Friday, June 7, 2013

78.2 தொடர்பாக

பொதுச் செயலர் தோழர் அபிமன்யு அவர்களிடமிருந்து...

Dear Comrade, at 18.45Hours CMD BSNL informed me over phone that DOT has approved 78.2% IDA merger and order will be issued shortly. Nothing is confirmed, unless the order is issued by DOT. Let us wait for the order. Till then there should not be any let up in the strike preparations-
Com. P.Abhimanyu, GS., BSNLEU.

அன்புத் தோழர்களே இன்று 6.45 மணிக்கு, CMD BSNL, தொலைபேசியில் DOT 78.2% IDA இணைப்பிற்கு ஒப்புதழ் அளித்ததாகவும் விரைவில் ஆணை வெளியிடப்படும் என்றும் கூறினார். DOTயால் ஆணை வெளியிடப்படாதவரை எதையும் உறுதி சொல்லமுடியாது. ஆணைக்காகக் காத்திருப்போம். அதுவரை வேலைநிறுத்தத்திற்கான ஆயத்தங்களில் எந்தத் தொய்வும் இருக்க வேண்டாம்.
தோழர் P.அபிமன்யு, பொதுச் செயலர், BSNLEU

Thursday, June 6, 2013

வெற்றி விழாவில் பொது செயலரின் உரை வீச்சு

          தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் லாப வேட் கைக்காக அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ் என்எல்-லை முடக்க மத்திய அரசு சதி செய்வதாக கோவை யில் நடைபெற்ற பிஎஸ் என்எல் ஊழியர் சங்க வெற்றி விழா கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் அபிமன்யு குற்றம் சாட்டினார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றதையடுத்து சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் வெற்றி விழா சிறப்பு கூட்டம் செவ்வாயன்று கோவையிலுள்ள பிஎஸ்என்எல் மெயின் எக்சேஞ்சில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.மாரிமுத்து தலைமை தாங்கினார்.மாநில துணை தலைவர் வி.வெங்கட்ராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த வெற்றி விழா கூட்டத்தில் கலந்து கொண்டு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் அபிமன்யு பேசியதாவது:பொதுத்துறை நிறுவனமாய் இருக்கிற பிஎஸ்என்எல்லில் நடைபெற்ற தொழிற் சங்க அங்கீகார ஆறு தேர் தல்களில் தொடர்ந்து ஐந்து முறை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து சங்கங்களும் பெருமளவு வாக்கு வங்கியில் சரிவை சந்தித்திருக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இந்த தேர்தலில் தனது வாக்கு வங்கியின் சதவிகிதத்தை அதிகரித்திருப்பதுடன், 48.6 சதவீதம் வாக்குகளை பெற்று முதன்மை சங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் நாசகர பாதையில் செல்லும் அரசின் கண்களை உருத்துகிறது. இதன் விளைவாகவே சிதம்பரம் உள்ளிட்ட நபர்களை கொண்டு சர்வ வல்லமை படைத்த குழுக்களை அமர்த்தியிருக் கிறார்கள்.பங்கு விற்பனை உள்ளிட்டு எந்த எந்த பாதையில் சென்றால் இதை வாரி சுருட்டலாம் என திட்ட மிடுகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 29 ஆயிரம் எக்சேஞ்சுகள் உள்ளன. இவற்றில் 28 ஆயிரம் எக்சேஞ்சுகள் கிராமப்புறங்களிலும், ஜார்க்கண்ட்,சத்திஸ்கர் உள்ளிட்ட மலைப் பகுதியிலும் உள்ளன. ஆனால் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நகர் புறத்தை தாண்டி ஒரு எக்சேஞ்ச் கூட இல்லை. இவர் களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள். தனியார் நிறுவனங்களோடு பிஎஸ்என்எல் போட்டியிடக் கூடாது. இதை முடக்க வேண்டும் என்பதற் காகவே வாடிக்கையாளர் கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பக் கூடாது என்கிற எண்ணத்தில் உதிரிபாகங்கள், கருவிகள் வாங்குவதில் இழுத்தடிப்பு போன்ற செயல் களில் அரசும், நிர்வாகமும் சேர்ந்து செயல்படுகிறது.