இன்று (02-04-2013) விருதுநகரில் நடைபெற்ற சேவா BSNL மாவட்டச் செயற்குழுவில் நமது மாவட்ட செயலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். BSNLEU சங்கத்தை பொறுத்தவரை SC/ST நலன்களை பாதுகாப்பதில் ஒரு முன்னணிச் சங்கமாக திகழ்வதை மாவட்ட செயலர் சுட்டிகாட்டினார். தீண்டாமை ஒழிப்பு முன்ணணியில் நமது BSNLEU சங்கம் ஒரு உறுப்பினராக செயல்படுவதையும், சமீபத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தருமபுரி தலித் மக்களுக்காக வழக்கு நிதியாக ரூபாய் 1 லட்சம் வழங்கபட்டதையும் மாவட்ட செயலர் சுட்டி காட்டினார்.
கூட்டணி தர்மத்தை BSNLEU மாவட்ட சங்கம் உறுதியாக கடைபிடிக்கும் என மாவட்ட செயலர் உறுதி அளித்தார். அதே நேரத்தில் சேவா BSNL அமைப்பும் அதில் உறுதியாக இருக்க வேண்டும் என மாவட்ட செயலர் வலியுறுத்தினார்.
செயற்குழுவுக்கு வாழ்த்த அழைத்த சேவா மாவட்ட செயலர் G.வைரமணி அவர்களுக்கு BSNLEU சங்கத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
சேவா மாநில செயலர் தோழர் P.N. பெருமாள் அவர்கள் தனது சிறப்புரையில் SC/ST நலன்களுக்கு NFTE சங்கம் செய்த துரோகங்களையும், NFTE சங்கம் அங்கீகரிகப்பட்ட சங்கமாக இருந்திருந்தால் BSNL நிறுவனம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார் .
No comments:
Post a Comment