Sunday, September 10, 2017

அருப்புக்கோட்டை கிளை மாநாடு

அருப்புக்கோட்டை கிளை மாநாடு அதன் தலைவர் தோழர் உதயகுமார் தலைமையில் 09/09/2017 அன்று மாலை  5 மணிக்கு எழுச்சியுடன் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் பதவி உயர்வு பெற்று செல்வதை  ஒட்டி அவருக்கு சிறப்பான பாராட்டு விழாவும் கிளை மாநாட்டுடன் இணைந்து நடைபெற்றது. தியாகிகளுக்கு தோழர் சோலை அஞ்சலி செலுத்தினார். அதன் பின் கிளை செயலர் தோழர் கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். முறையாக கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கி வைத்தார். மாநாட்டை வாழ்த்தி SNEA மாவட்ட தலைவர் தோழர் சரவணன், கோட்ட பொறியாளர், அருப்புக்கோட்டை, மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார், JCTU தோழர் ராஜாராம், மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் தோழர்கள் முத்துசாமி, காதர்  மொய்தீன், மாரியப்பா, மாரிமுத்து, சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி சிறப்புரை நிகழ்த்தினார். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் உதயகுமார் ,சோலை மற்றும் அய்யனார் அவரகள் தலைவர் ,செயலர் மற்றும் பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .அதன் பின் நடைபெற்ற பாராட்டு விழாவில் தோழர்கள்  அனைவரும் தோழர் அஷ்ரப் தீன் அவர்களின் தொழிற்சங்க பணியை நினைவு கூர்ந்தனர். மாவட்ட சங்கம் சார்பாக தோழர் அஷ்ரப் தீன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பெற்றார். புதிய கிளை செயலர் தோழர் சோலை நன்றி நவின்றார்.





































Image may contain: 1 person, sitting

Image may contain: 7 people, people smiling, people sitting

Image may contain: 5 people, people sitting and indoor

Image may contain: 8 people, people sitting and indoor

Image may contain: 4 people, people sitting

ஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின்  14 வது  மாநாடு 08/09/2017 அன்று அதன் தலைவர் தோழர்  வெங்கடசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர் ரவிச்சந்திரன் அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் கிளை செயலர் தோழர் சமுத்திரம் வரவேற்புரை நிகழ்த்தினார் .அதன் பின் முறையாக கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார் .ஒற்றுமை மற்றும் தொடர் போராட்டங்களின் மூலமே ஊதியமாற்ற  இலக்கை நாம் அடையமுடியும் என்றும் ,தற்போதைய மத்திய அரசு ஒட்டு மொத்த அரசு துறை நிறுவனங்களையும்  அழிப்பதற்கான முயற்சிகளை எதிர்த்து அனைத்து  பொது துறை  நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்ளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு உள்ள 
தேசிய மேடையின் அறைகூவலான நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை நியூ டெல்லியில் நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் நமது மாவட்டம் சார்பாக பங்கேற்க வேண்டிய அவசியத்தை சுட்டி காட்டினார் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி செயல் இழந்த மாநில அரசு ,நீட் தேர்வு பிரச்னை ,ஜியோ வின் தாக்கம் பற்றி விரிவாக சிறப்புரை நிகழ்த்தினார் .மாநாட்டை வாழ்த்தி SNEA மாநில  சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன்  ,நமது மாவட்ட உதவி செயலர்கள்  தோழர் முத்துச்சாமி , தோழர் வெள்ளை பிள்ளையார் ,தோழர் தங்கதுரை TNTCWU சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி , விருதுநகர் கிளை செயலர் தோழர் மாரிமுத்து மற்றும் மாவட்ட சங்க நிர்வாகி தோழர்  மாரியப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .புதிய நிர்வாகிகளாக தோழர்கள் ரவிச்சந்திரன் ,தங்கதுரை ,வெங்கடசாமி ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் பொருளாளர் ஆக தேர்நதெடுக்கப்பட்டனர் 
Image may contain: 2 people
Image may contain: 3 people, people sitting
Image may contain: one or more people
Image may contain: 5 people, people sitting
Image may contain: 2 people, people sitting
Image may contain: one or more people and people sitting
Image may contain: 1 person, sitting
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 7 people, people sitting

