Saturday, February 18, 2017

ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்

17/02/2017 அன்று ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் அதன் தலைவர் தோழர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது ..மறைந்த தோழர் முத்துராமலிங்கம்அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது . கிளை செயலர் தோழர் பொன்ராஜ் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது .தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,முருகன் ,வேலுச்சாமி ,பிச்சை ஆகியோர் பிரச்சனைகளை சுட்டி காட்டி விவாதத்தில் பங்கேற்றனர் .ஏற்கனவே மார்க்கெட்டிங் பணிகளில் சிறப்பாக பணி புரியும் ராஜபாளையம் தோழர்கள் FORUM முடிவுகளை அமல்படுத்துவதில் சிறப்பான பங்கை வகிக்கும் என அனைவரும் உறுதி கூறினர் 8 வது .அனைத்திந்திய மாநாடு பிரதிபலித்த விஷயங்களை மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி சுட்டிக்காட்டி பேசினார் .FORUM முடிவுகளை மாவட்ட செயலர் ரவீந்திரன் விரிவாக விளக்கினார் .மறைந்த தோழர் முத்துராமலிங்கம் குடும்ப நிதியாக மேலும் ரூபாய் 6000/- ஐ மாவட்ட சங்கத்திடம் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் அனவ்ரதம்  வழங்கினார் .அதே போல் பணி நிறைவு செய்த தோழியர் மாரியம்மாள் அவர்கள் மாவட்ட ,மற்றும் மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்
Image may contain: 2 people, people sitting
Image may contain: 2 people, people sitting
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting and people standing
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 4 people, people standing
Image may contain: 2 people, people sitting
Image may contain: 2 people, people sitting

Friday, February 17, 2017

35ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆய்படு பொருட்கள்

35வது தேசிய கவுன்சிலில் விவாதிக்கப்பட வேண்டிய ஆய்படு பொருட்களாக ஊழியர் தரப்பு செயலாளர் தோழர் P.அபிமன்யு தொகுத்து வழங்கியுள்ள பிரச்சனைகள்.படிக்க :-Click Here

BSNLன் புத்தாக்கத்திற்காக கூடுதல் ஒரு மணி நேர சேவை....

விருதுநகர் மாவட்டத்தில் ஒருமணி நேர கூடுதல் பணிக்கான பணிகள் துவங்கியது.மாநில  சங்க சுற்றறிக்கை படிக்க :-Clcik Here

ஆர்ப்பாட்டம்

கேபிள் பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கு SKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டம் 
Image may contain: 7 people, people standing and outdoor
Image may contain: 6 people, people standing and outdoor
Image may contain: 7 people, people standing
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 5 people, people standing
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 8 people, people standing and outdoor
Image may contain: 2 people, people standing

