Friday, August 9, 2013

வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.1.14 கோடி அபராதம்

அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தை மீறல்:
வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.1.14 கோடி அபராதம் 


          உலகம் முழுவதும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் பகாசுர நிறுவனம் வால்மார்ட். இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமது வழங்கி உள்ளது. அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்துக்கு நியூயார்க் உள்பட 9 மாநிலங்களில் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மிக குறைவான சம்பளம் தான் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் மைக்கேல் டியூக் ஆண்டுக்கு ரூ.124 கோடி சம்பளம் பெறுகிறார். ஆனால் வால்மார்ட்டில் வேலைபார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளிக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 528 மட்டும் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படி தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படாமல், எந்த சலுகையும் அளிக்கப்படாமல் கசக்கி பிழியப்படுகிறார்கள். மேலும் இவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சரியான சுகாதார வசதி மற்றும் பாதுகாப்பு வசதி செய்யப்படவில்லை என்று புகார்கள் வந்தன.

          இதை தொடர்ந்து நியூயார்க், கேட்ஸ் மாநிலங்களில் உள்ள வால்மார்ட் நிறுவன தொழிலாளர்கள் தங்கி இருந்த இடங்களில் தொழிலாளர்கள் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தொழிலாளர்களுக்கு வால்மார்ட் நிறுவனம்,மிக குறைவான சம்பளம் மற்றும் சுகாதார வசதியோ, பாதுகாப்பு வசதியோ செய்யாமல் சட்டத்தை மீறி செயல்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து வால்மார்ட் நிறுவனத்துக்கு அமெரிக்க தொழிலாளர்துறை ரூ. ரூ.1.14 கோடி அபராதம் விதித்துள்ளது.

செய்தி : தீக்கதிர்

          இப்படி சொந்த நாட்டிலேயே ஏமாற்றுகிற கொள்ளைக்காரர்கள் வந்தால்தான் நமது நாட்டில் தொழிலாளர்களும் விவசாயிகளும் சுபிட்சமாக வாழ்வார்கள் என்று நமது நாட்டில் முதலாளித்துவக் கட்சிகளின் ஜனநாயக ஜாம்பவான்கள் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய தொழிற் சங்கங்களின் சிறப்புமாநாடு

          மத்திய ஐ.மு.கூட்டணி-2 அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக் கைகளுக்குக்கூட செவி மடுக்க மறுப்பதைக் கண்டித்தும், அனைத்து தொழிற் சங்கங்களும் ஒன்றுபட்டு நின்று நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய தொழிற் சங்கங்களின் சிறப்புமாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மத்தியத் தொழிற்சங்கங்களின் சார்பில் தேசிய சிறப்பு மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
          சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உட்பட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பிலும் மத்திய அரசு ஊழியர் களின் மகாசம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், பிஎஸ்என்எல் ஊழியர்கள் அலுவலர்கள் கூட்ட மைப்பு, பாதுகாப்புத்துறை ஊழியர்கள், இன்சூரன்ஸ், வங்கி ஊழியர்கள், ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு உட்பட அனைத்து சங்கங்களின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
          கடந்த பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடைபெற்ற இருநாள் வேலை நிறுத்தத்தில் முன்வைத்த பத்து அம்சக் கோரிக்கைகளை மாநாட்டுப் பிரதிநிதிகள் முழக்கமிட்டு எதிரொலித்தார்கள். மத்திய அரசாங்கத்தின் சார்பில் மே 22 அன்று மத்தியத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ஒரு மாதம் கழித்து அரசுடன் கலந்தாலோசனை செய்து விட்டு சந்திப்பதாகக் கூறினார். ஆயினும் இதுவரையிலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.மாறாக, அது தன்னுடைய நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.
          அரசின் இந்த அலட்சியத்திற்கு எதிராக பல்வேறு துறைகளிலும் தொழிலாளர்கள் போராட்டப் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டனர். தனியாருக்கு ஆலையைத் தாரைவார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு எதிராக நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்தப்பின்னணியிலேயே தேசிய சிறப்பு மாநாடு நடைபெற்றது.
          சிறப்பு மாநாட்டினை சிஐடியு தலைவர் ஏ.கே.பத்மநாபன் உட்பட 11 மத்தியத் தொழிற்சங்கங்களின் மூத்த தலைவர்கள் தலைமையேற்று வழி நடத்தினார்கள். மாநாட்டின் வரைவுப் பிரகடனத்தை வெளியிட்டு தபன்சென் (சிஐடியு), குரு தாஸ் தாஸ் குப்தா (ஏஐ டியுசி), பிஎன் ராய் (பிஎம் எஸ்), கேகே நாயர் (ஐஎன் டியுசி), பேச்சிமுத்து (தொமுச) உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களிலிருந்தும் தலைவர்கள் உரையாற்றினர்.
          இதைத் தொடர்ந்து பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.தொழிலாளர் போராட் டத்தை நாடு தழுவிய அளவில் விரிவாக எடுத்துச் செல்வது என்றும், மாநிலத் தலைநகரங்களில் 2013 செப்டம்பர் 23 அன்று பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது என்றும், டிசம்பர் 12 அன்று புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி பிரம்மாண்டமான முறையில் பேரணி / ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்றும் சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்தது. தில்லியில் பேரணி நடைபெறும் நாளன்று நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டங்கள் / பேரணிகள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் செய்திக்கு :-CLICK HERE

