Monday, November 7, 2016

தைரியம் இருந்தால் சொல்லு யார் அந்த இடை தரகர்

ஒவ்வொரு தொழிற்சங்கத்திற்கும்  தன் நியாயமான பிரச்சனைகள் தீர்விற்கு போராட்ட உரிமை இருக்கிறது .ஆனால் தவறான பிரச்சாரம் செய்தால் அதற்கான பதிலை சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது .ஒரு ஊழியர் ஒரு வேலையும் செய்யமாட்டார் என்று நாம் சொல்லவிலலை .அந்த அதிகாரி தான் சொன்னார் .அப்படிப்பட்ட ஒருவர் தன முறையான டெனுரை (வந்து 6 மாதம் தான் ஆகிறது )முடிக்காமல் ஒரு தொலை பேசி நிலையத்திற்கு விண்ணப்பம் செய்தார் .அந்த தொலைபேசி நிலைய ஊழியர் சிவகாசி அவுட்டோர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தார் .அதே போல் ஒரு ஊழியர் விருதுநகர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு விண்ணப்பம் செய்தார் .அவரும் அவர் பணி செய்யும் பகுதியில் டெனுரை முடிக்கவில்லை .மேற்குறிய மாறுதல்களை போடவேண்டும் என்று போராட்டமாம் . இதே வாயால் இவர்கள் RM /TM  கேடர் GM அலுவலக மாற்றலில் மட்டும் இவர் 4 வருடம் முடிக்கவில்லை அவர் முடிக்கவில்லை என்று ஆலாபனை செய்துள்ளனர் .இவர்களுக்கு வேண்டியபடி மாறுதல்கள் போட  வேண்டுமானால் மாறுதல் விதிகளில் மாறுதல் செய்தால் தான் முடியும் .அதே போல் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு immunity கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தே இல்லை .ஆனால் தொலை தூர மாறுதல்கள் போட்ட பின்பு ஜூன் மாதம் முதல் விருப்பம் இல்லாமல் யாரையும் மாற்றல் செய்யமுடியாது என்று விதி தெளிவாக கூறுகிறது . பதிலுக்கு எந்த ஊழியரையும்  நியமனம் செய்யாமல்  தொலைபேசி நிலையங்களை (வீரசோழன் மற்றும் பரளச்சி )மூடி விட வேண்டுமாம் இவர்களுக்கு .BSNL வளர்ச்சிக்கு இவர்களால் ஆன கைங்கரியம் இது தான் .அதோடு நமது BSNLEU சங்கத்திற்கு வால்பிடிக்கும் நிர்வாகம் என்று வேறு கதைக்கிறார்கள் .ராஜபாளையம் தொடங்கி ,அருப்புக்கோட்டை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பிரச்சனைகளில் ஒரு எழுச்சிமிகு போராட்டம் நடத்தி ஜெயம் கொண்ட சங்கம் நமது சங்கம் .நமக்கு வால் பிடிக்கும் என்று இவர்கள் சொல்லும் அந்த அதிகாரிகள் முன்பாக களம் கண்ட சங்கம் நமது சங்கம் .இவர்களோ  அரசியல் வாதிகளை வைத்து அதிகாரிகள் மேல் புகார் கொடுத்து ஆதாயம் தேட  அலைந்தவர்கள் .அந்த அரசியல்வாதி இவர்களுக்கே  அல்வா கொடுத்தது தனி கதை .புரோக்கர் வேலை பார்க்கிறது BSNLEU சங்கம் அல்ல .தில் இருந்தால் கூறு யார் என்று  . விதிக்கு புறம்பான இவர்கள் மாறுதல்களை எல்லாம் நமது சங்கமும் ஒத்து கொண்டும் கூட ,சாத்தூர் பகுதியில் சேல்ஸ் பகுதிக்கு ஒரு ஊழியர் நியமிக்க பட வேண்டும் என்ற நமது சங்கத்தின் நெடு நாள் கோரிக்கையை நிர்வாகம ஏற்று கொள்ள கூடாது என்று இவர்கள் தடை போட்டால் நாம் வேடிக்கை பார்க்கணுமாம் .. இலாகாவின் விதிகள் இவர்கள் தான் என்பது பழைய காலம் .போராட்டத்தில் புடம் போட்ட தங்கம் நமது இயக்கம் .எதையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு இருக்கிறது .

                                     நேர்மை என்றும் வெல்லும் .
நிர்வாகம் நடு நிலை  தவறினால் நமது போராட்டம் எப்படி இருக்கும் என்று நமது வலிமையை உணர்த்துவோம் .

துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் இதர செய்திகள்

சுற்றறிக்கை எண்:138 படிக்க :-Click Here

Friday, October 28, 2016

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைவர்க்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கம் தெரிவித்து கொள்கிறது 

Thursday, October 27, 2016

2 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

     இன்று நமது BSNLEU சங்கத்தின் 2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் L .தங்கதுரை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி பேச அனைவரும்  1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் மாவட்ட செயலர் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது .வரும் நவம்பர் 10 போராட்டத்திற்கு 2 பேருந்துகளில் ஊழியர்களை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது .வரும் நவம்பர் மாதம் 17,18,19 தேதிகளில்   ரோடு ஷோ நடத்துவது .பெரும் எண்ணிக்கையில் நமது ஊழியர்களை ஈடுபடுத்துவது .ரோடு  ஷோகளில் விற்கப்படும் சிமகள் கடும் காலதாமதத்திற்கு பிறகு activation செய்யப்படுவது வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளதை அனைவரும் சுட்டி காட்டினார்கள் .அனைத்து கிளை செயலர்களும் மாநில ,மாவட்ட சங்க செய்திகளை உடனடியாக சங்க பலகையில் போட  வேண்டும் .விருதுநகர் ,சிவகாசி தவிர்த்து அனைத்து  கிளைகளும் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் .பிரைமரி மற்றும் பில்லர் பிரச்சனைகள் சரி செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை அனைத்து பகுதியிலும் வந்துள்ளன .கேடர் பெயர் மாற்றத்திற்கு பிறகு அனைவருக்கும் புதிய அடையாள அட்டை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ,வரும் 5 மாதங்களில் outdoor பகுதியில் அதிகம் பேர் பணி ஒய்வு பெற உள்ளதை ஒட்டி அலுவலக பணியில் இருந்து  TT  களை விடுவிக்க வேண்டும் , AO (drawal ) பகுதியில் ஊழியர் பிரச்சனைகள் அலைக்கழிக்கப்படுவதை பல தோழர்கள் சுட்டி காட்டி உள்ளனர் ஆவியூர் BSNL site இல் CALL DROP ஆவது, RR நகர், கலெக்டர் EXCHANGE பகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் தண்ணீர் பிரச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் மைக்ரோ வேவ் குடியிருப்பில் சிண்டெக்ஸ் மாற்ற வேண்டிய பிரச்சனைகள்  பிராட் பேண்ட் மற்றும் 3G யில் உள்ள ஸ்பீட் பிரச்சனை, Outdoor பகுதியில் அதிகம் உள்ள JE களை அதிகம் தேவைப்படும் பகுதிகளுக்கு மாற்றுவது, N.சுப்பையாபுரம் BTS,  M.ரெட்டியாபட்டி  BTS, பெத்தூரெட்டியபட்டிBTS, சிவகாசியில் கவிதா நகர் காந்தி ரோடு,தெய்வானை நகர் பகுதிகளில் கேபிள் போடுவது ,ஒப்பந்த ஊழியர்களுக்கு கடப்பாரை, மண்வெட்டி ஆகியவற்றை நிர்வாகம் வழங்குவது ,ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த அளவே போனஸ் வழங்கப்பட்டு உள்ளதை சரி செய்ய கடிதம் கொடுப்பது, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ரிங்கை சரி செயவது என்று சேவையை வளப்படுத்தக்கூடிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன .மாவட்ட சங்கம் இதை முழுமையாக தொகுத்து நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கும் .லோக்கல் கவுன்சில் மற்றும் ஒர்க் கமிட்டி கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று இன்று நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து உள்ளோம் .தேவைப்படும் இடங்களில் ஊழியர்களை நிரப்புவதில் நிர்வாகம் காலதாமதம் செய்தால் ஒரு எழுச்சிமிகு போராட்டத்தை நிர்வாகத்திற்கு எதிராக நடத்துவது என்ற முடிவோடு மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூற செயற்குழு நிறைவு பெற்றது . மதிய உணவுக்கான செலவை தன் தாயார் நினைவு தினத்தை ஒட்டி முழுமையாக ஏற்று கொண்ட மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் அவர்களுக்கு மாவட்ட சங்கம் தன நன்றியை தெரிவித்து கொள்கிறது .




















ஆர்ப்பாட்டம்


BSNL நிறுவனத்திற்கு சொந்தமான டவர்களை பிரித்து தனியாக ஒரு துணை நிறுவனம் அமைக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து விருதுநகர் GM அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி தலைமை வகித்தார் .கோரிக்கையை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,NFTE  பொறுப்பு மாவட்ட செயலர் தோழர் D.ரமேஷ் ,AIBSNLEA மாவட்ட சங்க நிர்வாகி தோழர் மணிகண்டன் ஆகியோர் விரிவாக பேசினர் .அதன் பின் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்பாட்டத்தில் GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் கோஷங்களை எழுப்ப ,NFTE சங்க கிளை செயலர் தோழர் சம்பத்குமார் நன்றியுரை கூறினார் .பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் ,அதிகாரிகள் கலந்து கொண்டனர் .ஆனால் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு SNEA சங்கத்தில் இருந்து ஒரு அதிகாரியும் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்க நிகழ்வு ஆகும் 










11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...