FORUM முடிவுகளுக்கு சிறப்பூட்டிய சிவகாசி பொதுக்குழு கூட்டம்

சிவகாசி பொதுக்குழு  கூட்டம் 16/02/2017அன்று கிளை தலைவர்கள் தோழர்கள் ராஜாராம் மனோகரன் மற்றும். ராஜமாணிக்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .FORUM முடிவுகளை அமல்படுத்துவது ,மாநில மாநாட்டு நன்கொடை ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ,கிளை மாநாடு ஆகியவற்றை பொதுக்குழு விவாதித்தது .கிளை செயலர்கள் தோழர் முத்துசாமி மற்றும் தோழர் கருப்பசாமி  அவர்கள் ஆய்படு  பொருளை விளக்கி பேசினர் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .அதன் பின் பேசிய மாவட்ட செயலர் வரும் 31/03/2017 வரை ஒரு மணி நேர கூடுதல் பணி செய்வதின் அவசியத்தையும் ,வரும் மார்ச் 9 தேதி மாவட்ட ஆட்சி அலுவலகம்  நோக்கிய பேரணியை வெற்றி அடைய  செய்ய வேண்டிய  நோக்கத்தையும் விரிவாக கூறினார் .கேபிள் பகுதி ஊழியர்களுக்கு SKILLED ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மார்ச் 10 ஆம் தேதி GM அலுவலகம் முன் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் .கிளை பொருளர் தோழர் இன்பராஜ் நன்றி நவின்றார் .
எடுக்கப்பட்ட முடிவுகள் :-
1. திங்கட்கிழமை  மற்றும் சனிக்கிழமை தோறும் ரோடு ஷோ நடத்துவது 
2.புதன்கிழமை தோறும் லேண்ட் லைன் மற்றும் இணைய தள இணைப்புகளை பெற  இயக்கம் நடத்துவது .
3.மாநில மாநாட்டு நன்கொடையாக தலா 100/- ரூபாய் உறுப்பினர்களிடம் வசூல் செய்வது 
4. கிளை மாநாட்டை 24/06/2017 அன்று தோழர் ராஜமாணிக்கம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவுடன் இணைத்து நடத்துவது .
Image may contain: 2 people, people standing and people sitting
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting, people standing and indoor
Image may contain: 2 people, people sitting
Image may contain: one or more people and people sitting
Image may contain: one or more people and people sitting

Tuesday, February 14, 2017

தினம் ஒரு மணி நேர கூடுதல் பணிக்கு நிர்வாகத்தின் வாழ்த்துக்கள் மற்றும் பல செய்திகள்

மாநில சங்க சுற்றறிக்கை எண்:150படிக்க :-Click Here

விருதுநகர் மாவட்ட FORUM முடிவுகள்

விருதுநகர் மாவட்ட FORUM கூட்டம் இன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில் BSNLEU சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட பொருளாளர் தோழர்   சந்திரசேகரன் ,மாவட்ட உதவி செயலர் தோழர் .வெங்கடப்பன் ,விருதுநகர் OUTDOOR கிளை செயலர் மாரிமுத்து ,SNEA மாவட்ட செயலர் திரு செந்தில்குமார் ,அதன் மாவட்ட பொருளாளர் திரு செல்வராஜ் , AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ,அதன் மாவட்ட பொறுப்பாளர் தோழர் மணிகண்டன் ,AIBSNLOA மாவட்ட செயலர் தோழர் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர் .AIGETOA மணிலா சங்க நிர்வாகி விக்டர் சாம்சன் அருப்புக்கோட்டை செல்ல இருப்பதால் வரமுடியாத சூழ்நிலையை கூறினார் .06/02/2017 அன்று டெல்லியில் நடைபெற்ற FORUM கூட்ட முடிவுகளை நமது மாவட்டத்தில் முழுமையாக நடைமுறைப்படுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது .
1. வாரத்தில் இரண்டு நாட்கள் ரோடு ஷோ நடத்துவது .
2.பிரதி வாரம் வெள்ளிக்கிழமை அன்று லேண்ட் லைன் ,பிராட் பேண்ட் இணைப்புகளை பெற இயக்கம் நடத்துவது .
3.பிரதி வாரம்  சனிக்கிழமை அன்று EB பிசினஸ் விஷயமாக கேன்வாஸ் செய்வது .இதற்கு தோழர்கள் பிச்சைக்கனி ,செந்தில்குமார் ,மணி கண்டன் ,செல்வராஜ் ,நமது மாவட்ட சங்க உதவி செயலர் தோழர் ஜெயக்குமார், நமது அருப்புக்கோட்டை தோழர் ராஜ்மோகன் ஆகியோர் உதவிகரமாக இருப்பர் .
சிம் விற்பனை மற்றும் தரைவழி இணைப்புகளை பெறுவதற்கு BSNLEU  ஊழியர் சங்கம் தனது முழு ஒத்துழைப்பை தருவது .
மார்ச் 9 பேரணியை முழு உற்சாகத்தோடு நடத்துவது .
கலந்து கொண்ட அனைவருக்கும் நமது சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...