இந்த நிலையிலேதான் ரிலையன்ஸ் நிறுவனம் யாருக் கும் தெரியப்படுத்தாமலே 45 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்தியது. அரசு பாலூட்டி, தேனூட்டி வளர்க்கின்ற இந்த தனியார் நிறுவனங்கள் தான் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களை இழந்து இருக்கின்றன. ரிலையன்ஸ் 1 கோடியே 60 லட் சம், டாடா 88 லட்சம், வோடா போன் 51 லட்சம், ஏர்டெல் 40 லட்சம், ஏர்செல் 36 லட்சம் என இந்த காலத்தில் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள் இந்த சரிவை சந்தித்திருக் கிற இந்த காலகட்டத்தில் தான் பிஎஸ்என்எல் ஊழியர் களின் தன்னலமற்ற சேவை யின் விளைவாய் 2 லட்சத்து 69 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள் ளோம். பொதுத்துறையை பாதுகாப்பது என்பது தேச நலனை பாதுகாப்பது என் கிற பார்வையில் நாம் போராடுகிறோம்.இந்த போராட்டத்தில் மும்முனை போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. அரசின் நாசகர கொள் கையை எதிர்த்த போராட்டம், சொந்த வீட்டிலே திருடுகிற நிர்வாகத்தை எதிர்த்த போராட்டம், நமது ஊழியர்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிற போராட்டம். இந்த மும்முனை போரட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம். அதன் பொருட்டே நமது சங்கத்திற்கு மாபெரும் வெற்றியை அளித்திருக் கிறார்கள் இதை பாதுகாப் போம்.இவ்வாறு அவர் பேசினார். மேலும், இந்த வெற்றி விழா கூட்டத்தில் சிஐடியு மாநில துணைச் செயலாளர் கருமலையான் கலந்து கொண்டு பேசியதாவது, தன்னலமற்ற தலைமையும், வர்க்க போரில் சமரசமற்ற போராட்டமே இந்த வெற்றியை பெற்று தந்திருக்கிறது. எதிர்வரும் தேர்தலில் ஆளும் மத்திய அரசு தோற்று விடும் என்று உறுதியாக தெரிந்த பின்னர் எவ்வளவு வேகமாக பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை தனியா ருக்கு விற்க முடியுமோ அவ்வளவு விரைவாக விற்கிற சதியை திட்டமிட்டு செய்து வருகிறார்கள். இந்திய நாட் டின் பொதுத்துறை நிறுவனங் களை பாதுகாப்பது என்பது இந்த தேசத்தின் நலனை பாதுகாப்பதற்கு ஒப்பாகும். இந்த வெற்றி தொழிலாளி வர்க்கத்திற்கு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாச கர கொள்கையில் ஈடுபடும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அனைத்து தரப்பு மக்களை திரட்டுகிற மகத்தான பணியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தோழர்கள் ஈடுபட வேண்டும் என்ற வேண்டு கோளோடு வாழ்த்துரையை நிறைவு செய்தார்.இவ்வெற்றி விழாவை வாழ்த்தி கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அனுப்பிருந்த வாழ்த்து தந்தியை மாநில செயலாளர் எஸ்.செல்லப்பா வாசித்தார். விழாவில் உழைக் கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் வி.பி. இந்திரா, TEPU  தொழிற்சங்க மாநில நிர்வாகி கோவிந்தராஜ், தமிழ்நாடு மாநில தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலாளர் M . முருகையா , எப்.என்.பிஇஒ மாநில செயலாளர் ஆர்.வி. ஜெயராமன், சேவா பிஎஸ் என்எல் மாநிலச் செயலாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். முன்னதாக, மாநில மாநாட்டு மலரை பொதுச் செயலாளர் அபிமன்யு வெளியிட கோவை மாவட்ட சங்க செயலாளர் சி.ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார், நாகர்கோவில் மாவட்ட இணையதளத்தை அபிமன்யு துவக்கி வைத்தார். மேலும், உடுமலை துரையரசன் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

