Monday, May 22, 2017

வாழ்த்துக்கள்

8வது தமிழ்  மாநில மாநாட்டில் நமது மாவட்ட தலைவர் தோழர் A .சமுத்திரக்கனி அவர்கள் மாநில அமைப்பு செயலராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார் .அவர்க்கு விருதுநகர் மாவட்ட சங்கத்தின் சார்பாக இனிய நல் வாழ்த்துக்கள் 

8 வது மாநில மாநாடு -----ஈரோடு

பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 8 வது தமிழ்  மாநில மாநாடு ஈரோடு நகரில் தோழர் பெத்தல்ராஜ் நினைவரங்கில் மே 19,20 தேதிகளில் எழுச்சியுடன் நடைபெற்றது .மாநாட்டின்  துவக்க .நிகழ்ச்சியாக தேசிய கொடியை மாநில  துணை தலைவர் தோழர் சாமிகுருநாதன் ஏற்றி வைத்தார் .சங்கத்தின் கொடியை மாநில  .தலைவர் தோழர் வெங்கடராமன் ஏற்றி வைத்தார் .மாநில தலைவர் தோழர் செல்லப்பா தலைமை வகித்தார் .துணை தலைவர் தோழர் ஜான் போர்ஜியோ அஞ்சலி உரையாற்றினார் .வரவேற்பு குழு நிர்வாகிகள் திரு செந்தில்வேல் மற்றும் தோழர் பரமேஸ்வரன் வரவேற்பு உரை நிகழ்த்தினர்  துவக்க உரையாற்றிய பொது செயலர் தோழர் அபிமன்யு , 100% தனியார் மயமாக்கப்படாமல் இருப்பதற்கு  பி எஸ் என் எல் ஊழியர்கள் நடத்திய பல கட்ட போராட்டங்கள் தான் என்பதை நினைவு கூர்ந்தார் .மேலும் அந்த போராட்டங்களை தொடர வேண்டிய கட்டாயத்தையும் கூறினார் .டவர் நிறுவனம் உருவாக்கப்படுவதை எதிர்த்து கடந்த ஆண்டு ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நடத்தி ,அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை ஏற்று கொள்ள ,மாட்டோம் என்று உறுதியாக பி எஸ் என் எல் ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதை அரசுக்கு புரிய வைத்தோம் என் கூறினார் .ஊதிய மாற்றத்திற்கு நிறுவனம் ஆதரவாக இருந்தாலும் DOT இதுவரை அதற்க்கு சாதகமாக இல்லைஎன்பதை எதிர்த்து போராட்ட வேண்டிய அவசியத்தை கூறினார் .மாநாட்டில்  மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அறிக்கை முன் மொழிந்தார் .மாநில பொருளாளர் சீனிவாசன் நிதி நிலை அறிக்கை  சமர்ப்பித்தார் .தமிழகம் முழுவதும் இருந்து 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .ஆய்வறிக்கை மீது நடை பெற்ற விவாதத்தில் பிரதிநிதிகள் பங்கேற்றனர் .இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி  தலைவர் தோழர் சம்பத் வாழ்த்துரை வழங்கினார் .முன்னதாக 19 தேதி நடைபெற்ற பொது அரங்கில் மாநில  தலைமை பொது மேலாளர் திருமதி பூங்குழலி ,SNEA மாநில செயலர் தோழர் ராஜசேகர் ,NFTE மாநில செயலர் நடராஜன் , CITU சார்பாக கருமலையான் ஆகியோர் பங்கேற்றனர் .புதிய நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் :

