Friday, April 12, 2013

Corporate கம்பெனிகளின் சட்ட விரோத நடவடிக்கை

7 மாநிலங்களில் உரிமம் பெறாமல் ஏர்டெல் நிறுவனம் அளித்து வந்த 3ஜி சேவையை புதிய வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.ஏர்டெல் நிறுவனம் சட்டத்துக்கு விரோதமாக 3ஜி சேவையை வழங்கி வருவதற்கு விதிக்கப்பட்ட அபராதம் அதிகரிக்கப்படும் என்றும், கொல்கத்தா, மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உரிமம் பெறாததால், புதிதாக சேவை பெறும் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை அளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனமும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஏர்டெல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...