Thursday, August 8, 2013

ரமழான் வாழ்த்துக்கள்


செவ்வணக்கம்

          மத்திய பிரதேச மாநில BSNLEU சங்கத்தின் மாநில செயலர் தோழர் S.K.நாயக் இன்று அதிகாலை காலமானார். அன்னார்க்கு நமது மாவட்ட சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

Tuesday, August 6, 2013

மாவட்ட பொது மேலாளருடன் நேர்காணல்

          06-08-2013 அன்று நமது மாவட்ட சங்கம் மாவட்ட பொது மேலாளருடன் நேர்காணல் நடத்தியது.கீழ்கண்ட விஷயங்கள் விவாதிக்கபட்டன..

  1. தாலுகா தலைநகரான திருச்சுழியில் கடந்த 4 மாத  காலமாக ஒரு டெலிபோன் மெக்கானிக்கூட பணியில் இல்லாமல் சேவையை சீரழித்து வருவதை கடுமையாக சுட்டி காட்டி உள்ளோம் .
  2. கொள்கை  சம்பந்தமான விசயங்களை அங்கீகரிகப்பட்ட சங்கங்களுடன் மட்டுமே விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
  3. லோக்கல் கவுன்சில் மற்றும் வொர்க் கமிட்டி கூட்டங்களை உடனடியாக கூட்ட வேண்டும் என   வலியுறுத்தி உள்ளோம்.
  4. உடனடியாக TTA காலியிடங்களை அறிவிக்க கூறியுள்ளோம்.
  5. NETWORK மற்றும் நரிக்குடி  wimax பகுதிகளில் TTA நியமனம் செய்யப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
  6. சிவகாசி பகுதியில் JTO பற்றாக்குறை உள்ளது என்பதை நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டி உள்ளோம்.
          08-08-2013 அன்று விருப்ப ஓய்வில் செல்ல உள்ள மாவட்ட பொது மேலாளர் திரு B.V.பாலசுப்ரமணியா  அவர்களை நமது மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். நமது மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் நினைவு பரிசை வழங்கினார். இன்றைய நேர்காணலின்போது தோழர்கள் R .ஜெயக்குமார், ரசூல், த.முத்துராமலிங்கம், M.முத்துசாமி, M.S.இளமாறன், A.ஜெயபாண்டியன், G.ராஜு, C.சந்திரசேகரன், G.சுந்தரராஜன், M.பெருமாள்சாமி  ஆகியோர் உடன்   இருந்தனர்.





11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...