Tuesday, September 17, 2019

8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்

8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் விருதுநகர் மாவட்ட வாக்கு பதிவு  விவரம் 
மொத்த வாக்கு = 260
பதிவான வாக்கு =256
பூத்  வாரியாக வாக்கு பதிவு விவரம் 
அருப்புக்கோட்டை 
மொத்த வாக்கு = 37
பதிவான வாக்கு =35
தபால் வாக்கு = 1
ஸ்ரீவில்லிபுத்தூர் 
மொத்த வாக்கு = 26
பதிவான வாக்கு =26
விருதுநகர் 
மொத்த வாக்கு = 90
பதிவான வாக்கு = 88
சிவகாசி 
மொத்த வாக்கு =64
பதிவான வாக்கு =64
ராஜபாளையம் 
மொத்த வாக்கு = 43
பதிவான வாக்கு =42
ஜனநாயக முறையில் தங்கள் உரிமையை பதிவு செய்த அத்துணை ஊழியர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் 

Saturday, September 14, 2019

தேர்தல் சிறப்பு கூட்டம்

No photo description available.
13/09/2019 அன்று ராஜபாளையம் நகரில் நமது BSNLEU சங்கம் சார்பாக தேர்தல் சிறப்பு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தோழர் வெள்ளைப்பிள்ளையார் வரவேற்பு உரை நிகழ்த்தினார் . தொடக்க உரையாக தோழர் ரவீந்திரன் மாவட்ட செயலர் பேசினார் .தேர்தல் விளக்க  உரையாக மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் , மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் விரிவாக பேசினர் .BSNL நிறுவனம் தற்போது எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகள் ,மத்திய அரசு BSNL நிறுவனத்தை முடக்க நினைக்கும் போக்கு ,ஒற்றுமையை உருவாக்கி தொடர் இயக்கங்கள் நடத்தி நிறுவனத்தை காப்பதற்கு நமது சங்க முயற்சிகளை  விரிவாக விளக்கினார்கள் .VRS ,ஓய்வு வயது குறைப்பு என்பது நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிதான் என்பதை சுட்டி காட்டினார்கள். 2000 ம் ஆண்டு BSNL நிறுவனம்  உருவாக்கப்பட்ட போதே நமது K G போஸ் அணி எச்சரிக்கை செய்தது , நிறுவனமாக மாறும் போது இன்று நாம் இழப்பதை 19 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கூறினோம் ,ஆனால் அன்று அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக இருந்த NFTE, FNTO மற்றும் BTEU சங்கங்கள் 1000 ரூபாய் கிடைத்தவுடன் , 2 பைசாவுக்கு வடை விற்கும் ,5 பைசாவுக்கு டீ விற்கும் ,விமானத்தில் பறக்கலாம் என்று வாய் சவடால் பேசி நிறுவனமாக மாறியதை இரத்தின கம்பளம் விரித்து வரவேற்றனர் .தற்போது ஜியோ  நிறுவனத்தின் போட்டியால் நமது வருமானம் 32000 கோடியில் இருந்து 18000 கோடியாக குறைந்ததால் கடும் நெருக்கடியை நமது நிறுவனமும் ,ஊழியர்களும் சந்தித்து கொண்டு உள்ளனர் .BSNL நிறுவனத்தை மத்திய அரசு புறக்கணிப்பதை எதிர்த்து மக்கள் மத்தியில் நாம் தெருமுனை பிரச்சாரம் மூலம் கொண்டு சென்றோம் .மக்களவை பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினோம் .NFTE சங்கம் இது போன்ற இயங்கங்களில் ஒரு போதும் கலந்து கொண்டது இல்லை .ஆகஸ்ட் மாத சம்பளம் இதுவரை பட்டுவாடா செய்யாததை எதிர்த்து உடனடியாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம் .அதெற்கெல்லாம் இயக்கம் நடத்தாத NFTE சங்கம் சம்பளம் போடாமல் இருப்பதற்கும் நமது சங்கம் தான்  காரணம் என்று அவதூறு பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்க அலையும் அசிங்கத்தை சுட்டி காட்டினோம் ,நமக்கு இருக்கும் அதே அங்கீகாரம் தான் அவர்களுக்கும் இருக்கிறது .அதிரடி போராட்டம் நடத்த வேண்டியது தானே .இரை தேட வரும் உயிரினங்கள் போல இவர்கள் ஓட்டு நேரம் மட்டும் வருவார்கள் ,இயங்கங்கள் வரும் போது காணாமல் போவார்கள் .ஊழியர்கள் மீண்டும் இவர்களுக்கு பாடம் புகட்ட தயார் ஆகிவிட்டார்கள் .8 சரிபார்ப்பு தேர்தலில் 7 வது முறையாக வாகை சூட முதன்மை சங்கமாக மட்டும் அல்லாது ஒரே சங்கமாக மலருவோம் .சிறப்பு கூட்டத்தை நமது கிளை செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறி நிறைவு செய்தார் .
Image may contain: 9 people, including Ravi Indran, crowd and outdoor
Image may contain: 6 people, including Srinivasan JJ, people sitting, crowd, wedding and outdoor
Image may contain: 1 person, sitting, table, crowd and outdoor
Image may contain: one or more people, people sitting, crowd, table and outdoor
Image may contain: 1 person, sitting and outdoor

