Tuesday, June 9, 2015

நானே கேள்வி நானே பதில்

''பள்ளிகளில் கட்டணங்களைக் கடுமையாக உயர்த்தியுள்ளார்களே?''
''இதைத்தான் நெல்லை ஜெயந்தா இப்படிக் கூறுகிறார்.

'கொள்ளை -
வீடுகளைப் பூட்டும்போதும்
பள்ளிகளைத் திறக்கும்போதும்!’ ''
                              நன்றி :-விகடன் 

Sunday, June 7, 2015

பிஎஃப் பணம் எடுத்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டுமா?

புதிய நிதிச் சட்டம் 2015-ல் 192ஏ என்ற பிரிவை மத்திய அரசு இப்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஐந்து வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து அவருடையை கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாகப் பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இதில் பான் எண் கொடுத்தவர்களுக்கு 10 சதவிகிதம் டிடிஎஸ் (Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்படும். அதுவே படிவம் 15ஜி, 15ஹெச் சமர்பித்தவர்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படமாட்டாது. அதிகபட்சமாக டிடிஎஸ் 34.608 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். இந்த விதிமுறை யாருக்கு பொருந்தும், யாருக்குப் பொருந்தாது என்பது குறித்து பிஎஃப் அமைப்பின் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத்திடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.


எப்போது டிடிஎஸ் பிடிக்கப்படாது?

"ஒரு பிஎஃப் கணக்கிலிருந்து இன்னொரு பிஎஃப் கணக்குக்குப் பணத்தை மாற்றும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. அதாவது, ஒரே ஊழியருக்கு இரண்டு, மூன்று கணக்கு இருந்தால் அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்துக்கு வேலை மாறிச் செல்லும்போது பழைய பிஎஃப் கணக்கிலிருந்து புதிய பிஎஃப் கணக்குக்குப் பணத்தை மாற்றும்போது டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. மேலும், உடல்நலக் குறைவினால் வேலையை விட்டுப் போகும்போது, நிறுவனத்தை மூடும்போது, புராஜெக்ட் முடிவடைதல் போன்ற காரணங்களினால் பிஎஃப் கணக்கை முடித்துப் பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் பிடிக்கப்படாது. தவிர, ஐந்து ஆண்டு சர்வீஸுக்கு பிறகு, பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது டிடிஎஸ் இருக்காது. அதுவும் அந்த பிஎஃப் கணக்கு, ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மாற்றியி ருந்தாலும் இது பொருந்தும். ஐந்து வருடத்துக்கும் குறைவாக சர்வீஸ் வைத்திருந்து, அதே நேரத்தில் 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகப் பணம் எடுக்கும் போது டிடிஎஸ் பிடிக்கப்படாது.

எப்போது டிடிஎஸ் பிடிக்கப்படும்?
ஐந்து வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து அவருடையை கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாகப் பணத்தை எடுக்கும்போது மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்'' என்றார்.
15ஜி மற்றும் 15ஹெச் எப்போது ஏற்றுக் கொள்ளப்படும்?
மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) படிவம் 15ஹெச், மற்றவர்கள் 15ஜி படிவமும் சமர்பிக்க வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் இந்தப் படிவம் கொடுக்க வேண்டும்.
படிவம் 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தில் சுயகையொப்பமிட்டு சமர்பிக்கும்போது சில சமயங்களில் மட்டும் இந்தப் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.
பொதுப் பிரிவினர் ரூ.2.5 லட்சத்துக்கும், மூத்த குடிமக்கள் ரூ.3 லட்சத்துக்கும் மேல் பிஎஃப் தொகை எடுக்கும்போது, 15ஜி மற்றும் 15ஹெச் ஏற்றுக் கொள்ளப்படாது.
பிஎஃப் தொகையை எடுக்க 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தைப் பூர்த்திச் செய்யும்போது அதில் பான் எண்ணை குறிப்பிடுவது அவசியம்.
வரிக்கு உட்பட்ட வருமானம் ஏதும் இல்லையெனில் 15ஜி மற்றும் 15ஹெச் படிவத்தைச் சமர்பிக்கலாம்.
பிஎஃப் உறுப்பினர் ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக 5 வருடமோ அல்லது அதற்கு அதிகமாகவோ வேலை பார்த்த பிறகு பணத்தை எடுத்தால் 15ஜி மற்றும் 15ஹெச் படிவம் கொடுக்கத் தேவையில்லை.
குறிப்பிட்ட சில காரணங்களினால் வேலை இழக்கும்போது பான் கார்டு, 15ஜி மற்றும் 15ஹெச் படிவம் கொடுக்கத் தேவையில்லை.
இந்த டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதால் அதிகமாகப் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான். அதாவது, சின்னச் சின்ன வேலைகள் செய்வதற்காக சென்னை போன்ற நகரங்களுக்கு வந்து வேலை பார்ப்பவர்களிடம் பான் கார்டு இருப்பதற்கான வாய்ப்புக் குறைவு.
இவர்கள் பிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்யும்போது அதில் டிடிஎஸ் 34.608 சதவிகிதம் பிடித்தால் ரூ.30 ஆயிரத்துக்கு ரூ.10,382 பிடித்தம் செய்யப்படும்.
இந்தத் தொகையை வரி தாக்கல் செய்துதான் திரும்பப் பெற முடியும். இதுவும் அவர்களுக்குச் சாத்தியம் இல்லை. எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் வரம்புக்குட்பட்ட தொகையை அதிகப்படுத்துவது அல்லது குறிப்பிட்ட சில துறையில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் டிடிஎஸ் என வைத்தால் நன்றாக இருக்கும் என்பதே பலரது கருத்து!


