Monday, February 9, 2015

அமைப்பு தினம்

தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் 07-02-2015 அன்று விருதுநகர் மாவட்டம் முழுவதும்  எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது .


Wednesday, February 4, 2015

சிம் கார்டுகள் ஒதுக்கீடு

       தமிழகத்தில் சிம் பற்றாக்குறையை சரி செய்ய மாநில நிர்வாகத்தின் கவனத்தை ஈர்கும் முகமாக நாம் நடத்திய இயக்கத்தின் பலனாகவும் , நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் இயக்குனர் (CM) அவர்களை சந்தித்து பற்றாக்குறையை சுட்டிகாட்டியதின் விளைவாகவும்  தமிழகத்திற்கு தற்போது 2 லட்சம் சிம் கார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இது நமது இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும் .

Monday, February 2, 2015

ESS - ERP - Login

            அன்புத் தோழர்களுக்கு நமக்கான இணைய தளங்களில் ESS - ERP - Login இணைக்கப்பட்டுள்ளது. myhr தளத்தைப் பயன்படுத்தியதுபோல் இதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எழுச்சிகரமான கடலூர் கருத்தரங்கம்

 எழுச்சிகரமான கடலூர் கருத்தரங்கம் மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here
கடலூர் கருத்தரங்கத்தின் சில காட்சிகள் பார்க்க :-Click Here

Saturday, January 31, 2015

பணி ஓய்வு

       விருதுநகர் GM அலுவலகத்தில் பணி புரிந்த தோழர் S நாராயணன் , SSS அவர்கள் இன்று பணி ஓய்வு பெற்றார் .அந்தமான் தீவுகளில் தன் பணியை துவக்கிய தோழர் நாராயணன் ,காரைக்குடியில் பணியை தொடர்ந்து விருதுநகரில் பணி நிறைவு செய்தார் .ஜனவரி மாதம்  பணி நிறைவு உள்ள சூழலில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் நாராயணன் நமது அனைத்து இயக்கங்களிலும் கலந்து கொண்டவர் . பணி நிறைவை ஒட்டி அவர் மாநில சங்கத்திற்கு ரூபாய் 1000/ மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 2000/-மற்றும் கிளை  சங்கத்திற்கு ரூபாய் 2000 என ஆக மொத்தம் ரூபாய் 5000/- நன்கொடையாக வழங்கியுள்ளார் .அவரது பணி ஓய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .

BSNL ஐ பாதுகாக்க திரண்டு எழுந்த தமிழகம்

      BSNL நிறுவன புத்தாக்கதிற்காக மத்திய அரசின் கவனத்தை 
ஈர்க்க தேசம் தழுவிய அளவில் மார்ச் 17 முதல் தொடங்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி 30-01-2015 அன்று கடலூரில் FORUM சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது .BSNL மற்றும் MTNL நிறுவன இணைப்பு நமது BSNL நிறுவனத்திற்கு எவ்விதத்திலும் பயன் தராது என்பது மட்டும் அன்றி நமது நிறுவனத்தை மேலும் 
சீரழித்து விடும் என்றும் , 01-01-2017 முதல் அமலாகவேண்டிய  ஊதிய மாற்றம் என்பது நலிவடைந்த நமது நிறுவனத்திற்கு   மறுக்கப்படும் அபாயத்தையும் , இதனால் ஓய்வூதியம் பெறுவோரும் பாதிக்கப் படும் நிலை உள்ளதையும் நமது பொது செயலர் சுட்டி காட்டினார் .நிறுவனத்தை   பாதுகாக்க அனைவரும் சங்க வேறுபாடு இன்றி ஒன்று திரண்டது  வர உள்ள போராட்டத்தை 100% வெற்றிகரமாக்க கடலூர் கருத்தரங்கம் பறைசாற்றியது .நமது மாவட்டத்தில் இருந்து நமது BSNLEU சங்கம் சார்பாக 41 பேர் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் .ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் வேல்சாமி கலந்து கொண்டார் .

Thursday, January 29, 2015

A .கந்தசாமி ,STS பணி ஓய்வு பாராட்டு விழா

   ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர் A .கந்தசாமி ,STS வரும் 31-01-2015 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சங்கம் சார்பாக சீரும் சிறப்புமாய் 29-01-2015 அன்று தோழர் தங்கதுரை தலைமையில் கிளை செயலர் தோழர் சமுத்திரத்தின் வாழ்த்துரையுடன் தொடங்கியது .கே ஜி போஸ் பாசறையாம் ஈரோடு மாவட்டத்தில் தன பணியை தொடங்கிய தோழர் கந்தசாமி விருதுநகர் மாவட்டத்தில் பணி ஓய்வு பெறுகிறார் .அன்னாரை பாராட்டி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ,தோழர் புளுகாண்டி ,தோழர் பெருமாள்சாமி , தோழர் முனியாண்டி ,முது பெரும் தோழர்கள் முத்தையா, மாசானம் ஆகியோர் பேசினர் .மாவட்ட செயலர் வாழ்த்தும் போது BSNL நிறுவனம் இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளையும் ,BSNL புத்தாக்கத்திற்கு வர உள்ள போராட்டத்தின் முக்கியத்தையும் ,அதை 100% வெற்றியாக்க வேண்டிய அவசியத்தையும் கூறி தோழர் கந்தசாமி அவர்களை பாராட்டி பேசினார் .தோழர் ரவிச்சந்திரன் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது . ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்கள் நிறைவாக செய்தது பாராட்டுக்குறியது . 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...