Image may contain: one or more people, people sitting, crowd, tree and outdoor
Image may contain: 4 people, tree and outdoor
Image may contain: 3 people, people sitting, crowd and outdoor
Image may contain: 10 people, tree, crowd and outdoor
Image may contain: 4 people, crowd, tree, table and outdoor
Image may contain: one or more people, people sitting and outdoor
Image may contain: 4 people, people sitting, tree and outdoor

Thursday, September 5, 2019

முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி

ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து மாவட்ட நிர்வாகம் இட்ட உத்தரவை எதிர்த்து 04/09/2019 அன்று நமது சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .உடனடியாக ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.இதே வேளையில் தூத்துக்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .நமது இரண்டு மாவட்ட சங்கங்கள் நிர்வாகத்தோடு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வரும் 13/09/2019 வரை அந்த ஆட்குறைப்பு உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது . வரும் 12/09/2019 அன்று மாலை 330 மணிக்கு தூத்துக்குடியில் முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் நடைபெற உள்ள பேட்டியில் இந்த விஷயத்தை நமது சங்கம் பேச உள்ளது .

விரிவடைந்த மாவட்ட செயற்குழு

உற்சாகத்தோடும் ,   எழுச்சியுடனும் நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட   செயற்குழு 
03/09/2019 அன்று விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மிகுந்த உற்சாகத்தோடு நடைபெற்றது .முதல்  நிகழ்ச்சியாக சங்க கொடியேற்றமும் ,கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது .மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார் .அதன் பின் ஆகஸ்ட் மாத ஊதியத்தை வழங்குவதை காலதாமதம் செய்யும் நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அதன் பின் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற எழுச்சி மிகு கூட்டத்தில் 8 வது சரிபார்ப்பு தேர்தலை விளக்கி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் பேசினர் .எழுச்சி உரையாக மாநில அமைப்பு செயலர் தோழர் பழனிக்குமார் விரிவாக உரை நிகழ்த்தினார் .FTTH கருத்தரங்கை தோழர் கண்ணன் அவர்கள் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் . 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட இச் செயற்குழுவை  மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி நவின்று முடித்து வைத்தார் .
Image may contain: 1 person, outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 1 person, smiling
Image may contain: 2 people, outdoor
Image may contain: one or more people, crowd and outdoorImage may contain: one or more people, crowd, tree and outdoor\

Image may contain: one or more people and outdoor
Image may contain: 2 people, people standing, crowd and outdoor
Image may contain: 1 person, standing, child and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: 4 people, crowd and outdoor
Image may contain: one or more people, crowd, tree, shoes, table and outdoor
Image may contain: 1 person

Wednesday, August 7, 2019

ஊழியர் நலன் காக்க ,BSNL நிறுவனத்தை பாதுகாக்க வாக்களிப்பீர்

No photo description available.

கடலூரில் நடைபெற்ற விரிவடைந்த மாநில செயற்குழு

கடலூரில் 5-8-2019 அன்று நடைபெற்ற விரிவடைந்த மாநில  செயற்குழு மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைளை கண்டு தொய்வடைந்த   தோழர்களுக்கு ஒரு புத்துணர்வை உண்டாக்கியது . BSNL  உருவாகிய காலத்தில் இருந்து இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள் BSNL நிறுவனத்தை பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகள் அத்தனையையும் முறியடித்த வரலாறை மிக நேர்த்தியுடன் அற்புதமாய் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு எழுச்சிமிகு உரை நிகழ்த்தினார் .நமது மாவட்டத்தில் இருந்து அனைத்து கிளை செயலர்கள் கலந்து கொண்டனர் .நமது மாவட்டம் சார்பாக அருப்புக்கோட்டை தோழர் கண்ணன் அவர்கள் அச் செயற்குழுவில் உரை நிகழ்த்தினார் .
Image may contain: 9 people, including Indira Palanichamy, people standing and outdoor
Image may contain: 10 people, including Indira Palanichamy, Chellappa Chandrasekar, Mohandosscpm Mohandosscpm and Ravi Indran, people smiling, people standing, crowd and outdoor
Image may contain: 14 people, including Kannan Kandasamy, Babu Radhakrishnan Radhakrishnan and Chellappa Chandrasekar, people standing and crowd
Image may contain: 1 person
Image may contain: 4 people, including Chellappa Chandrasekar, people smiling, people standing
Image may contain: 9 people, including மதி கண்ணன், Ravi Indran and Christopher Roy M, people standing and outdoor
Image may contain: one or more people
Image may contain: 6 people, including மதி கண்ணன், people smiling, crowd and indoor
Image may contain: 2 people


இன்று விருதுநகர் மாவட்ட AUAB சார்பாக அனைத்து கிளைகளிலும்  கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
(1) Honour the commitments given by the Union Cabinet in the year 2000, to ensure BSNL’s financial viability. (a) Extend immediate financial support to BSNL, for the maintenance of the services. (b) Extend soft loan to BSNL for it’s capital expenditures. (2) Remove the total ban imposed on capital expenditure by BSNL. Allow field units to carry out capital expenditure, were revenue is assured. (3) No retrenchment. Honour the commitment given on job security at the time of formation of BSNL.
Image may contain: 7 people, people standing and outdoor
Image may contain: 2 people, people standing, crowd and outdoor
Image may contain: 2 people, people standing
Image may contain: 7 people, people standing, crowd and outdoor
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: 4 people, people smiling, people standing and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...