Wednesday, February 6, 2019

இரங்கல்

ருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் A ,சோலை அவர்களின் அன்னையார்  இன்று காலை காலமானார் ,அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 

நன்கொடை

சிவகாசி தோழர் A .சுப்ரமணியன் தனது பணி ஓய்வை முன்னிட்டு மாநில ,மாவட்ட ,கிளை சங்கங்களுக்கு தலா 1000/ ரூபாயும் ,ஒப்பந்த ஊழியர் சிவகாசி கிளை சங்கத்திற்கு ரூபாய் 500 ம் நன்கொடை வழங்கி உள்ளார் .அதே போல் ராஜபாளையம் கிளை தோழியர் பணிமொழி அவர்கள் மாநில ,மாவட்ட சங்கங்களுக்கு தலா 1000 ரூபாயும் ,கிளை சங்கத்திற்கு 3000 ரூபாயும் வழங்கி உள்ளார் .இரண்டு ஊழியர்களின் பணி ஒய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கம் தோழமையுடன் வாழ்த்துகிறது .சிவகாசி தோழியர் கலாவதி அவர்கள் மாவட்ட சங்க வளர்ச்சிக்காக ரூபாய் 1000/- வழங்கி உள்ளார்.அவருக்கும் நெஞ்சு நிறை நன்றி .

இணைந்த மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம்

எழுச்சிகரமாக மற்றும் உற்சாகமாக நடைபெற்ற இணைந்த மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் 
விருதுநகர் மாவட்டத்தின் AUAB சங்கங்களின் இணைந்த மாவட்ட விரிவடைந்த செயற்குழு இன்று காலை 10 மணிக்கு தோழர்கள் ஜெயக்குமார் (BSNLEU ), பிச்சைக்கனி (AIBSNLEA) மற்றும் செந்தில்குமார் (SNEA) கூட்டு தலைமையின் கீழ் மிக சிறப்பாக நடைபெற்றது .இக் கூட்டத்தை BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக துவக்கிவைத்து உரையாற்றினார் .சிறப்புரையாக நமது BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் ,SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் ,AIGETOA  மாநில சங்க நிர்வாகி தோழர் விக்டர் சாம்சன் மற்றும் BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் உரை ஆற்றினர் .வர இருக்கின்ற 3 நாள் வேலை நிறுத்தத்தை 100% வெற்றியை தரவேண்டும் என்று பேசிய அனைவரும் வலியுறுத்தினர் . SNEA மாவட்ட பொருளாளர் தோழர் செல்வராஜ் நன்றி நவின்றார் . மாவட்டம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் .கலந்து கொண்ட அனைவருக்கும் GM அலுவலக கிளை செயலர் இளமாறன் அவர்கள் தனது சொந்த செலவில் தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ் வழங்கி உபசரித்தார் .
Image may contain: 3 people, including Dhurairaj Thangavelu, people standing
Image may contain: 8 people, people smiling, tree, crowd and outdoor
Image may contain: 8 people, including Christopher Roy M and Narasimhalu Jayaram Jayaram, people sitting, crowd and outdoor
Image may contain: 3 people, people standing, shoes and outdoor

Tuesday, February 5, 2019

இணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்

BSNLEU,SNEA,AIBSNLEA மற்றும்  AIGETOA சங்கங்களின் இணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் 

கூட்டு தலைமை :- R .ஜெயக்குமார் ,தோழர் செந்தில்குமார் மற்றும் தோழர் பிச்சைக்கனி 

தொடக்க உரை :- S .ரவீந்திரன் ,மாவட்ட செயலர் BSNLEU 

சிறப்புரை:- A .பாபு ராதாகிருஷ்ணன் மாநில செயலர் ,BSNLEU ,தமிழ் மாநிலம் 
தோழர் .கோவிந்தராஜன் ,மாநில சங்க நிர்வாகி ,SNEA
தோழர் சந்திரசேகரன் ,மாநில அமைப்பு செயலர் ,AIBSNLEA
தோழர் விக்டர் சாம்சன் ,மாநில சங்க நிர்வாகி ,AIGETOA 
தோழர் A.சமுத்திரக்கனி ,மாநில அமைப்பு செயலர் ,BSNLEU 
நன்றியுரை :- தோழர் மணிகண்டன் ,,மாவட்ட பொருளாளர் ,AIBSNLEA

