Tuesday, August 25, 2015

TTA போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்கள்

நமது மாவட்டத்தில் வருங்கால ஜூனியர்  இன்ஜினியர்களாக தேர்வு பெற்ற கீழ் கண்ட தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் பாராட்டுகள் .
                     சபாஷ் தோழர்களே  
1.தோழர் .காளிதாஸ் ,ராஜபாளையம் 
2. தோழர்.தங்கதுரை ,ஸ்ரீவில்லிபுத்தூர் 
3.தோழர் அழகப்பன் ,ஸ்ரீவில்லிபுத்தூர் 
4.தோழர் பேச்சிமுத்து ,சிவகாசி 
5.தோழர் முத்துசாமி ,சிவகாசி 
6. தோழர் .ஜெயகுமார் ,அருப்புகோட்டை 
தோழர்கள் தங்கதுரை மற்றும் ஜெயக்குமார் அவர்கள் நமது சங்கம் சார்பாக லோக்கல் கவுன்சில் உறுப்பினர்களாக உள்ளனர் ,தோழர் முத்துசாமி அவர்கள் மாவட்ட உதவி செயலராக உள்ளார் .

Thursday, August 20, 2015

சுற்றறிக்கை எண். 56

வட்டியை குறைக்க வலியுறுத்தி சொசைட்டி தலைவருடன் சந்திப்பு…மாநில சங்க சுற்றறிக்கை எண். 56 படிக்க :-Click Here

செப்டம்பர் 2 வேலை நிறுத்தம்



தேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க தமிழ் மாநில BSNLEU, NFTE BSNL, TEPU, SEWA BSNL, SNATTA ஆகிய சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை படிக்க :-Click Here

சிவகாசி பொது குழு கூட்டம்

                          நெஞ்சத்தை கிள்ளிய சிவகாசி                     கிளை பொது குழு கூட்டம் 
        19-08-2015 அன்று சிவகாசி கிளைகளின் கூட்டு பொது குழு கூட்டம் கிளை தலைவர்கள் தோழர்கள் கருப்பசாமி மற்றும் அழகுராஜ் அவர்களின் கூட்டு தலைமையின் கீழ் சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர்கள் தோழர் ஜெயபாண்டியன் மற்றும் M கருப்பசாமி அவரகள சமர்ப்பித்த ஆய்வறிக்கை மீது விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டிய அவசியத்தையும் , மாவட்ட மற்றும் விரிவடைந்த மாநில செயற்குழுவின் முடிவுகளை விளக்கி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி , மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி , ஒப்பந்த ஊழியர் சங்க கிளை செயலர் தோழர் ராமசந்திரன் ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ஆகியோர் பேசினர் .மார்ச் 8,9 தேதிகளில் நாம் நடத்த உள்ள 8 வது மாவட்ட மாநாட்டுக்கு வரவேற்பு குழு செயலராக தோழர் ஜெயபாண்டியன் அவர்களும் வரவேற்பு குழு பொருளராக தோழர் A .இன்பராஜ் அவர்களும் நியமிக்க பட்டனர் .மாவட்ட மாநாட்டுக்கு நிதி தேவையின் அடிப்படையை மாவட்ட செயலர் விரிவாக கூறினார் .அதன் பின் பேசிய மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தன் பங்களிப்பாக ரூபாய் 5000/- ஐ  அறிவித்தவுடன் ஒட்டு மொத்த பொது குழுவில் பெரும் எழுச்சி ஏற்பட்டது .அள்ளி தந்த பூமியாம் BSNLEU சங்கத்திற்கு நன்றி கடனாய் நன்கொடையை வாரி வழங்க உடனடியாக பெரும் பாலான தோழர்கள் அதில் தங்கள் நன்கொடையை அறிவித்தனர் .உணர்வு பூர்வமாக நம் சங்கம் அனைவரின் நெஞ்சத்தில் உள்ளதை கண் கூடாக பார்க்க முடிந்தது .மாவட்ட மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கு ஒரு உற்சாகத்தை சிவகாசி கிளை பொது குழு கூட்டம் தந்தது என்றால் அது மிகை அல்ல .தோழர் ராஜு அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது .


Monday, August 17, 2015

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் பொது குழு கூட்டம் 17-08-2015 அன்று தோழர் வெங்கடசாமி கிளை தலைவர் தலைமையில் நடைபெற்றது .கிளை செயலர் தோழர் சமுத்திரம் அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கை மீது விவாதம் நடைபெற்றது . செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் பற்றி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி மற்றும் மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் அவர்கள் பேசினார்கள் .மாவட்ட மற்றும் விரிவடைந்த  மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி மாவட்ட செயலர் பேசினார் .ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர் ,புளுகாண்டி அவர்கள் பேசினார் .தோழர் L தங்கதுரை அவர்கள் நன்றி கூறினார் .

Saturday, August 15, 2015

சுதந்திர தினம்

அனைவருக்கும் புரட்சிகர சுதந்திர தின வாழ்த்துகள்

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...