                                                   நன்றி –தீக்கதீர் 06/06/13

DOT செயலரிடம் இன்று நடந்த பேச்சுவார்த்தை

UNITED FORUM OF BSNL UNIONS /ASSOCIATIONS சார்பாக இன்று தோழர் அபிமன்யு தலைமையில் DOT செயலர் திரு .ஸ்ரீ M .F .பாரூக்கி அவர்களை சந்தித்து  அமைச்சர்கள் குழுவிடம் BSNL /MTNL  மறு சீரமைப்பு விசயமாக UNITED FORUM சமர்ப்பித்த குறிப்பாணை நகலை DOT செயலரிடம் வழங்கினர்.மேலும் 78,2% ஐ.டி. இணைப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என வலியுருத்தினர்.DOTசெயலர் தலைவர்கள் கூறிய  கருத்துக்களை பொறுமையாக  கேட்டு  தீர்வுக்கு  தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்போம் என்றும், ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் இது  சம்பந்தமாக மீண்டும் தலைவர்களைசந்திக்க விரும்புகிறேன் என்று உறுதியளித்தார். இன்று நடந்த பேச்சு வார்த்தையில் NFTE சங்கம் சார்பாக இஸ்லாம் அஹமது , SNEA சங்கம் சார்பாக செபஸ்டின் ,AIBSNLEA சார்பாக பிரகலாத் ராய் , SNEA ஜோகி ஆகியோர் கலந்து கொண்டனர் .

Wednesday, June 5, 2013

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

          மத்திய அமைச்சரவை இன்று நக்ஸல்  மூலம் பாதிக்கப்பட்ட ஆந்திர பிரதேசம், பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் என 9 மாநிலங்களில் 2,199 இடங்களில் மொபைல் கோபுரங்களை நிறுவ ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்திட்டம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) மூலம் செயல்படுத்தப்படும்.


BSNL /MTNL மறு சீரமைப்பு

          BSNL / MTNL மறு சீரமைப்பு தொடர்பாக GOM (GROUP OF MINISTERS) கூட்டம் வரும் 11-06-2013 அன்று நடை பெற உள்ளது.

தர்ணா போராட்டம்

          இன்று (05-06-2013) விருதுநகர் மாவட்டத்தில் UNITED FORUM OF BSNL ASSOCIATIONS / UNIONS சார்பாக  78.2% IDA இணைப்பை வலியுறுத்தி மாபெரும் தர்ணா போராட்டம் GM அலுவலகத்தின் முன் நடைபெற்றது. தர்ணாவிற்கு NFTE மாவட்டச் செயலர் தோழர் சக்கணன் தலைமை வகிக்க,தோழர்கள் S.ரவீந்திரன், BSNLEU மாவட்ட செயலர்SNEA(I) மாவட்ட செயலர் திரு.செல்வராஜ், AIBSNLEA சார்பாக திரு. K.சின்ன முனியாண்டி, SNEA ராஜபாளையம் கிளைச் செயலர் திரு. தங்கவேலு, திரு.கோவிந்தராஜ் , FNTO சங்கச் சார்ந்த திரு. பாண்டுரெங்கண், சேவா BSNL திரு. கேசவன், BSNLEU மாவட்ட துணைச்செயலர் தோழர் M.பெருமாள்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். AIBSNLEA மாநில பொறுப்பாளர் திரு. T.ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

தர்ணா காட்சிகள் சில






Saturday, June 1, 2013

அர்பணிப்பு பணியில் பிஎஸ்என்எல்

மத்திய அமைச்சரவை நக்சல் பாதித்த பகுதிகளில்  மொபைல் நெட்வொர்க்  கொடுப்பதற்கு நமது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்து விட்டது. 3,046.12 கோடி மதிப்பிலான USOF இருந்து நிதியுதவி உடன்   பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இவ் வேலை ஒப்படைக்கபட உள்ளது .தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள்  நக்சலைட் பகுதிகளில் இந்த ஆபத்தான பணியை செய்வார்களா என்பதை இந்த அரசாங்கம் தெரிந்து  கொண்டே நமது நிறுவனத்திடம் இப் பணியை கொடுத்துள்ளது .பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய தேசத்திற்கு  அர்ப்பணிக்கப்பட்டது .அது தன்  பொறுப்பை  உணர்ந்து செயல் படும் .இந்த அரசாங்கம் ஒன்றை உணர வேண்டும்  தேசத்தின் மற்றும் மக்களின்    அவசர மற்றும் பாதுகாப்பு விசயங்களில்  பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே  என்றும்  நினைவில் கொள்ளப்படும் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...