Tuesday, February 7, 2017
Saturday, February 4, 2017
200 ரூபாய் சிம் கார்டில் OFF NET வசதிக்கான உத்தரவு வெளியாகியது மற்றும் சில மத்திய சங்க செய்திகள்
மாநில சங்க சுற்றறிக்கை எண்:147 படிக்க :-Click Here
Tuesday, January 31, 2017
மனித சங்கிலி போராட்டம் !
மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று (ஜனவரி 31ல் )விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் நமது BSNLEU தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர் .மாவட்ட செயலர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,ராஜாராம் மனோகரன் ,ஜெயக்குமார் ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ,கிளை செயலர்கள் மதிக்கண்ணன் ,இளமாறன் ,மாரிமுத்து ,முத்துசாமி ,கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர் .பெரும் எண்ணிக்கையில் நம்து தோழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர் .பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி









BSNLன் வருவாய் உயர்வு மற்றும் பல மத்திய சங்க செய்திகள்
மாநில சங்க சுற்றறிக்கை எண்:145படிக்க :-Click Here
Tuesday, January 24, 2017
பெரும் திரள் மேளா
24/01/2017 அன்று நமது BSNLEU ஊழியர்கள் மார்க்கெட்டிங் பகுதி ஊழியர்களுடன் இணைந்து பெரும் திரள் மேளாவை மாவட்டம் முழுவதும் நடத்தினார்கள் .வழக்கம் போல் சில அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் ஊழியர்களை மேளாவில் பங்கேற்பதை தடுப்பதில் முனைப்பு காட்டினார்கள் .கிராமப்புற பகுதிக்கு செல்வதற்கு போதிய வாகன ஏற்பாடு செய்யப்படவில்லை .இப்பேற்பட்ட நிலைமை மீண்டும் வரக்கூடாது என்பதற்கு மாவட்ட செயலர் மாவட்ட பொது மேலாளரின் கவனத்திற்கு இப் பிரச்சனையை கொண்டு சென்று உள்ளார் ..கன்னிசேரி புதூரில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் , விருதுநகர் கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,தோழர் மாரியப்பா ,சிம் விற்பனை புகழ் தோழர் K ராஜேந்திரன் பங்கேற்ற நிகழ்வில் 74 சிம்களும் .ராஜபாளையத்தில் 340 ம் சிவகாசியில் 267 ம் அருப்புக்கோட்டையில் 66 ம் 2 M N P யும் ,திருவில்லிபுத்தூரில் 47 ம் காரியாபட்டியில் 70 ம் , விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 83 ம் , காரியாபட்டியில் 70 ம் பாலவநத்தத்தில் 95ம் ஆக மொத்தம் 1042 சிம்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன , மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி , தோழர் முத்துச்சாமி , தோழர் கருப்பசாமி , தோழர் ராஜு , தோழர்கள் முனியாண்டி , கணேசமூர்த்தி ,மதிக்கண்ணன் .உதயக்குமார் , தியாகராஜன் , தோழியர்கள் பாண்டி செல்வி. பாண்டியம்மாள் ,மேரி , கோவிந்தராஜ், வெள்ளை பிள்ளையார் , பொன்னுச்சாமி , ரவிச்சந்திரன் ,தியாகராசன், ராதாகிருஷ்ணன் , சுந்தரமகாலிங்கம் , சமுத்திரம் , சுப்பையா , நாகேந்திரன் , ஜெயராமன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி உட்பட பலர் பங்கெடுத்து சிறப்பித்து உள்ளனர் .அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி





Thursday, January 19, 2017
பெரும் திரள் முறையீடு
BSNLEU சங்கத்தின் 3 வது செயற்குழு முடிவின்படி பெரும் திரள் முறையீடு போராட்டம் 18/01/2017 அன்று நடைபெற்றது . மாவட்ட செயலர் ரவீந்திரன்,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ,சிவகாசி OCB கிளை செயலர் தோழர் முத்துசாமி ,மாவட்ட உதவி செயலர்கள் அஷ்ரப் தீன் ,ஜெயக்குமார் ,அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் கண்ணன் ,விருதுநகர் SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கணேசமூர்த்தி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,சிங்காரவேலு உட்பட பெரும் திரளாக ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர் .மாவட்ட பொதுமேலாளர் அவர்களிடம் skilled wage ஐ கேபிள் பகுதியில் வேலையா பார்க்கும் ஊழியர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடிதம் வழங்கப்பட்டது .மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு இப் பிரச்னையை கொண்டு செல்வதாக மாவட்ட பொது மேலாளர் உறுதி அளித்தார் .80 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்னும் ESI அட்டை வழங்காத விஷயம் மீண்டும் நினைவூட்டப்பட்டது .ஒப்பந்த விதிப்படி ஒப்பந்தகாரரே கடப்பாரை ,மண்வெட்டி வாங்கி தர வேண்டும் என் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது , வழங்கப்படவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் .அதன் பின் நடை பெற்ற கூட்டத்தை ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் முனியசாமி ,BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் .கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன .
கேபிள் பகுதி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் RLC வழிகாட்டலின் படி தரும்படி வலியுறுத்தி
பிப்ரவரி 10 ஆம் தேதி அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்
மார்ச் 6 ஆம் தேதி பெரும் திரள் உண்ணாவிரத போராட்டம்
மார்ச் 20 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (மாநில சங்க ஒப்புதலோடு )
டெல்லி பேரணிக்கு ஒப்பந்த ஊழியர்கள் செல்வதற்கு BSNLEU
சங்கத்தின் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் தலா 200/- ரூபாய் கொடுப்பது
தோழர் முத்துராமலிங்கம் குடும்ப நல நிதிக்கு ட்ரான்ஸ்மிஷன் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர் தோழர் திரவியம் ரூபாய் 500 வழங்கினார் .மாண்டுவிடவில்லை மனிதாபிமானம் என்பதை நமது தோழர்கள் நிரூபித்து வருகிறார்கள் .சிவகாசி OCB கிளை மூன்றாம் தவணையாக ரூபாய் 2150 ஐ தோழர் முத்துசாமி வழங்கினார் .
























Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...










































