்ட செயற்குழு  மற்றும் தோழர்கள் T.ராதாகிருஷ்ணன் ,சீனியர் AO  மற்றும் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம்  அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா  மற்றும் சேவை கருத்தரங்கம் வரும் மார்ச் மாதம் 19 ஆம் தேதி ராஜபாளையம் நகரில் நடைபெற உள்ளது .நமது தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் , நமது மாநில உதவி செயலர் தோழர் .M .முருகையா , விருதுநகர் பொது மேலாளர் திருமதி .S .E .ராஜம் ,மற்றும் துணை பொது மேலாளர் திரு .ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் .

7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்

7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் அறிவிப்பை BSNL நிர்வாகம் 01/02/2016 அன்று வெளியிட்டுள்ளது. 

தேர்தல் நாள் : 10/05/2016
முடிவு அறிவிக்கும் நாள் : 12/05/2016
சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2016.
வாக்காளர் பட்டியல் 01/03/2016க்குள் இறுதி செய்யப்பட வேண்டும்.
30/04/2016 வரை பணி ஓய்வு பெறுவோர்  வாக்காளர் பட்டியலில்இடம்  பெற மாட்டார்கள் .
தேர்தல் அறிவிப்பு செய்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை Group C & D ஊழியர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற்றல் தடை செய்யப்பட்டு உள்ளது 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...