Monday, February 4, 2019

உறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

மல்லி செக்யூரிட்டி நிறுவனம் விருதுநகர் மாவட்டத்தில் செக்யூரிட்டி பணிக்கான ஒப்பந்தத்தை கடந்த 01/12/2018 முதல் பெற்றது . ஜனவரி மாதம் காக்கிவாடன்பட்டியில் பல ஆண்டுகளாக பணி புரிந்த திருநாராயணன் என்பவரை திடீரென பணி நீக்கம் செய்தது .எரிச்சநத்தம் பகுதியில் வேலை பார்த்த மூர்த்தி என்பவரை காக்கிவாடன்பட்டிக்கு மாறுதல் செய்து அவர் இடத்திற்கு புதிதாக ஒருவரை நியமித்தது . ஒப்பந்ததாரர் மாறினாலும் அதில் பணி செய்யக்கூடியவர்களை மாற்றக்கூடாது என்பதற்கு நமது BSNLEU சங்கமும் TNTCWU சங்கமும் ஒரு கடுமையான போராட்டத்தை மாநில அளவில்  நடத்தியபிறகு ஒரு ஒப்பந்தம் மாநில நிர்வாகத்தோடு ஏற்பட்டது .அந்த உடன்பாட்டை மல்லி செக்யூரிட்டி நிறுவனம் மீறுகிறது என்பதை பலமுறை மாவட்ட நிர்வாகத்தோடு விவாதித்தோம் .கடிதம் கொடுத்தோம் .ஒன்றும் பலன் இல்லை .நமது தமிழ் மாநில சங்கத்தின் ஆலோசனையுடன் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் கடந்த  28/01/2019 அன்று துவங்கினர் . முதல் நாள் உண்ணாவிரதத்தின் முடிவில் காக்கிவாடன்பட்டி தோழர் திருநாராயணன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார் .ஆனால் மாவட்ட நிர்வாகம் நமது சங்கம் ஒரு நபர் பிரச்சனையை தான் சொன்னோம் என்று பிடிவாதமாக இருந்தது .மாநில சங்கத்தின் ஆலோசனையுடன் நமது இரண்டு நாள் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தோம் .பிரச்சனை தீரவில்லை என்றால் நமது தமிழ் மாநில செயலர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் 05/02/2019 முதல் உண்ணாவிரதத்தை தொடங்குவது என்று மாநில சங்கம் மாநில நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துவிட்டது . அந்த அடிப்படையில் மாநில நிர்வாகம் பல முறை நமது சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியது . மாநில சங்கம் கொடுத்த கடுமையான நெருக்கடியின் பெயரில் இன்று மல்லி செக்யூரிட்டி நிறுவனம் நமது சங்கத்தோடு நமது அனைத்திந்திய உதவி  செயலரும் நமது தமிழ் மாநில தலைவருமான தோழர் செல்லப்பா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது .ஒரு கடுமையான விவாதத்தை நமது அனைத்திந்திய உதவி பொது செயலர் நடத்திய பிறகு எரிச்சநத்தம் பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர் மூர்த்தி மீண்டும் இன்று பணியில் அமர்த்தப்பட்டார் . இப் பிரச்சனை தீர உதவிய நமது தமிழ் மாநில சங்கத்திற்கும் ,போராடிய அனைத்து தோழமைகளுக்கு மீண்டும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியை மாவட்ட சங்கம் தெரிவித்து கொள்கிறது .

Saturday, February 2, 2019

விரிவடைந்த மாவட்ட செயற்குழு


அன்பார்ந்த தோழர்களே ‘
நமது விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி மாவட்ட சங்க அலுவலகத்தில் தோழர் ஜெயக்குமார் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது
   
ஆய்படு பொருள் :
1.            AUAB சார்பாக வரும் 18 ,19,20 தேதிகளில் நடைபெற உள்ள வேலை நிறுத்த தயாரிப்பு பணிகள் .
 2.           நடந்து முடிந்த 8 , 9 தேதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தம் ஓர் ஆய்வு .
3.            புதிதாக இணைந்த மற்றும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு .
4.            ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்
5.            தலைவர் அனுமதியுடன் இன்ன பிற.
சிறப்புரை தோழர் பாபு ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலர், BSNLEU

பொதுச் செயலரிடமிருந்து...


அன்பார்ந்த தோழர்களே,
18.2.19 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை AUAB கொடுத்துள்ளது.
தொலை தொடர்பு துறையோடு நடைபெற்ற பேச்சு வார்த்தை, நாம் விரும்பிய முடிவை தரவில்லை.
தலமட்ட AUABயில் உள்ள உறுப்பு சங்கங்களை ஒருங்கிணைத்து  இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட தேவையான நடவடிக்கைகளை நமது மாநில, மாவட்ட சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.  நேரம் குறுகியதாக இருப்பதால் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  வாழ்த்துக்களுடன்,
P.அபிமன்யு
பொதுச்செயலாளர்

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...