Saturday, December 7, 2013

13 வது மாவட்ட செயற்குழு முடிவுகள்

07-12-2013 அன்று சிவகாசியில் நடைபெற்ற 13 வது மாவட்ட செயற்குழுவில் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன .
 மாவட்ட மாநாட்டை அருப்புகோட்டையில் மார்ச் மாதம் 5,6 தேதிகளில்  நடத்துவது.மாநாட்டை அருப்புகோட்டை கிளை சங்கம் ஏற்று நடத்தும் .வரவேற்ப்பு குழு தலைவராக அருப்புகோட்டை வர்த்தக சங்க செயலர் உயர்திரு .M .பாபு என்ற சங்கரநாராயணன் அவர்களும் வரவேற்பு குழு செயலராக அருப்புகோட்டை கிளை தலைவர் தோழர் U .B .உதயகுமார் அவர்களும் இருப்பர் .
2.முதல் நாள் சார்பாளர்கள் மற்றும் மாவட்ட சங்க  நிர்வாகிகள் கலந்து  கொள்ளும் பிரதிநிதிகள் அமர்வாக நடைபெறும் .ஆண்டறிக்கை ,நிதிநிலை அறிக்கை ,அமைப்பு நிலை விவாதம் ,சகோதர சங்க பிரதிநிதிகள் வாழ்த்துரை ஆகியவை  இடம் பெறும் .முதல் நாள் நிகழ்ச்சியை மாநில உதவி செயலர் தோழர் .C .பழனிசாமி அவர்கள் தொடக்கி  வைத்து உரை ஆற்றுவார் . சார்பாளர் கட்டணம் ரூபாய் 50/- என நிர்ணயம் செயப்பட்டுள்ளது .
3.இரண்டாம் நாள் பொது அரங்க நிகழ்வாக நடைபெறும் மாநாட்டை நமது மாநில செயலர் தோழர் S .செல்லப்பா அவர்கள் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துவார் .அன்று நடைபெறும் சேவை கருத்தரங்கில் நமது மாவட்ட பொது மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வர் .அன்றைய தினம் ரத்த தான முகாம்  ஒன்றை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது .2 வது  நாள் நிகழ்ச்சியில் ஜனநாயக மாதர் சங்க செயலர்  தோழியர் சுகந்தி  மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக அதன் மாநில தலைவர் தோழர் தமிழ்செல்வன்  அவர்களை   உரை ஆற்ற அழைக்க வேண்டும்.2ஆம்  நாள் நிகழ்ச்சியில் வாழ்த்துரைக்கு சகோதர சங்கம் சார்பாக யாரையும் அனுமதிப்பது இல்லை .இன்றைய கூட்டத்தில் மாநில உதவி செயலர் தோழர் C .பழனிசாமி அவர்கள் பேசும் போது விருதுநகர் மாவட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை  அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் எனவும் ,வேலை கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் எனவும் ,வர உள்ள நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 50 பேராவது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார் .நமது மாநில உதவி செயலர் நமது விருதுநகர் இணைய தளத்தை மிகவும் பாராட்டினார் .தோழர் .மதி கண்ணன் ,TTA அவர்கள் LCM  கூட்ட நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை சமர்பித்தார் .5 pair கேபிள் மற்றும் டிராப் wire பிரச்னை பற்றி தோழர் கருப்பசாமி கூறினார் .P .Ramachandrapuram பவர் பிளான்ட் ,Task Force for  cable work ,சோழபுரம் தண்ணீர் பிரச்னை ,64 DSLAM free  @ சோழபுரம் ,ANRAX கார்டு  ரிப்பேர் அண்ட் சர்வீஸ் போன்ற ராஜபாளையம் பகுதி பிரச்சனைகளை தோழர் முத்துராமலிங்கம் பேசினார் .கல்குறிச்சி old என்ஜின் scrape பற்றி தோழர் சந்திரசேகரன் கூறினார்.மாவட்ட உதவி செயலர் தோழர் .M .முத்துசாமி பேசும்  போது நான் இவ்வளவு உயர்வான சம்பளம் வாங்குவதற்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்கமே காரணம் என்பதை தெளிவாக கூறினார்.மாவட்ட் மகாநாட்டிற்கு அனைத்து கிளை மற்றும் மாவட்ட் சங்க நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக  உறுதி அளித்து உள்ளனர் தோழியர் பகவதி அவர்கள் தன்னால் முடிந்த அளவு நன்கொடை வாங்கித்தருவேன் என்று கூறியதை அனைவரும்  கரவொலி செய்து வரவேற்றனர் .மாவட்ட செயற்குழு நடத்த தன இல்லத்தில் இடம் கொடுத்து சிறப்பான உணவையும் வழங்கி நமது மாவட்ட தலைவர் A .சமுத்திரகனி அவர்கள் அனைவர் நெஞ்சத்திலும்   இடம் பெற்றார் .மேலும் மாவட்ட மகாநாட்டிற்கு தன் பங்காக ரூபாய் 5000/- வழங்கினார் .ஓய்வூதியர் சங்கம் சார்பாக கலந்து கொண்ட தோழர் M .பெருமாள்சாமி  அவர்கள் தன பங்களிப்பாக ரூபாய் 1000/-வழங்கினார் .தோழர் ராஜ்மோகன் அவர்கள் பேசும் போது கேபிள் கட் பிரச்சனையை அவர் கையாண்ட விசயத்தை கூறினார் .எந்த exchange இல் பிரச்னை  என்றாலும் நான் வர தயாராய் இருக்கிறேன் என்று அவர் கூறியது பெருமைக்குரிய விசயமாக இருந்தது.ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர் முனியசாமி பேசும் போது ஒப்பந்த ஊழியர் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி பற்றியும் அவரகள் பிரச்சனைகள் பற்றியும் விரிவாக பேசினார்.ஜனவரி 7 ஆம் தேதி நிகழ்ச்சிக்கு  விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஒரு பஸ் பிடித்து 50 பேர் கலந்து கொள்வது என்று ஏகமானதாக முடிவு செய்யப்பட்டது .மாவட்ட பொருளர் தோழர் S .வெங்கடப்பன் நன்றி கூறி செயற்குழுவை முடித்து வைத்தார் .
மாவட்ட தலைவரின் தலைமை உரை 
செயற்குழுவின் ஒரு பகுதி 
மாவட்ட செயலர்  அறிக்கை தாக்கல் 
சமுத்திரகனி ரூபாய் 5000 நன்கொடையை  மாவட்ட செயலரிடம் அளித்தல் 

