Wednesday, October 19, 2016

மேளாவில் நமது BSNLEU தோழர்கள்

       விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதம் 6,7 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்ற மேளாவில் நமது BSNLEU தோழர்கள்  உற்சாகமாக கலந்து கொண்டனர் மூன்று நாட்கள் நடைபெற்ற மேளாவில் 2500 க்கும் மேற்பட்ட சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .80 க்கும் மேற்பட்ட  தரைவழி இணைப்புகள் பெறப்பட்டு உள்ளன .விருதுநகரில் நமது BSNLEU பெண் தோழியர்கள் கலந்து கொண்ட நிகழ்வும் நடைபெற்றது .மேளாவில் மாவட்ட செயலர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன் ,ஜெயக்குமார் ,மங்கையற்கரசி ,வெங்கடப்பன் ,ராஜமாணிக்கம் ,முனியாண்டி , I .முருகன் ,ராதாகிருஷ்ணன் ,அனவ்ரதம், ராஜு  மற்றும் கணேசமூர்த்தி ,கிளை செயலர்கள் தோழர்கள் மாரிமுத்து ,இளமாறன் ,பொன்ராஜ் ,கருப்பசாமி ,முத்துசாமி மற்றும் கலையரசன் , நமது முன்னணி தோழர்கள் சிவகாசி குருசாமி,ராஜையா,நாகேந்திரன் ,உதயகுமார் ,சோலை  ,ராஜ்மோகன் , சிவகாசி தோழர் மகாலிங்கம் ,தங்கமாரி ,தோழியர் தனலட்சுமி ,பாண்டியம்மாள் ,மாரியப்பா ,கோவிந்தராஜ் ,தங்கராஜ் ,ஜெயராம்,  ராஜபாளையம் தோழர்கள் சக்திமோஹன் ,வெள்ளை பிள்ளையார் ,தியாகராஜன் ,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டது சிறப்பு மிக்க நிகழ்வு ஆகும் .RR நகர் தோழர் K .ராஜேந்திரன் தனியொரு நபராக 100 சிம் களை விற்று 18/10/2016 அன்று சாதனை படைத்தார் .

Monday, October 17, 2016

மாவட்ட செயற்குழு கூட்டம்

வருகின்ற 27/10/2016 வியாழக்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .
மாவட்ட பொது மேலாளருடன் அன்றே பேட்டி இருப்பதால்  மாவட்ட சங்க நிர்வாகிகள் பிரச்சனைகளை எழுத்து பூர்வமாக  கொண்டு வரும் படி தோழமையுடன் கேட்டு கொள்கிரோம் 

                                         
ஆய்படு பொருள் :-

1.மாநில செயற்குழு முடிவுகள் 
2.சென்னை அகில இந்திய மாநாடு

3.ஸ்தல மட்ட பிரச்சனைகள்
4.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 
பி எஸ் என் எல்  ஊழியர் சங்கம் ,விருதுநகர் மாவட்டம் 
                                                                                         

26.10.2016 FORUM ஆர்ப்பாட்டம்

துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 26.10.2016 FORUMத்தின் ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகரமாக்குவோம்:- 14.10.2016 அன்று கூடிய FORUMத்தின் CORE COMMITTEE கூட்டம், 26.10.2016 அன்று சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. இந்த துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து அனைத்து ஊழியர்களையும், அதிகாரிகளையும் திரட்டி இந்த முதல் கட்ட இயக்கமான 26.10.2016 ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட அனைத்து விதமான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கிளை  செயலாளர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறோம்.
மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

தமிழ் மாநிலத்திலேயே இலக்கை எட்டிய முதல் முத்தான மாவட்டம் விருதுநகர்

நன்றி வாழ்த்துக்கள் க்கான பட முடிவு
     அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 3 லட்சம் என்று நமது மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோது ஒரு மிக பெரிய தயக்கம் ஏற்பட்டது .மாவட்ட செயற்குழுவில் எடுத்த முடிவை நமது ஊழியர்களிடம் சென்ற போது ஊழியர்கள் வாரி வழங்கினர் .16,000 ரூபாயில் ஆரம்பித்து குறைந்த பட்சமாக 200 ரூபாய் வரை கிட்டத்தட்ட 99% நமது சங்க தோழர்கள் வழங்கியதின் விளைவு இன்று நமது தமிழ் மாநில சங்கம் நிர்ணயித்த இலக்கை (ரூபாய் 3,00,000)எட்டி தமிழ் மாநிலத்திலேயே இலக்கை எட்டிய முதல் மாவட்டமாக்கிய நமது விருதுநகர் தோழர்களுக்கும்,அதற்க்கு பணி புரிந்த கிளை செயலர்களுக்கும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் நமது முத்தான பாராட்டுக்கள் .நமது மாவட்டத்தில் ஊழியர்களின் உணர்வோடு கலந்தது நமது சங்கம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து இருக்கிறோம் . 

Friday, October 14, 2016

ஊழியர்களின் உழைப்பிற்கும் ஒற்றுமைக்கும் கிடைத்திட்ட வெற்றி!!!!

ஊழியர்களின் உழைப்பிற்கும் ஒற்றுமைக்கும் கிடைத்திட்ட வெற்றி!!!! 2014-15ஆம ஆண்டிற்கு CMD முதல் காசுவல் மஸ்தூர் வரை ரூ.3,000/- PLI.மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Thursday, October 13, 2016

நிர்வாகம் கொடுத்த உறுதி மொழி காரணமாக போராட்டம் தள்ளிவைப்பு

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க நிர்வாகம் உறுதி மொழி கொடுத்துள்ளதின் அடிப்படையில் 14.10.2016 அன்று நடைபெற இருந்த மாலை நேர தர்ணா போராட்டம் தள்ளி வைப்பு.மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Tuesday, October 11, 2016

ஆர்ப்பாட்டம்

சென்னை CGM அலுவலகத்தில் 10 ஆண்டுகள் பணி நீக்கம் செய்த 11 ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...