செய்தி படிக்க :- Click Here
Friday, August 15, 2014
அனைவருக்கும் விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
இரண்டாம் சுதந்திரம் வென்றிடுவோம்

வெள்ளையன் அன்றே கொடுத்திட்டான்
சுதந்திரம் என்றே களித்திட்டோம்
கொள்ளையர் கையில் அகப்பட்டோம்
தந்திர வலையில் விழுந்திட்டோம்
பொது நலமென்றே உரைத்திடுவார்
பொய்கள் பல புனைந்திடுவார்
சுயநலம் ஒன்றே கொண்டிடுவார்-(சுதந்திர)
கைகளை இங்கே கட்டிடுவார்
காடுகள் எல்லாம் அழித்திடுவார்
கனிம வளங்களை விற்றிடுவார்
ஏடுகள் சொல்வது பொய்யென்பார்
இனிதே மறக்க செய்திடுவார்
ஜாதிகள் இங்கே இல்லை என்பார்
சமத்துவமே கொள்கை என்பார்
நீதி நெறிகளை மறந்திடுவார்
மிக ஜாதி அரசியலே செய்திடுவார்
ஏழ்மையை ஒழிப்போம் என்பார்
எதிலும் வளர்ச்சி என்பார்
ஊழலை உரமிட்டு வளர்ப்பார்
அதிலும் முதலிலே நிற்பார்
வெள்ளையன் அன்றே கொடுத்ததனை
முதலாம் சுதந்திரம் என்றிடுவோம்
கொள்ளையர் பிடியில் விடுபட்டு
இரண்டாம் சுதந்திரம் வென்றிடுவோம்.
நன்றி :-கும்மாச்சி ஆன்லைன் .காம்
Tuesday, August 12, 2014
இரங்கல்
மலைப்பட்டி தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த நமது தோழர் பரமேஸ்வரன் இன்று சென்னையில் காலமானார் , அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு பி எஸ் என் எல் ஊழியர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது . விருதுநகர் மாவட்ட மகாநாடு மார்ச் மாதம் அருப்புகோட்டையில் நடைபெற்ற போது ரூபாய் 10,000/- நன்கொடை வழங்கியது மட்டும் இன்றி தன் குடும்பத்தோடு மகாநாட்டில் கலந்து கொண்ட தோழர் .பரமேஸ்வரன் நமது சங்கம் மீது மிகுந்த பற்று கொண்ட தோழர் .அவர் மறைவு நமது சங்கத்திற்கு பெரிய இழப்பாகும் .
Monday, August 11, 2014
மத்திய சங்க செய்திகள்,
நமது டெலிகாம் பாக்டரிகளில் 1100 டவர்களை நிர்மாணம் செய்வதற்கு உபகரணங்கள் இருந்த போதும் அதை வாங்காது கடந்த எட்டு ஆண்டுகளாக 1269 டவர்களை BSNL நிறுவனம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 71.26 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.நமது டெலிகாம் பாக்டரிகள் purchase ஆர்டர் கிடைக்காமல் இருந்தபோது தனியாரிடம் வாங்க வேண்டிய அவசியம் என்ன ?
BSNL நிறுவனம் கடும் நெருக்கடியில் உள்ள போது நமது டவர்களை தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்தற்கு உரிய கட்டணங்களை தனியார் நிறுவனங்கள் நமக்கு செலுத்தாத தொகை 41 கோடியாம் .
இரண்டாவது கோடம்பாக்கத்தில் உலகத் திரைப்பட விழா!
