Wednesday, April 22, 2015

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம் 90 சதவீதம் பேர் பங்கேற்பு

தினத்தந்தி செய்தி
 

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி விருதுநகரில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.
கோரிக்கை:-
அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பல்வேறு கோரிக் கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் சேவை விரிவாக்கத் திற்கு தேவையான உபகரணங் களை வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராமப்புற தரைவழி தொலைபேசி சேவையில் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய வேண்டும். செல் போன் கோபுரங்களுக்கு என தனியாக ஒரு துணை நிறுவனம் அமைக்கும் திட் டத்தை கைவிட வேண்டும். இயக்குனர் மட்டங்களில் இருக்கும் காலி இடங்களை நிரப்ப வேண்டும். நிலம் உள்பட அனைத்து சொத்துகளையும் பி.எஸ்.என்.எல்.லிடம் ஒப்படைக்க வேண்டும். அலைக்கற்றை கட்டணம் ரூ.6 ஆயிரத்து 700 கோடியை உட னடியாக வழங்க வேண்டும்.மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல். சேவையை கட்டாயமாக்க வேண்டும். அலைக்கற்றைகளுக்கான கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், 4–ஜி சேவையை தொடங்க வேண்டும். ஒய்வூதிய பலன்களை மாற்றி அமைக்க வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 90 சதவீதம் ஓய்வூதிய பலன்களை அமல்படுத்த வேண்டும்.புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கை களை பி.எஸ்.என்.எல். தொழிற் சங்கங்கள் நிறைவேற்ற வலியுறுத்தி வந்தன. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாத நிலையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்து இருந்தது.
வேலைநிறுத்தம்
அதன்படி விருதுநகர் மாவட்டத்திலும் இந்த 20 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி வேலைநிறுத்தம் நடந் தது. மொத்தம் 555 ஊழியர் களில் 451 பேர் வேலைநிறுத் தத்தில் பங்கேற்று உள்ளனர். அதாவது 90 சதவீதம் பேர் வேலை நிறுத் தத்தில் பங்கேற்று உள்ளனர். வேலைநிறுத்தம் செய்ததில் 72 பேர் பெண்கள் ஆவார். மேலும் கோரிக்கை களை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த வேலை நிறுத்தத்தால் பி.எஸ்.என்.எல்.அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...