வரி செலுத்த வேண்டுமா?
5 வருடத்துக்குக் குறைவாக பிஎஃப் உறுப்பினராக இருந்து பணத்தை எடுக்கும்போது, அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டும். அவரவர் வருமான வரி வரம்புக்கு ஏற்றாற்போல்் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதேபோல பிஎஃப் தொகையில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதை வருமான வரி கணக்குத் தாக்கலில் காண்பிக்க வேண்டும். வருமான வரிக்கு உட்படாமல் மொத்த வருமானம் இருந்தால் இந்த டிடிஎஸ் தொகையை திரும்பப் பெற முடியும். 
                           <நன்றி :- விகடன் 

Wednesday, June 3, 2015

மாநில செயற்குழு

தமிழ் மாநில செயற்குழு மாநிலத் தலைவர் தோழர் செல்லப்பா அவர்கள் தலைமையில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
          செயற்குழுவின் ஆய்படு பொருள்களாக
கையெழுத்து இயக்கம் மற்றும் பாராளுமன்றம் நோக்கிய பேரணி மீள்பார்வை
ஏப்ரல் 21, 22 வேலைநிறுத்தம் மீள் பார்வை
மாநில மற்றும் லோக்கல்  கவுன்சில்கள் செயல்பாடுகள்
மாநில அளவிலான பிரச்சனைகள்
ஒப்பந்தத் தொழிலாளர்கள் விஷயங்கள்
ஸ்தல மட்டப் போராட்டங்கள் 
மேலும் சில தலைவர் அனுமதியுடன் ஆகியவை இருக்கின்றன.
மாநில செயற்குழுவின் முதல் நிகழ்ச்சியாக நமது சங்க கொடியை நமது செயலர் தோழர் அபிமன்யு எழுச்சி கோஷங்களுடன் ஏற்றி வைத்தார் . தோழர்  மாநில உதவி தலைவர் தோழர் வெங்கட்ராமன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் . அதன் பின் தலைமையுரையாக நமது மாநில தலைவர் தோழர் செல்லப்பா அவர்கள் பேசினார் .பின்னர் மாநில செயற்குழுவை தொடக்கி வைத்து உரையாற்றிய நமது பொது செயலர் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் சிறப்பாக நடத்தியமைக்கு பாராட்டு தெரிவித்தார் .நிரந்தர ஊழியர்க்கு இணையாக ஒப்பந்த ஊழியர்கள் பெருமளவில் இவ் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டது சிறப்புமிக்கது என அவர் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார் . தற்போதய மத்திய அரசு நேரடி அந்நிய முதலீட்டை அதிக அளவில் அனுமதிப்பதின் நோக்கம் அந்நிய நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் சம்பாதிப்பது . அதற்க்கு தடைகளே இருக்க கூடாது என்பதற்காக தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தப்படுவது ,  விவசாயிகளிடம் நிலங்களை கையகலப்படுதுவது  என்பது போன்ற மக்கள் விரோத மத்திய அரசின் கொளகைகளை எதிர்த்து போராட வேண்டிய அவசியத்தையும் குறிப்பாக வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி  11 மத்திய   தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என் குறிப்பிட்டார் .ஜெர்மனியில் நடைபெற்ற ரயில்வே மற்றும் விமான  பைலைட்டுகள்  நிறுத்தத்தை அவர் உதாரணமாக கூறினார் . உயர் தொழில் நுட்ப ஏற்றுமதி வளர்ச்சியில் இந்தியா 23 வது இடத்தில உள்ளதையும் அதே நேரத்தில் சைனா முதல் இடத்தையும் ஜேர்மனி இரண்டாம் இடத்தையும் அமெரிக்கா மூன்றாம் இடத்தில உள்ளதையும் அவர் சுட்டி காட்டினார் .நமது நிறுவன புத்தாக்கத்திற்கு அனைவரும் நடத்திய 2 நாள் வேலை நிறுத்தம் அரசாங்கத்திடம் ஒரு தாக்கத்தை உருவாக்கி உள்ளதை சுட்டி கட்டிய அவர் கூடுதல் வருமான வரியாக பிடிக்கப்பட்ட 7000 கோடியை வருமான  வரித்துறையிடம்  இருந்து பெறுவதற்கான நடைமுறை தொடங்கி விட்டது என்றும் அதே போல் கிராமப்புற சேவைக்கு வர வேண்டிய USO நிதி 750 கோடி , DOT யில் உள்ள TERM CELL இல் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளத்தை BSNL கொடுத்ததற்கு DOT நமது BSNL க்கு 400 கோடி வழங்க உள்ளது . கிட்டதட்ட 15,000 கோடியை  வழங்குவதற்கான முயற்சிகள் BSNL விரிவாக்கதிற்க்கு வழி  வகுக்கும் என்றார் .BSNL ஐ MTNL நிறுவனத்தோடு இணைத்தால் நமது  நிறுவனத்தை புனரமைப்பதற்கான சாத்தியமே இல்லை என்பதை குறிப்பிட்ட அவர் தற்போதைய போராட்டத்தால்  அரசாங்கம் இணைப்பை தற்போது தவிர்க்க எண்ணியுள்ளது .1-1-2007 இல் பணி நியமனம் செய்யப்பட்ட TTA களுக்கு ஊதிய இழப்பை ஈடுகட்ட 1 கூடுதல் இன்கிரிமென்ட் நிலுவை தொகை இன்றி என்பது இப் போராட்டத்தின்  விளைவால் நிலுவை தொகையோடு வழங்குவதற்கு போர்டு ஒப்புதலுக்கு சென்றுள்ளது .இப் பிரச்சனையில் அவர்களுக்கு 30% fixation வழங்கப்படவேண்டும் என்ற நமது கோரிக்கையை வென்று எடுக்க முயற்சிகள் தொடரும் . 01-01-2007 இல் இருந்து பணி நியமனம் பெற்ற SRTOA மற்றும் RM கேடர்களுக்கும் இதை அமல்படுத்த சங்கம் தொடர்ந்து முயற்சி  எடுக்கும் என் அவர் கூறினார் .பதவி உயர்வு தேர்வுகளில் SC /ST ஒதுக்கீடு DOP வழிகாட்டல்களை அமல்படுத்தாத  போக்கை களைய உரிய நடவடிகையை மத்திய  சங்கம் எடுக்கும் என அவர் கூறினார் .அதன் பின் நமது மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்த விவாத குறிப்புகளின் மீது விவாதம் தொடங்கியது .























