Saturday, January 7, 2017

3 வது மாவட்ட செயற்குழு

3 வது மாவட்ட செயற்குழு நமது தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மறைந்த தோழர்களுக்கு மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் நினைவஞ்சலி உரை நிகழ்த்த அனைவரும் ஒரு நிமிட மௌனஞ்சலி செலுத்தினர் .மாவட்ட செயற்குழு ஆயபடுபொருளாக 1.) அனைத்திந்திய மாநாட்டு ரிப்போர்ட் 2.)கிளை மாநாடுகள் 3).மறைந்த தோழர் முத்துராமலிங்கம் குடும்ப நிவாரணம்  வழங்குவது 4) ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன .நமது மாவட்ட சங்கம் சார்பாக அனைத்திந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 3,09,000/- யும் ,விளம்பரமாக ரூபாய் 20,000/- கொடுக்கப்பட்டு உள்ளது .இந்த இலக்கை அடைய பாடுபட்ட அனைத்து மாவட்ட சங்க ,கிளை சங்க ,மற்றும் நமது ஊழியர்களுக்கு மாவட்ட சங்கம் தனது பாராட்டுகளை தெரிவித்தது .அதே போல் கடைசி நிமிடத்தில் ரூபாய் 20,000 விளமபரம் வாங்கிய சிவகாசிOCBகிளை செயலர் தோழர் முத்துசாமி அவர்களுக்கும் மாவட்ட சங்கம் பாராட்டைஉரித்தாக்கியது .அனைத்து கிளைகளும் உரிய இலக்கை செலுத்தி விட்டன .நமது அடுத்த மாவட்ட மாநாட்டை 2018 ஜூன்  கடைசியில் ராஜபாளையத்தில் முத்துராமலிங்கம் தடம் பதித்த மண்ணில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது .கிளை மாநாடுகளை உரிய தேதியில் நடத்த கிளை பொதுக்குழுவை கூட்டி உரிய முடிவு எடுக்க கிளைகள் அறிவுறுத்தபட்டு உள்ளன .ஒப்பந்த ஊழியர் ஊதிய பிரச்சனையில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க 18/01/2017 அன்று பெரும் திரள் முறையீட்டு போராட்டம் நடைபெறும் .மாநில  சங்கத்தின் ஒப்புதலோடு மார்ச் மாதம் முதல் ஒரு காலவரையற்ற போராட்டத்தை ஒப்பந்த ஊழியர் சங்கம் நடத்தும் .பல்வேறு தல மட்ட பிரச்சனைகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் .அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் விவாதத்தில் பங்கேற்றனர் .மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் நன்றி நவில மாவட்ட செயற்குழு  நிறைவுற்றது .
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 1 person, sitting and indoor

Image may contain: 1 person, standing and beard
Image may contain: 1 person, sunglasses

Image may contain: 1 person
Image may contain: 1 person, standing and indoor
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 1 person, standing and smoking
Image may contain: 1 person
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, standing and stripes
Image may contain: 1 person, standing, sunglasses, eyeglasses and indoor
Image may contain: 1 person, standing and sunglasses
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, sunglasses
Image may contain: 1 person, sitting
Image may contain: 7 people, people sitting
Image may contain: 3 people, people sitting
Image may contain: 1 person, standing

