Sunday, April 7, 2013

ஆதித்ய பிர்லா, ஐடியா செல்லுலர் சேர்ந்து ரூ.3900 கோடி வரி முறைகேடு

          இந்தியாவின் ஆதித்யா பிர்லா தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டில் ஐடியா செல்லுலர் நிறுவனத்துடன் இணைந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் தொலைத்தொடர்பு உரிமங்கள், பணப்பரிமாற்றம் போன்ற அனைத்து பொறுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டதாக அறிவித்தது.இரு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதை, இந்திய வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. ஆதித்ய பிர்லா நிறுவனம் 2400 கோடியும், ஐடியா செல்லுலர் நிறுவனம் 1500 கோடியும் செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.குறைவான விலையில் பங்குகள் கைமாற்றப்பட்டாலும், இதனால் மூலதன ஆதாயம் அதிகரித்துள்ளதாக வருமான வரி அலுவலகம் கருதுவதாக அலுவலகக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.தொடர்ந்து corporate கம்பெனிகள் வரி ஏய்பை தொடர்கின்றன .எல்லாம் தனியாரிடம் சென்றால்  இப்படிபட்ட முறைகேடுகள்  தொடரத்தான் செய்யும்.
                                                                                                                      நன்றி :-வெப் துனியா 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...