Tuesday, June 2, 2015

பி.எஸ்.என்.எல். செல்போன் இணைப்புகளுக்கு ஜூன் 15ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் இல்லை

ஜூன் 15ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். செல்போன் இணைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது. என தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசி வாயிலாக, இரவு நேரத்தில் அனைத்து தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கும் இலவசமாகத் தொடர்பு கொள்ளும் வசதி, மே 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
                   நன்றி :- தினமணி

Monday, June 1, 2015

Go Wi-Fi in Taj Mahal from June 16

Good news for tourists visiting the Taj Mahal. They will be able to access free Wi-Fi services on the premises of the monument of love starting June 16.About 21 Wi-Fi hotspots are being installed inside the Taj by state-run telecom firm Bharat Sanchar Nigam Limited (BSNL) in partnership with a firm, according to a senior official from the department of telecommunications (DoT). Through Wi-Fi, mobile phone users will be able to access high speed internet on their mobile phones.However, the services will be free for the first 30 minutes, subsequently which tourists will have to buy vouchers.According to estimates, around seven to eight million tourists visit the Taj Mahal every year which include about one million foreign tourists.It is one of the seven wonders of the world apart from an UNESCO world heritage site.This is part of the Union government's plan to provide free Wi-Fi access across 25 tourist/heritage sites across India. The government has identified 25 archeological sites including Humayun's Tomb, Red Fort, Qutub Complex in Delhi, Taj Mahal, Fatehpur Sikri, Sravasti and Sarnath in Uttar Pradesh, Leh Palace in Jammu and Kashmir, Konark Temple in Odisha, Khajuraho and Mandu in Madhya Pradesh.The minister for communications and IT Ravi Shankar Prasad had recently inaugurated Wi-Fi services in the ghats of Varanasi along the river Ganga. In the ghats, the Wi-Fi facility would be available to users at Rs 70 for the entire day, Rs 50 for two hours, Rs 30 for one hour and Rs 20 for 30 minutes.BSNL has already set up 100 Wi-Fi hotspots across 18 locations and aims to have 2,500 such spots across 200 locations by the end of March 2016.The state-run PSU is going for opex sharing model for setting Wi-Fi hotspots. It has divided the country into four regions and has already identified the partner for North and South regions while for East and West region, expression of interest is being floated, according to a BSNL official.BSNL is focusing aggressively on providing data services going forward and banking on its 3G, 4G and Wi-Fi services to capture a big market share and come back to profits. It is investing Rs 39,000 crore in the next five years, out of which a major chunk will be invested on data segment.BSNL, which doesn't have 4G spectrum, plans to offer Wi-Fi services through two routes: First, through Wi-Fi (it plans to integrate its Wi-Fi to 2G and 3G networks and act as a 4G hotpsot for mobile subscribers) and second, through partnerships with private telecom players, according to the company official quoted above while it aims to roll out 4G services by next year.