Thursday, September 7, 2017

பாராட்டு விழா

BSNLEU – அருப்புக்கோட்டை
13 ஆவது கிளை மாநாட்டில்
தோழர் அஷ்ரஃப்தீன் பணி உயர்வு பாராட்டு விழா
09.09.2017 – சனிக்கிழமை – மாலை 5.00 மணி – தொலைபேசி நிலையம்
தலைமை          : தோழர் U.B.உதயகுமார், கிளைத்தலைவர்
பாராட்டுரைக்க    : தோழர் S.ரவீந்திரன், மாவட்டச் செயலர்
 திருமிகு சரவணன், கோட்டப் பொறியாளர்
       தோழர் R.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர்
       தோழர் சமுத்திரக்கனி, மாநில அமைப்புச் செயலர்
                     தோழர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலர், TNTCWU
தோழர் கணேச மூர்த்தி, மாவட்ட உதவிச் செயலர்
                     தோழர் முத்துச்சாமி, மாவட்ட உதவிச் செயலர்
தோழர் இளமாறன், விருதுநகர்
       தோழர் மாரிமுத்து, விருதுநகர்
       தோழர் காதர் மொய்தீன், சாத்தூர்
                     தோழர் கருப்பசாமி, சிவகாசி
                     தோழர் சமுத்திரம், திருவில்லிபுத்தூர்
       தோழர் இராதாகிருஷ்ணன், ராஜபாளையம்
       தோழர் A.கண்ணன், அருப்புக்கோட்டை
                     தோழர் செந்தில்குமார், அருப்புக்கோட்டை, TNTCWU
                     தோழர் முனியசாமி, அருப்புக்கோட்டை, TNTCWU

ஏற்புரை : தோழர் அஷ்ரஃப்தீன்

Wednesday, September 6, 2017

BSNL ஊழியர் சங்கம் - கிளை மாநாடு - அருப்புக்கோட்டை

BSNLEU – அருப்புக்கோட்டை
13 ஆவது கிளை மாநாடு
09.09.2017 – சனிக்கிழமை – மாலை 5.00 மணி – தொலைபேசி நிலையம்
தலைமை          : தோழர் U.B.உதயகுமார், கிளைத்தலைவர்
அஞ்சலி            : தோழர் A.சோலை, கிளை உதவிச் செயலர்
வரவேற்புரை      : தோழர் A.கண்ணன், கிளைச் செயலர்
தொடக்கவுரை     : தோழர் S.ரவீந்திரன், மாவட்டச் செயலர்
செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தல்
நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல்
அமைப்புநிலை விவாதம்
வாழ்த்துரை   : திருமிகு சரவணன், கோட்டப் பொறியாளர்
    தோழர் R.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர்
    தோழர் கணேச மூர்த்தி, மாவட்ட உதவிச் செயலர்,
                  தோழர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலர், TNTCWU
                  தோழர் மனோகர், கிளைச் செயலர், SNEA
                  தோழர் ராஜாராம், ஒருங்கிணைப்பாளர், JCTU
நோக்கஉரை   : தோழர் சமுத்திரக்கனி, மாநில அமைப்புச் செயலர்
புதிய நிர்வாகிகள் தேர்வு
நன்றியுரை : புதிய செயலர்
அனைவரையும் வருக வருக என வரவேற்கும்

BSNL ஊழியர் சங்கம் – அருப்புக்கோட்டை கிளை

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க கிளை மாநாடு - அருப்புக்கோட்டை

TNTCWU – அருப்புக்கோட்டை
7 ஆவது கிளை மாநாடு
09.09.2017 – சனிக்கிழமை – மாலை 5.00 மணி
தலைமை          : தோழர் பெரியசாமி, கிளைத்தலைவர்
அஞ்சலி            : தோழர் A.சோலை, கிளை உதவிச் செயலர், BSNLEU
வரவேற்புரை      : தோழர் R.செந்தில்குமார், கிளைச் செயலர்
தொடக்கவுரை     : தோழர் R.ராமச்சந்திரன், மாவட்டச் செயலர்
செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தல்
நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல்
அமைப்புநிலை விவாதம்
வாழ்த்துரை    : திருமிகு அஷ்ரஃபதீன், BSNLEU, ADS
    தோழர் இளமாறன், மாவட்டத் தலைவர்
                  தோழர் ராஜாராம், ஒருங்கிணைப்பாளர், JCTU
நோக்கஉரை   : தோழர் இரவீந்திரன், மாவட்டச் செயலர்
    தோழர் எம். வேலுச்சாமி, மாநில அமைப்புச் செயலர்
புதிய நிர்வாகிகள் தேர்வு
நன்றியுரை : புதிய செயலர்
அனைவரையும் வருக வருக என வரவேற்கும்
தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்
அருப்புக்கோட்டை கிளை

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...