Saturday, December 8, 2012

”உலக மனித உரிமை நாள்”

          ஐக்கிய நாடுகள் சபை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”உலக மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.

நோக்கம்

           ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல்,சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.

புதிய அங்கீகார விதி

           புதிய அங்கீகார விதிகள் அடிப்டையில் தேர்தல் நடைபெரும்பட்சதில் BSNLEU சங்கத்தின் அங்கீகார காலம் 13-02-2013 அப்பால் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் இல்லையேல் பழைய அடிப்படையில் உறுப்பினர் சரிபார்பு தேர்தல் நடத்த வேண்டும் என நம் சங்கம் கோரியுள்ளது . நமது BSNLEU சங்கம் பிஎஸ்என்எல் நிறுவனம் சமர்பித்த அங்கீகாரம் விதிகள் மீது தன கருத்துக்களை கொடுத்துள்ளது. Sr.GM (SR) அவர்கள் சரிபார்ப்பு தேர்தலை தாமதிக்க எண்ணம் இல்லை என்று 05-12-2012 அன்று com.P.Abhimanyu, GS, அவர்களிடம் உறுதியளித்தார். அவர் மேலும் சரிபார்ப்பு தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார் . தாமதம் இல்லாமல் புதிய அங்கீகாரம் விதிகள் முடிவு செய்ய பட வேண்டும் என்று நமது GS வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Wednesday, December 5, 2012

பிப்ரவரி மாத மாவட்டச் செயற்குழு

2012 டிசம்பர் 4 அன்று நடைபெற்ற மாவட்டச்செயற்குழுவில் அமைப்பு நிலை தொடர்பான விவாதங்களில் அடுத்த மாவட்டச் செயற்குழு விரிவடைந்த மாவட்ட செயற்குழுவாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் 2012 பிப்ரவரி 8ஆம்நாள் நடத்துவதென்றும், சூழலின் அடிப்படையில் அதேநாளில் சேவைமேம்பாட்டுக் கருத்தரங்கம் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டது.
விரிவடைந்த மாவட்டச்செயற்குழுவில் கிளைப்பொறுப்பில் உள்ள அனைவரும் அவசியம் கலந்து கொள்ளவேண்டும் என்பதை அனைத்துக் கிளைச்செயலர்களும் வலியுறுத்தினார்கள். மாவட்டத்தின் பொருளாதார நிலையையையும் வரவிருக்கும் நாட்களின் செலவுகளையும் கருத்தில் கொண்டு இச்செயற்குழுவிற்கு பங்கேற்பாளர் கட்டணமாக ரூபாய் 50 வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இச்செயற்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலச் செயலரையும், மற்றுமொரு மாநில, தேசிய சங்கப் பொறுப்பாளரையும் அழைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர் சந்திப்பு

டிசம்பர் 4 அன்று நடைபெற்ற மாவட்டச்செயற்குழுவில் அமைப்பு நிலை தொடர்பான விவாதங்களில் டிசம்பர் மாதம் மாவட்டப் பொறுப்பாளர்களின் ஊழியர் சந்திப்புச் சுற்றுப் பயணத்திற்குத் திட்டமிடப்பட்டது.

அதன்படி

ராஜபாளையம்             டிசம்பர் 13

ஸ்ரீவில்லிபுத்தூர்         டிசம்பர் 14

சாத்தூர்                           டிசம்பர் 20

அருப்புக்கோட்டை    டிசம்பர் 21


சிவகாசி                           டிசம்பர் 22


கிளைச்செயலர்கள் அனைத்துத் தரப்பு ஊழியர்களையும் சந்திப்பதற்கு ஆக்கப்பூர்வாமக்த் திட்டமிட வேண்டும்.

டிசம்பர் 4ல் நடந்த மாவட்டச் செயற்குழு

விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்டச்செயற்குழு 2012 டிசம்பர் 4ஆம் நாள் மாவட்ட BSNLEU அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆய்படு பொருளாக

Items for LCM & Work Committee, மாநிலச்செயற்குழு முடிவுகள் என இரண்டு முக்கியப் பொருள்களுடன் இன்னபிறவும்

செயற்குழுவிற்கு மாவட்டத்தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமை தாங்கினார். ஆய்படு பொருள்களை விளக்கி மாவட்டச்செயலாளர் தோழர் ரவீந்திரன் உரையாற்றினார். மாவட்டசெயற்குழுவை மாநில உதவிச்செயலாளர் தோழர் பழனிச்சாமி, மாநில செயற்குழு முடிவுகள் குறித்துப்பேசித் தொடங்கி வைத்தார்.

வேலைநிறுத்தம் போன்ற சூழ்நிலைகளில் வெளிப்படுகின்ற நமது பலகீனத்தை மறைக்க அல்ல – பலகீனத்தைச் சரிசெய்ய நாம் தொழிற்சங்க உறுப்பினர்களை அரசியல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நமது மாவட்டம் மாநில அளவில் 5ஆவது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டியதுடன், வீச்சாகச் செயல்பட்டால் தொழிற்சங்கச் செயல்பாடுகளில் இன்னும் சிறப்பான உயரங்களை நாம் எட்ட முடியும் என்ற ஆலோசனையை முன்வைத்தார்.

வந்திருந்த கிளைச்செயலர்களும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் ஆய்படு பொருள்களின் மீது தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். பொதுவாக LCM மற்றும் Work Committeeயில் நிலுவையில் இருக்கக்கூடிய தீர்க்கப்படாத பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினார்கள். அமைப்பு நிலை விவாதத்தைத் தொடர்ந்து தொகுப்புரையுடன் செயற்குழு முடிவடைந்தது.

சிவகாசி கிளைகளின் மாநாடு

          சிவகாசி SDOP கிளை மற்றும் சிவகாசி OCB கிளை ஆகியவற்றின் கூட்டுக்கிளை மாநாடு 2013 ஜனவரி 12ஆம் நாள் சிவகாசியில் நடைபெற உள்ளது. இடமும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...