8 வது அனைத்திந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்

Image may contain: text

Thursday, January 5, 2017

8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை

நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாடு சென்னையில் மிகுத்த உற்சாகத்துடன் 31-12-2016 அன்று துவங்கி 03-01-2017 அன்று நிறைவுற்றது .நமது தமிழ் மாநில  சங்கம் மாநாட்டு ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்து இருந்தது .கடமை உணர்வோடு தொண்டர்கள் அற்புதமான பணியை செய்தனர் . கண்ணியமிக்க உணர்வோடு பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் ஒரு ராணுவ கட்டுப்பாட்டுடன்  பங்கேற்றனர் .அனைத்து மாநில பிரதிநிதிகளும் பங்கேற்ற அற்புதமான விவாத அரங்கம் நமது நிறுவன மற்றும் ஊழியர் பிரச்சனைகள் அலசி ஆராய்ந்தது.நமது பொது செயலரின் உரை வீச்சு உலக நடப்புகளில் இருந்து தற்போதய நிலவரம் குறிப்பாக புதிய டவர் நிறுவனம் உருவாக்கம் ,அதை எதிர்த்து நாம் நடத்தவேண்டிய போராட்டங்கள் ,01/01/2017 முதல் நாம் பெற வேண்டிய ஊதிய மாற்றம் , புன்னகையுடன் சேவையை செழுமையாக நடத்த    வேண்டிய அவசியம் ,ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனை ஆகியவற்றை மிக தெளிவாக பிரதிநிதிகளுக்கு உணர்த்தியது .1800 க்கும் மேல் கலந்து கொண்ட ஒரு உற்சாகமான எழுச்சி மிகு  மாநாடாக ,வரலாற்று பதிவில் பதிவான மாநாடாக சென்னை மாநாடு  விளங்கியது . இம் மாநாடு வெற்றி அடைய  பெரும் பணியாற்றிய தமிழ் மாநில சங்கத்திற்கும் ,ஒப்பந்த ஊழியர் சங்கத்திற்கும் ஒப்பற்ற பாராட்டுக்கள் .இம் மாநாட்டுக்கு பெரும் அளவில் உற்சாகமாக நிதி வழங்கிய அனைத்து ஊழியர்கள் ,அதிகாரிகள் அனைவர்க்கும் நமது மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது .
Image may contain: one or more people, people on stage, crowd and outdoor
Image may contain: one or more people
Image may contain: 3 people, people smiling, people standing
Image may contain: one or more people, people standing and crowd
Image may contain: one or more people and crowd
Image may contain: one or more people, people standing, crowd and outdoor
Image may contain: 5 people, people smiling, people on stage, crowd, child and outdoor
Image may contain: 3 people, crowd and outdoor
Image may contain: 14 people, people standing
Image may contain: 2 people, people on stage, people standing, crowd and outdoor
Image may contain: 3 people, crowd and outdoor
Image may contain: one or more people
Image may contain: one or more people
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people standing and indoor
Image may contain: 3 people, people standing
Image may contain: one or more people, people on stage and indoor
Image may contain: 4 people, people standing
Image may contain: 1 person
Image may contain: 1 person
Image may contain: 2 people
Image may contain: 6 people, people standing
Image may contain: one or more people and people standing
Image may contain: 1 person, crowd
Image may contain: 3 people, people standing
Image may contain: 3 people, text
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: 4 people, people standing
Image may contain: 5 people, people standing and indoor
Image may contain: 2 people, people standing and people sitting
Image may contain: 3 people
Image may contain: 3 people, people standing

சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்போம் பி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம்


பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாடு சென்னையில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 3ம் தேதி வரை 4 நாட்கள் அகில இந்திய தலைவர் பல்பீர்சிங் தலைமையில் நடைபெற்றது.மாநாட்டில் 4 நாட்கள் பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் இடையே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.புழக்கத்தில் இருந்த 86 சதவிகித நோட்டுகளை செல்லாது என அறிவித்து 14 சதவிகித நோட்டுகளை மட்டுமே பணபரிவர்த்தனைக்கு ஏதுவாக்கி பாமர மக்களின் அன்றாட வாழ்க்கையை நாசமாக்கிய மத்திய மோடி அரசை கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பேடிஎம், ஜியோ மணி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இதர தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராடவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டுப்போராட்டம்
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளும், சங்க நடவடிக்கைகளும் முதலாளித்துவத்தால் முடக்கப்படுகின்றன. பிற்போக்கு அரசியல் கட்சிகளும், சக்திகளும் மக்களைப் பிரித்தாள முனைகின்றன. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு இத்தாக்குதல்கள் முன்பு இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து மற்ற தொழிற்சங்கங்களை இணைத்து மேலும் தீவிரமாக போராடவும் தீர்மானிக்கப்பட்டது.
சமூக நல்லிணக்கம்
பல மதங்கள், பல மொழிகள், பல இனங்கள் வாழும் இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் அம்சம் காரணமாக நல்லிணக்கத்தை பேணிவரும் வேளையில், மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகளை அடிப்படைவாத சக்திகளும், பிளவுவாத சக்திகளும் ஊக்குவித்து வருவதால் ஒற்றுமைக்கு ஊறு ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்தும் மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தவும், புதிய சம்பள விகிதம் 1.1.2017 முதல் அமலாக உடனடியாக பேச்சுவார்த்தையை துவக்கக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆண்டுதோறும் ஸ்டேக்னேஷன் இன்கிரிமென்ட் வழங்க வேண்டும், போதிய பணி நியமனம் செய்ய வேண்டும், டெலிகாம் துறையில் வலுவான பொதுத்துறையை உருவாக்க வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
                     நன்றி :- தீக்கதிர் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...