Sunday, August 31, 2014
Friday, August 29, 2014
கொல்கத்தா அனைத்திந்திய மாநாடு
நவம்பர் மாதம் கொல்கத்தா நகரில் நடைபெற உள்ள அனைத்திந்திய மகாநாட்டிற்கான சார்பாளர் மற்றும் பார்வையாளர் எண்ணிக்கை 2012 ஜனவரி மாதம் முதல் 2013 ஆண்டு டிசம்பர் மாதம் வரை செலுத்தியுள்ள கோட்டா அடிப்படையில் இன்று மத்திய சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி நமது விருதுநகர் மாவட்டத்தில் 3 சார்பாளர்களும் 2 பார்வையாளர்களும் மட்டுமே கலந்து கொள்ள முடியும் .நமது மாவட்டத்தில் சார்பாளர்களாக தோழர்கள் S ரவீந்திரன், A .சமுத்திரகனி மற்றும் தோழர் T.முத்துராமலிங்கம் அவர்கள் கலந்து கொள்வர் .சார்பாளர் எண்ணிக்கை பட்டியல் பார்க்க :-Click Here
Tuesday, August 26, 2014
சிறப்பு செயற்குழு
இன்று (26-08-2014) நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பு மாவட்ட செயற்குழு நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமை தாங்கினார். கிளை செயலர்கள் அனைவரும் மாநில மகாநாட்டு வசூலை நிறைவு செய்ய மாவட்ட செயற்குழு வலியுறுத்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை முழுமையாக வசூலை நிறைவு செய்தமைக்கு கிளை செயலர் தோழர் சமுத்திரம் அவர்களை மாவட்ட செயற்குழு வெகுவாக பாராட்டியது. இதுவரை வசூலான தொகையான 40,000/- ரூபாயை மாநில சங்கத்திடம் உடனடியாக கொடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 30-08-2014 அன்று நடைபெற உள்ள விரிவடைந்த மாவட்ட செயற்குழுவிற்கு பெருமளவில் ஊழியர்களை திரட்டுவது என அனைவரையும் மாவட்ட செயற்குழு கேட்டு கொண்டது. அமைப்பு ரீதியான பிரச்சனைகளை கையாள உடனடி நடவடிக்கைகளை எடுப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 30-08-2014 அன்று நடைபெற உள்ள செயற்குழுவில் " மாறியுள்ள சூழலில் வணிக யுக்திகள் " என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ESI அட்டை வழங்கும் நிகழ்ச்சியும், குடும்ப விழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற ஊழியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வும் விரிவடைந்த செயற்குழுவில் நடைபெற உள்ளன.
எழுச்சிமிகு ஒப்பந்த ஊழியர் தர்ணா போராட்டம்
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அகில இந்திய சங்கத்தின் போராட்ட அறைகூவலின் ஒரு பகுதியாக தர்ணா போராட்டம் இன்று விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது .ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் M .செல்வராஜூ பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் A .சமுத்திரகனி அவர்களின் கூட்டு தலைமையின் கீழ் நடைபெற்ற தர்ணாவை ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் R .முனியசாமி தொடக்கி வைத்து பேசினார் . நமது தமிழ் மாநில உதவி செயலர் தோழர் .C .பழனிசாமி அவர்கள் கோரிக்கைகளை விளக்கி விரிவாக உரை நிகழ்த்தினார் .மாவட்டம் முழுவதும் இருந்து 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் .சிறப்பாக அணி திரட்டிய அனைவருக்கும் இரண்டு மாவட்ட சங்கங்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
Thursday, August 21, 2014
Wednesday, August 20, 2014
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...



