மாநில தலைவர்           : தோழர் S.செல்லப்பா  
துணை தலைவர்கள்    : 1.தோழர் .K .மாரிமுத்து 
                                              2. தோழர்  டி .பிரேமா 
                                              3. தோழர் .S.தமிழ்மணி 
                                              4.. தோழர் .பி .சந்திரசேகரன் 
                                               5. கே.வி .சிவகுமார் 
மாநில செயலர்               : தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் 
துணை செயலர்கள்        :1. M  ..  முருகையா ,
                                               2. எஸ் .சுப்ரமணியன் 
                                               3. தோழியர் .V.P.இந்திரா 
                                               4.தோழர் மெய்யப்பன் கிறிஸ்டோபர் 
                                                5. M.பாபு 
மாநில அமைப்பு செயலர்கள் :1.V.மணியன் ,TT .ஈரோடு 
                                                         2.A.சமுத்திரக்கனி .TT .சிவகாசி 
                                                         3.கே .பழனிக்குமார் ,OS ,பழனி 
                                                         4.N.சக்திவேல் TT உடுமலை ,
                                                         5.N.P.ராஜேந்திரன் ,SOA ,கோவை 
                                                         6.B .ரிச்சர்ட் ,JE,மதுரை 
                                             7. வி .சீதாலட்சுமி ,OS ,திருநெல்வேலி 
மாநில பொருளாளர்                :-கே .சீனிவாசன் ,TT ,சென்னை 
மாநில  உதவி பொருளாளர்  :-G.சுந்தர்ராஜன் ,JE,திருச்சி 
                               புதிய நிர்வாகிகளுக்கு விருதுநகர் மாவட்ட சங்கத்தின்  புரட்சிகர நல் வாழ்த்துக்கள் 
Image may contain: one or more people and crowd


































Monday, May 8, 2017

மாநில மாநாட்டு பிரதிநிதிகள்

8 வது தமிழ் மாநில மாநாட்டு பிரதிநிதிகளாக விருதுநகர் மாவட்டத்தில்  இருந்து கீழ் கண்ட தோழர்கள் பங்கேற்பர் .
1.A.Samuthirakani ,TT.
2.M.Karuppasamy.,TT 
3. G.Mohanasundaram , JE, 
4.A.Anavaradham ,TT, 
5.C.Ponraj, Office supdt. 
6.A.S Ashrafdeen, JE, 
7.M.S.Elamaran Asst.office supdt. 
8. A.Mariappa TT ,
9. C.Chandrasekaean , TT, 
10.M.Muthusamy, JE.
11. L.Thangadurai, JE. 