உலகத்திரைப்பட விழாக்கள் என்றாலே,இந்தியாவின் முக்கியப்பெருநகரங்களில்தான் நடக்கின்றன.அப்படி...இருக்க தமிழகத்தின் சிறுநகரங்களில் உலகத்திரைப்படவிழாக்கள் நடந்து, மக்களிடையே பல்வேறு கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் பரிமாறினால்...அது எப்படி இருக்கும்? .அந்த எண்ணம் ஈடேறியிருக்கிறது தேனியில்.ஆம். தமிழகத்தில் மொழி சார்ந்த, இசை சார்ந்த, படைப்பு சார்ந்த விசயங்களில் தமிழ் சினிமாவை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல துடிக்கின்ற பல ஆளுமைகளைத் தந்த, மதுரைத்தாயின் வயிற்றில் பிறந்த, சினிமாவின் காதலர்கள் அதிகம் வாழுகின்ற, வாழ்வின் யதார்த்த உரிமைகளை விட்டுக் கொடுக்காத, இரண்டாவது கோடம்பாக்கம் என அழைக்கப்படுகின்ற தேனி மாவட்டத்தில், இயற்கை எழில் மிகுந்த பள்ளத்தாக்கான கம்பத்தில் உலகத்திரைப்பட விழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.இங்கு 5 நாட்களில் 11 நாடுகளின் 25 திரைப்படங்கள் காட்சிபடுத்தப்படுகின்றன.ஒரு படைப்பு, எங்கே புனிதப்படுகிறது என்றால் ஒரு கடைக்கோடி ரசிகன், அதை ரசித்து, சிலாகித்து, மனமுவந்து பாராட்டும்போதுதான் என்பார்கள். அப்போதுதான் பாராட்டும் பெரிதாக இருக்கும்...படைப்பும் மரியாதைக்குரியதாகக் கருதப்படும். அத்தகைய ஒரு கடைக்கோடி சினிமா ரசிகனுக்கு உலக சினிமாவை கொண்டு சேர்த்திருக்கிறது, “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் உப பிரிவான 'திரையியக்கம்'.இது இவர்கள் நடத்தும் 4வது உலகத்திரைப்பட விழாவாக இருந்தாலும், கம்பம் நகரவாசிகளுக்கு இதுதான் வரலாற்றில் முதல் முறை.
இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்
சங்க பொதுச்செயலர்:சாகித்திய அகாதமி
விருதுபெற்ற சு.வெங்கடேசன் கூறும் போது, "உலகத்திரைப்பட விழாவை த.மு.எ.க.சங்க சார்பில், நாலு வருசமா நடத்திட்டு இருக்குறோம். முதல் இரண்டு வருடம் சென்னையில் நடத்தினோம். பொதுவா திரைப்படவிழானாலே சென்னை, திருவனந்தபுரம், கோவா போன்ற பெருநகரங்கள்லதான் ,நடத்தணுமா...? ஏன் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகள்ல...நடத்தக்கூடாது? னுன்ற யோசனையிலதான்..போன ஆண்டு சினிமா நூற்றாண்டை முன்னிட்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவாக..பட்டுக்கோட்டையில் திரைப்படவிழா..நடத்தினோம்.இந்த ஆண்டு வந்து கம்பத்துல நடத்துறோம். குறிப்பா...இன்று வந்து திரைப்படம் சார்ந்து, அல்லது ஊடகம் சார்ந்து ஒரு பெரிய கனவோடு செயல்படுகிற பெரும் இளைஞர்கள் கூட்டம் எல்லா நகரங்களிலுமே உருவாகியிருக்காங்க. அவர்களுக்கு உண்டான தீனிய செஞ்சு கொடுக்கிற தேவையிருக்கு. த.மு.எ.க.ச ஒரு நல்ல ரசனை கொண்ட இளைஞர்களை உருவாக்குவதற்கான களத்தை அமைச்சுட்டுருக்கு....அதுல ஒரு பகுதியாத்தான்..கம்பத்துல நாங்க நடத்துற உலகத்தரைப்படவிழா!" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சுருளிப்பட்டி சிவாஜி (வசனகர்த்தா), "கலை மற்றும் இலக்கியம் சார்ந்தவிழிப்புணர்வு மக்கள்ட்ட ஏற்படுத்துறதுக்காக நடக்கிற இந்த விழா பாமர மக்கள்ட்ட போய் சேர்ந்துருக்கு. இங்க எல்லா காட்சிகளும் நிறைவா (ஹவுஸ்ஃப்ல்) போறதுதான் இதுக்கு சாட்சி" என விழா குறித்து மக்களிடம் உள்ள வரவேற்பினை நம்மிடம் பகிர்ந்தார்.5 நாட்கள் நடக்கவிருக்கும் இவ்விழாவில் இரண்டாம் நாளான நேற்று எழுத்தாளர் பாஸ்கர்சக்தி, ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், சுருளிப்பட்டி சிவாஜி மற்றும் நடிகர் பூ ராமு, இயக்குனர் எம்.சிவக்குமார், இயக்குனர் சமுத்திரகனி மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள், திரைத்துறை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
<நன்றி : விகடன் செய்திகள் >
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...