மாநில உதவி செயலர் பழனிச்சாமி அவர்களின் சிறப்புரை 
மதிகண்ணன் லோக்கல் கவுன்சில் விசயமாக  அறிக்கை தாக்கல் 
தோழர் பெருமாள்சாமி அவர்களின் உரை 
ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட செயலர் தோழர் முனியசாமி 
தோழர் பெருமாள்சாமி அவர்கள் ரூபாய் 1000 நன்கொடை அளித்தல் 

Friday, December 6, 2013

சபாஷ்

          நிறுவன ஆளுமைக்காக நமது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு "நன்று" என DPE அமைப்பால் கிரேடு வழங்கப்பட்டுள்ளது.
செய்தி பார்க்க : Click Here

அஞ்சலி



          மனித மாண்பு, சுயமரியாதை, அநீதிக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் மீது ஈர்ப்பு செலுத்திய ஒரே தலைவராக விளங்கிய மண்டேலா அவர்களின் மறைவிற்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவிக்கிறது.

Thursday, December 5, 2013

ஒப்பந்த ஊழியர்களின் கையெழுத்து இயக்கம்

ஒப்பந்த ஊழியர்களின் 5 வது மாநில மகாநாட்டின் முடிவின்படி ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை முன் வைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் இன்று விருதுநகரில் தொடங்கியது .கூட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர் தோழியர்.மாரியம்மாள் தலைமை தாங்க, தோழர் பாண்டியராஜன் வந்த அனைவரையும் வரவேற்க   பி எஸ் என் எல் ஊழியர் சங்க  மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார் .மாவட்ட உதவி செயலர் தோழர் M.முத்துசாமி ,கிளை செயலர்கள் தோழர்கள்.M.S.இளமாறன், சிங்காரவேலு  மற்றும் தோழர் .சந்திரசேகரன் அவர்கள் வாழ்த்தி பேசினார்கள் .
கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலர் 
           கோரிக்கைகளை விளக்கி மாவட்ட உதவி செயலர் 
கோரிக்கைகளை விளக்கி மாவட்ட உதவி செயலர் 
கோரிக்கைகளை விளக்கி GM அலுவலக கிளை செயலர்  
       தோழியர் மாரியம்மாவின் முதல் கையெழுத்து  
மாவட்ட செயலரின் கையெழுத்து 
                  கலந்து கொண்ட ஒப்பந்த ஊழியர்களின் ஒரு பகுதி 
 கலந்து கொண்ட ஒப்பந்த ஊழியர்களின் ஒரு பகுதி