பொது மேலாளருடன் பேட்டி

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பொது மேலாளருடன் இன்று பேட்டி காணப்பட்டது .இன்றைய பேட்டியில் மாவட்ட செயலருடன் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர் .இன்றைய பேட்டியில் பேசப்பட்டவை 
1.BTS இல் உள்ள காலாவதியாகி போன உபகரணைகளை மாற்றி செல் சேவையை மேம்படுத்துவது .குறிப்பாக நமது மாவட்டத்தில் 2G BTS பகுதியில் இணையதள சேவை கடுமையாக பாதிப்பானதை சுட்டி காட்டி 08/05/2017 அன்று செய்தித்தாளில் இந்த விஷயம் கடுமையாக விமர்ச்சனம் செய்யப்பட்டு உள்ளதை எடுத்துரைத்தோம் .
2.விருதுநகர்  புதிய தொலை  பேசி நிலைய வளாகத்தில் செப்டிக் டேங்க் நிறைந்து சுகாதார பாதிப்பை உண்டாக்கு கிறது என்பதை பலமுறை சுட்டி காட்டியும் அலட்சியம் செய்யும் போக்கு சரியல்ல என்பதை சுட்டிக்காட்டியவுடன்  வரும் 10 நாட்களுக்குள் சரிசெய்யப்படவேண்டும் என்று GM உத்தரவு பிறப்பித்து உள்ளார் .
3. சிவகாசி குரூப்ஸ் பகுதியில் ஓடும் ஜீப்பை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பதை விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம் .
4.சிவகாசி பகுதியில் ஒரு ட்ரான்ஸ்மிஷன் பகுதி உருவாக்க பட வேண்டும் என் கூறியுள்ளோம் .
5.கேடர் பெயர் மாற்றம் வந்த பிறகு புதிய அடையாள அட்டை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நெடு நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ளதை சுட்டி காட்டி விரைந்து நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி உள்ளோம் .
6.தொடர் திருட்டு நடக்கும் அல்லம்பட்டி ஸ்டோர்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஸ்டார் க்கு  மாற்றப்பட வேண்டும் என கூறியுள்ளோம் .
7.விருதுநகர் பழைய தொலை  பேசி  நிலைய வளாகத்தின் சுவர்களில் எழுதப்பட்டு உள்ள நமது விளம்பரத்தின் மீது தனியார்கள் சுவரொட்டி ஓட்டுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
8.திருச்சுழியில் பயனற்று உள்ள நடமாடும் ஜெனரேட்டரை தேவையான இடத்தில குறிப்பாக சோழபுரத்தில் பயன்படுத்த வேண்டும்   என்று வலியுறுத்தி உள்ளோம் .
9.ஒப்பந்த ஊழியர் ஊதிய நிலுவை தொகை விஷயம் மற்றும் இன்னோவேடிவ் நிறுவனம் செலுத்த வேண்டிய EPF விஷயம் விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்தோம் .
10.பவர் ஷூ மற்றும் டூல் கிட் ட்ரான்ஸ்மிசன் பகுதியில் வேலை  பார்க்கும் JE க்ளுக்கு வழங்கப்படாமல் ஜெனரல்  செக்க்ஷன் மற்றும் பிளானிங்  செக்க்ஷன்களில் மாறி மாறி சாக்கு சொல்லும் போக்கு இருப்பதை சுட்டி  காட்டி  உள்ளோம் .
11. பயன்படுத்தப்படாத மர சாமான்களை விரைந்து ஏலம் விட்டு அப்புறப்படுத்த கூறியுள்ளோம் .
12. வீரசோழன் தொலை பேசி நிலைய ஜெனரேட்டர் பழுது அடைந்து உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம் .
13. லோக்கல் கவுன்சில் கூட்டத்தை விரைந்து நடத்த வேண்டுகோள் விடுத்து உள்ளோம் .

Thursday, May 4, 2017

மாநில செயற்குழு கூட்டம்

02/05/2017 அன்று தமிழ்  மாநில செயற்குழு கூட்டம் மாநில  தலைவர் தோழர் செல்லப்பா தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசி விவாதக்குறிப்பை சமர்ப்பித்து பேசினார் .அதன் பின் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் பல்வேறு பிரச்சனைகள் மீது ஒரு விரிவான எழுச்சிகரமான உரை நிகழ்த்தினார் .மே தின தியாகிகளை நினைவு கூர்ந்து அந்த எட்டு மணி  நேர  போராட்டத்தின் வீச்சை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியத்தை ,மத்திய அரசு  தொடந்து  மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள், ,ஊதிய மாற்றத்திற்கான நடவடிக்கைகள் ,JE மற்றும் TT தேர்வுகள் பற்றிய தகவல்கள் ,நமது நிறுவன  புத்தாக்கம் ,ஒப்பந்த  ஊழியர் பிரச்சனைகள் என் அனைத்து விஷயங்களையும் விரிவாக கூறினார் .மே 19, 20 ஈரோட்டில்   நடைபெற உள்ள 8 வது தமிழ் மாநில  மாநாட்டிற்கான  நிகழ்ச்சி நிரல்கள் ,மற்றும்  சார்பாளர் எண்ணிக்கை மற்றும் சார்பாளர் கட்டணம் ஆகியவை முடிவு செய்யப்பட்டன .
Image may contain: 3 people, people sitting
Image may contain: 2 people, outdoor
Image may contain: 4 people, people standing
Image may contain: 7 people, people sitting, table and indoor

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...