Monday, April 13, 2015

'நான் போனா கையேந்தி பவன்...நீ வாங்கி கொடுத்தா ஆரிய பவன்!'

நிலம் கையகப்படுத்தும் மசோதாவால் நிலமற்ற 30 கோடி மக்கள் வேலை வாய்ப்பு பெற முடியும் என அமைச்சர் அருண் ஜெட்லி சொல்வது எந்த அளவுக்கு உண்மை?
'நான் தனியாக போனா கையேந்தி பவன்; நீ வாங்கி கொடுத்தா ஆரிய பவன்' அல்லது 'நான் தனியா போனா அரசு பஸ்; உன் செலவில வந்தா வால்வோ ஏசி' என தங்கள் நிறுவனங்களில் கடைபிடிக்கும் பொருளாதார சிக்கனங்களை, அரசிடம் சலுகைகளாக சுய நலத்துக்கு அனுபவிக்கின்ற போது வேறு நிலை எடுக்கின்றன. அரசிடம் அனைத்து சலுகைகளையும் பெறவே, பெரு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு என்ற ஏமாற்று வித்தையை அரசின் மூலமாக ஆடிக்காட்டுகின்றன.இதுவரை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (special economic zone) மூலம் இடம் இலவசம், தண்ணீர் இலவசம், 24 மணிநேர மின் வசதி, 10 வருடங்களுக்கு வரி விலக்கு என அனுபவித்து விட்டு எத்தனை பேருக்கு வேலை கொடுத்து வாழ வைத்தன? அப்படியே கொடுத்தாலும் வேலை நிரந்தரம் என்பது எட்டாக்கனி; hire and fire என்ற மேல்நாட்டு பொருளாதார சித்தாந்தப்படி எந்த நேரமும் வெளியே போ' என விரட்டும் கொள்கைகளைக் கொண்ட நிறுவனங்களே அதிகம்.

மென்பொருள் நிறுவனங்களில் இப்போது வேலை பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ள நிலையில் core sector எனப்படும் mechanical சார்ந்த தொழிற்சாலைகளில் இயந்திர மயம் அதிகமாகி விட்டது. வரும் காலங்களில் ரோபோ எனும் இயந்திர மனிதர்களால் வேலை வாய்ப்பு பெருமளவு பறிபோகும் நிலை தான் அதிகம்.இப்படி இருக்கும்போது கேட்பாருக்கு மதி இல்லை எனில், எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டும் என்றும், ஆமை 60 கிலோமீட்டர் வேகம் ஓடும் என்றும் சொல்வார்கள்.நிலம் கையகப்படுத்தல் மசோதாவினால் ஆரம்பத்தில் வேலை பெருகுகிற மாதிரி தோன்றினாலும் 'எல்லாம் தோற்ற மாயைகளே'. உங்கள் இடத்தை நேரடியாக அபகரிக்க முடியாத தாதாக்கள், அரசியல்வாதிகள் நிறுவனங்கள் வழியாக அரசின் துணையோடு அபகரிப்பது போல் தான். இதனால் குறைந்த பட்சம் ஊருக்கு 30 கேடிக்கள் தான் பலனைடைவர். 30 கோடி மக்களுக்கு வேலை என்பது கானல் நீர்.
விகடன் வாசகர் பக்கம் ஷான், (மயிலாடுதுறை)

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...