தொலைத் தொடர்பு தோழனில் விருதுநகர் மாவட்ட செய்தி

சூழலின் தேவை கருதி முன் செல்லும் பாதையின் அடிகளில் ஒன்றாக…

2013 நவம்பர் புரட்சி தினத்திற்கு முதல்நாள் விருதுநகர் மாவட்டச் செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் சமுத்திரகனியின் தலைமையிலும், மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் அவர்களின் தொடக்கஉரையுடனும் நடைபெற்றது. செயற்குழுவில் மாவட்ட மாநாட்டை மார்ச் மாதம் முதல் வாரத்தில் அருப்புக்கோட்டையில் நடத்துவது என்ற முடிவும் அது தொடர்பான திட்டமிடலும் செயல் வடிவம் பெற்றன.

தொடர்ந்து மாநில துணைத் தலைவர் தோழர் வெங்கட்ராமன் ‘தலைமைத்துவம்’ என்ற தலைப்பில் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் என்ற வகையில் கலந்து கொண்ட 56 தோழர்களுக்குப் பயிற்சி அளித்தார். தலைமைத்துவத்தின் கூறுகளான, ஆளுமை, வாழ்க்கைத்திறன், குழுவாதல், அணி உணர்வு, இலக்கை நிர்ணயித்தல், நேர நிர்வாகம், செயல்படுத்தலும் மதிப்பிடலும், சுயவிமர்சனப் பண்பு, அறிவியல் பார்வையும் அறிவார்ந்த அனுகுமுறையும், பகிர்தல், அரவணைத்தல், அணிதிரட்டல் என அனைத்தையும் தெளிவாக எடுத்துக் காட்டுகளுடன் முன்வைத்தார். முதுகலை மேலாண்மைப் படிப்பிற்கான பாடங்களை அனைத்துத் தோழர்களுக்கும் புரியும்படி விளக்கினார். இவை நம் அன்றாட சங்கப் பணிகளில் எந்த அளவிற்கு அவசியமானவை என்பதையும் தெளிவுபடக் கூறினார். செயலூக்கமிக்க விருதுநகர் மாவட்டத் தோழர்கள் மேலும் மேலும் அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு இரண்டு மணிநேரம் நடைபெற்ற இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

தொடர்ந்து நமது சங்கத்தின் முன்னாள் மாவட்ட நிர்வாகியும் அதிகாரிகள் சங்கத்தின் இன்றைய மாநில நிர்வாகிகளில் ஒருவருமாக உள்ள தோழர் ராதாகிருஷ்ணன் CDA விதிகள் பற்றிய வகுப்பை ஒருங்கிணைத்தார். நிறுவனம் தொடங்கி 6 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவான விதிகள் பற்றிய வெறும் ஒப்பித்தலாக இல்லாமல், விதிகளில் நமக்குப் பாதகமான விஷயங்கள் எவை எவை? அவற்றை நமக்குச் சாதகமாக நாம் எப்படி மாற்றிக் கொள்வது. விதிகள் காட்டும் ஒழுங்கிளைத்தாண்டி, நமக்குத் தேவையான அடிப்படையான சுய ஒழுங்கு, நாம் அணியாதல் மற்றும் அதன் அவசியம் என விரிவான தளத்தில் விளக்கமளித்தார். ஊழியர்களை தற்காத்தலுக்கான உதவியாளர்களை நம்மாவட்டத்தில் உருவாக்க வேண்டிய தேவையை உணர்த்தியதுடன் அதற்கான முயற்சியையும் தோழர் ராதாகிருஷ்ணனின் உதவியுடன் செயல்படுத்துவது என்ற முடிவுடன் வகுப்பு நிறைவு பெற்றது. மாவட்டப் பொருளாளர் தோழர் வெங்கடப்பன் நன்றி கூறினார்.

டிசம்பர் 6 - Dr.அம்பேத்கர் நினைவு நாள்

          சுயமரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம்! அதை இழந்து வாழ்வது மிகப் பெரிய அவமானம். சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது எளிதான காரியமல்ல. பல துன்பங்களை எதிர்கொள்ளும்படி இருக்கும்; கடினமாகவும் போராட வேண்டியிருக்கும்.
- Dr.அம்பேத்கர்


          வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல், பாராட்டை எதிர்பாராமல் கடமையைச் செய்யுங்கள்! உங்கள் திறமையை, நேர்மையைக் கண்டு எதிரியும் உங்களை மதிக்க முன்வருவான்!
- Dr.அம்பேத்கர்

கார்ட்டூன்

நன்றி : தினமணி

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...