                        நன்றி :-Logo

சேவை வரி உயர்வால் “காஸ்ட்லி” ஆகும் அத்தியாவசியங்கள்... கக்கூஸ் கட்டணத்தைத் தவிர அனைத்தும் உயரும்!

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சேவை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகின்றன.இதுவரை 12.36 சதவிகிதமாக இருந்த சேவை வரி இனி 14 சதவிகிதமாக உயர்கிறது.இதனால் மக்கள் எந்தெந்த சேவைகளுக்கு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதை பார்க்கலாம்.
மொபைல் போன்களுக்கு உயர்வு:
மக்களின் அத்தியாவசிய சேவையாக மாறிவிட்ட மொபைல் ஃபோன்களுக்கு சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இணையதள சேவை அதாவது டேட்டா சேவைகளுக்கும் இந்த சேவை வரி உயர்வு பொருந்தும்.
அதிகரிக்கும் விமான, ரயில் கட்டணங்கள்:
விமான பயணத்திற்கும் குளிர்சாதன வகுப்பு மற்றும் முதல் வகுப்பு ரயில் பயணத்துக்கும் கட்டணம் உயர உள்ளது. இது தவிர ரயில் மற்றும் லாரிகளில் எடுத்து செல்லப்படும் பொருட்கள் அனைத்துக்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்கள் மட்டும் விதிவிலக்கு:
அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கு மட்டும் இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட உயர்தர உணவகங்களுக்கு சென்று உண்பவர்களும் இனி கூடுதல் தொகையை செலவிட வேண்டும் .
வங்கிச் சேவைகளுக்கும் கூட:
வங்கிகளிடம் இருந்து அதன் வாடிக்கையாளர்கள் பெறும் பல்வேறு வகையான சேவைகளுக்கும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தெரிவித்து உள்ளன .
அழகு சாதன நிலையங்கள்:
இதுதவிர dth சேவை பெறுபவர்கள், அழகு சாதன நிலையங்களுக்கு செல்பவர்கள், கொரியர் சேவை, லாண்டரி சேவை உள்ளிட்டவற்றுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆன்லைன் ஷாப்பிங்கிற்கும் ஆப்பு:
ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கும் பொருட்களுக்கும் சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளும் சேவை வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் புதிய வீடுகளுக்கு பல ஆயிரம் ரூபாய் கூடுதலாக தர வேண்டியிருக்கும்.
பலமான வரி வலை:
500 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டியிருக்கும் இசை, நடனம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் புதிதாக சேவை வரி வலைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நிதிச்சேவைகளுக்கும் கட்டணம்:
மேலும் தீம் பார்க்குகள் உள்ளிட்டவற்றுக்கும் சேவை வரி கட்ட வேண்டியிருக்கும். மேலும் சிட் ஃபண்டுகள், காப்பீடு, பிரிமியம் உள்ளிட்ட நிதிச் சேவைகளுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
என்னவோ போங்கப்பா:

அப்போ எந்த அத்தியாவசிய சேவைக்குதான் கட்டண உயர்வு இல்லை என்று கேட்டீர்கள் என்றால் கட்டணக் கழிப்பிடங்களுக்கு மட்டும் உயரவில்லை என்பது மட்டுமே ஒரே ஆறுதல்!
                        நன்றி : ஒன் இந்தியா 
 

IDA எதிர்பார்ப்பு

01-07-2015 முதல் IDA உயர்வு 1.4% முதல் 2.4% வரை இருக்கும் என எத்ர்பார்க்கப்படுகிறது .
Top 20 Projections:

S.N.Avg. AICPIN
Projected
Projected
IDA (%)
Projected
IDA Increase (%)
1253.00100.3-0.2
2253.33100.50.0
3253.67100.80.3
4254.00101.10.6
5254.33101.30.8
6254.67101.61.1
7255.00101.91.4
8255.33102.11.6
9255.67102.41.9
10256.00102.62.1
11256.33102.92.4
12256.67103.22.7
13257.00103.42.9
14257.33103.73.2
15257.67104.03.5
16258.00104.23.7
17258.33104.54.0
18258.67104.84.3
19259.00105.04.5
20259.33105.34.8

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...