Thursday, January 19, 2017

சிவகாசி பொது குழு கூட்டம்

கடந்த 11ம் தேதி  சிவகாசி பொது குழு கூட்டம் தோழர்கள் ராஜமாணிக்கம்  மற்றும் ராஜாராம் மனோகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .ஆய் படு பொருளை சமர்பித்து கிளைச்செயலர்கள் முத்துச்சாமி , கருப்பசாமி ஆகியோர் பேசினர் .ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை அதன் மாவட்ட செயலர் ராமச்சந்திரன் பேசினார் .அதன் பின் மாவட்ட செயலர் ரவீந்திரன் தொகுப்புரை வழங்கினார் . கிளைப் பொருளர் தோழர் இன்பராஜ் நன்றி நவின்றார் ' முத்துராமலிங்கம் குடும்ப நிதியாக 2 ம் தவணையாக ரூ .4400 ஐ தோழர் முத்துச்சாமி OCB கிளை சார்பாகவும் ,சிவகாசி ஒப்பந்த ஊழியர் கிளை ரூ .1001 ம் வழங்கினார்கள். தொடர்ந்து ரோடு ஷோகளை வெற்றிகரமாக நடத்தும் இரண்டு கிளைகளுக்கும் மாவட்ட சங்கம் பாராட்டை தெரிவித்தது .கிளை கூட்டங்களில் ஊழியர்களை முழுமையாக பங்கேற்க செய்ய அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது .
Image may contain: 6 people, people sitting and indoor
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 5 people, people sitting
Image may contain: 4 people, people sitting and indoor
Image may contain: 1 person
Image may contain: 3 people, people sitting and indoor

Monday, January 16, 2017

மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக

மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஜனவரி 31ல் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் ! தமிழகத்தில் இந்த இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட தமிழ் மாநில சங்கம் அறைகூவல் விடுக்கிறது. மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

தனித்து இருக்க முடியாத பாடகன்

நன்றி :- தீக்கதிர் 

Wednesday, January 11, 2017

மெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள்

Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 1 person, sitting
Image may contain: 3 people, people sitting
நேற்று நடைபெற்ற மெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள்  பெரும் அளவில் பங்கேற்றனர் .சாத்தூர் மற்றும் விருதுநகர் ப்குதியில் 400 சிம்களும் ,சிவகாசியில் 400 சிமகளும்,ராஜபாளையம் ப்குதியில் 375 சிம்களும் ,அருப்புக்கோட்டை பகுதியில் 62 சிம்களும் என ஒட்டு மொத்தமாக 1200 க்கும் மேற்பட்ட சிமகள் ஒரே நாளில் விற்கப்பட்டன .சிவகாசி மற்றும் ராஜபாளையம் பகுதி  நமது தோழர்கள் தொடர்ந்து சிம் விற்பதில் சாதனை செய்து வருகின்றனர் .தோழியர்கள் பாண்டிச்செல்வி மற்றும் பாண்டியம்மாள் நேற்றைய மேளாவில் மாவட்ட செயலருடன் பங்கேற்றனர் .ராஜபாளையத்தில் தோழர்கள் பொன்ராஜ் ,வெள்ளைப்பிள்ளையார் ,தியாகராஜன் ,பொன்னுசாமி ,அனவ்ரதம் ,வேலுச்சாமி ,முருகன் ,ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர் .அருப்புக்கோட்டையில் கிளை செயலர் மதிக்கண்ணன் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் அஷ்ரப்தீன் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர் .

Saturday, January 7, 2017

நன்றி! நன்றி!! நன்றி!!!

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

தோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி

தோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி 
Image may contain: 1 person, closeup
          நெஞ்சை நெகிழவைத்த நிகழ்ச்சி 
 நமது அருமை தோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு மற்றும் அவரது குடும்ப நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை 300 மணி அளவில் தோழர் சமுத்திரக்கனி தலைமையில் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் முன்னணி வகித்து உரை நிகழ்த்தினார் .அதன் மாவட்ட செயலர் ரவீந்திரன் குஜராத் முதல் சோழபுரம் வரை அவர் சென்ற தடங்களை ,தொழிற்சங்க இயக்கங்களில் அவரின் பங்களிப்பை குறிப்பாக அகில இந்திய மாநாடு நடைபெற்ற லூதியானா ,கொல்கொத்தா ,அஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு ,டெல்லி பேரணியில் ,JTO பயிற்சியின் போது  கூட 8 வது அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு கூட்டத்தில்  பங்கேற்றது .BSNLEU ஊழியர் சங்கம் தனது ஊழியர்களை என்றும் கைவிடாது என்பதை நிரூபிக்கும் முகமாய் 31/12/2016 அன்று மாவட்ட சங்கம் அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யுமாறு குறும் தகவல் அனுப்பியது .1 வார காலத்தில் நமது ஊழியர்கள் களத்தில் இறங்கி 1,90,951 ரூபாய் வசூல் செய்தனர் .குறிப்பாக ராஜபாளையம் தோழர்கள் 1,18,000 ரூபாய் வசூல் செய்து உள்ளனர் .தோழர் முத்துராமலிங்கம் அனைத்து ஊழியர்களிடம் இன்முகமாய் பழகியது, நிர்வாக ரீதியில் ராஜபாளையம குரூப்ஸ் பகுதியில் சிறந்த சேவை செய்தது  அனைத்து தரப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அனைவரையும்  தங்களது பங்களிப்பை செய்ய வைத்து உள்ளது .தோழரை நினைவு கூர்ந்து தோழர்கள் மதி கண்ணன் ,முத்துசாமி,கேசவன் ,SNEA மாவட்ட செயலர் திரு செந்தில்குமார் ,ராஜபாளையம் கிளை செயலர் பொன்ராஜ் ,மாவட்ட சங்க நிர்வாகி அனவ்ரதம் ,தோழர்கள் வெள்ளைப்பிள்ளையார் ,ஷண்முககுமார் ஆகியோர் பேசினர் .அதன் பின் தோழரின் திரு உருவ படத்தைSNEA மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் திறந்து வைத்தார் .அவர் கண்ணீர் மல்க உரைநிகழ்த்த  அனைவரும் கலங்கினர் .தோழர் K .R.கிருஷ்ணகுமார்  மறைந்த தோழனுக்கு கவிதாஞ்சலி செலுத்தினார் .அதன் பின் அனைவரும் வழங்கிய ரூபாய் 1,90,951 ஐ முத்துராமலிங்கம் துணைவியாரிடம் மாவட்ட சங்கம் முதல் தவணையாக  வழங்கியது .தோழியர்க்கு வரக்கூடிய பண பலன்கள் மற்றும் கருணை அடிப்படையில் ஆன வேலை வாய்ப்பு ஆகியவற்றை பெற நமது மத்திய ,மற்றும் மாநில சங்கங்கள் உரிய துணை புரியும் .






































11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...