Thursday, September 8, 2016

2016 செப்டம்பர் 8 - தர்ணா

24 அம்ச கோரிக்கைகைகளின் தீர்வை கோரி 08-09-2016 அன்று தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஜெயக்குமார் ,வெங்கடப்பன் ,அஸ்ரப் தீன் ,கிளை செயலர்கள் கண்ணன் ,இளமாறன் ,கருப்பசாமி ,முத்துசாமி ,சமுத்திரம் ஆகியோரும் ராஜபாளையம் கிளை சார்பாக தோழர் பொன்ராஜ் அவர்களும் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர் பெருமாள்சாமி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் காதர் ,ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,ராதாகிருஷ்ணன் ,ஆகியோர் பேசினர் .நிறைவுரையாக மாவட்ட செயலர் பேசினார் .மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 90 பேர் தர்ணாவில் பங்கேற்றனர் .31/08/2016 அன்று பணி ஓய்வு பெற்ற தோழியர் சமுத்திரவள்ளி அவர்கள் போராட்டத்தில் கௌரவிக்கப்பட்டார் .இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாவட்ட சங்க நிர்வாகி மங்கையற்கரசி அவர்கள் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 16,000/- வழங்கினார் .வாரி வழங்கிய தோழியருக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி .மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் நன்றி கூறி தர்ணாவை நிறைவு செய்தார் .




















































தோழர் செல்லப்பா in News 7 கேள்வி நேரம்

06.09.2016 அன்று NEWS 7 தொலைகாட்சியில் BSNL ஊழியர் சங்கத்தின் உதவி பொது செயலாளர் தோழர் S.செல்லப்பா அவர்கள் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்சியைக் காண கீழே உள்ள படத்தில் சொடுக்கவும்.

 தோழர் செல்லப்பா in News 7 - கேள்வி நேரம்


Wednesday, September 7, 2016

தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டம் 
UNITED FORUM
Settle United Forum's 24 point charter of demands, including:- 
  • Immediate negotiations for Wage Revision w.e.f. 01.01.2017.
  • Payment of Rs.7,000/- as adhoc PLI.
  • Settle stagnation by granting annual stagnation increments.
  • Implement DoP&T orders on promotions of SC/ST employees.
  • Pension contribution of Directly Recruited employees.

அனைத்திந்திய மாநாட்டு சார்பாளர் மற்றும் பார்வையாளர் எண்ணிக்கை

அனைத்திந்திய மாநாட்டு சார்பாளர் மற்றும் பார்வையாளர் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக நமது அனைத்திந்திய சங்கம் வெளியிட்டு விட்டது .அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 3 சார்பாளர்களும் 2 பார்வையாளர்களும் மாநாட்டில் பங்கேற்க முடியும் .ஏற்கனவே மாவட்ட செயலரும் ,மாவட்ட தலைவரும் மாநாட்டு   பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர் .மீதம் உள்ள 1 சார்பாளர் மற்றும் 2 பார்வையாளர்கள் வரும் 14 ஆம் தேதி மாலை நடைபெற உள்ள சிறப்பு மாவட்ட   செயற்குழுவில் தேர்ந்து எடுக்கப்படுவர் .மத்திய சங்க கடிதம் படிக்க :-Click Here

Saturday, September 3, 2016

செப்டம்பர் 2 வேலைநிறுத்தம்

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 376 குரூப் "C " மற்றும் "D" ஊழியர்களில் 234 ஊழியர்கள் மகத்தான செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர் .  இது 62.23 % ஆகும் .நமது BSNLEU உறுப்பினர்களில் மொத்தம் உள்ள 217 இல் 182 உறுப்பினர்கள் தங்கள் போராட்ட பதிவை செய்துள்ளனர் .இது நமது ஊழியர்களில் 83.87% ஆகும் .
ஒட்டு மொத்தத்தில் போராட்டத்தில்  பங்கேற்றவர்கள் 234. விடுமுறை எடுத்தவர்கள் 91. பணிக்கு சென்றவர்கள் 51 பேர் .
அதிகாரிகள் 106 பேரில் தனியொருவராக வேலைநிறுத்தம் செய்த தோழர் நாராயணனை SR AO அவர்களுக்கு  புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .
ஒப்பந்த ஊழியர்கள் 119 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர் 

கிளை வாரியாக நமது உறுப்பினர்கள் பங்கேற்பு விபரங்கள் 
Branch       Total  members              strike        Leave                 Duty    
GM (O)              41                              34              4                       3
IMPCS                2                               0               0                       2
Srivilliputhur     24                              22              2                       0
Sattur                 17                              17              0                       0
Aruppukottai      16                              14              1                      1 

Sivakasi             60                               40              20                     0
Rajapalayam      35                               33                2                     0
SDOP,VGR        22                               22                0                     0 

------------------------------------------------------------------------------------------------------
TOTAL            217                            182               29                      6
------------------------------------------------------------------------------------------------------
ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்பு விபரம் 
Virudhunagar --------------------33
Aruppukottai ---------------------14
Sattur           ---------------------- 9 
Sivakasi       -----------------------29
Srivilliputhur ---------------------14
Rajapalayam---------------------- 20 
                               நமது கிளைகளில் 100% வேலைநிறுத்தம செய்த சாத்தூர் மற்றும் SDOP,விருதுநகர் கிளைகளுக்கு புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .100 % பங்கேற்பை நோக்கி செல்லும் பயணத்தில் சிவகாசியில் அதிகம் பேர் விடுமுறை எடுத்தது சரியான நிலைபாடு அல்ல என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும் .இளைய தோழர்களின் பங்கேற்பு வழக்கம் போல் இல்லை என்பது நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கி உள்ளது .

Thursday, September 1, 2016

செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் மற்றும் தோழியர் பகவதி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா

 செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் மற்றும் தோழியர் பகவதி அவர்களின் பணி  ஓய்வு பாராட்டு விழா 31/08/2016 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மிக சிறப்பாகவும் ,உற்சாகமாகவும் நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்  நிகழ்ச்சியாக சங்க கொடியை மூத்த தோழர் தங்கவேலு விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றினார் .அஞ்சலி உரையை மாவட்ட உதவி செயலர் தோழர் .தங்கதுரை நிகழ்த்தினார் .கிளை செயலர் தோழர் சமுத்திரம் வரவேற்பு உரை நிகழ்த்தினார் .அதன் பேசிய மாவட்ட செயலர் ரவீந்திரன் , மாநில உதவி செயலர் தோழர் சுப்பிரமணியன் ,மாவட்ட உதவி செயலர்கள் அஷ்ரப் தீன் ,ஜெயக்குமார் ,வெங்கடப்பன் ,மற்றும் கிளை செயலர்கள் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தின் அவசியத்தையும் , அதை வெற்றி அடைய உறுதி கூறியும் பேசினர் .அத்துடன் நமது முன்னணி தோழியரும் ,முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகியும் ஆன தோழியர் பகவதியின் பணி நிறைவை வாழ்த்தி பேசினர் .மாவட்ட சங்கம் சார்பாக ராஜபாளையம் தோழியர்  சித்திரை செல்வி அவர்கள் தோழியர் பகவதிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார் .மாவட்ட சங்கம் சார்பாக அவர்க்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது .அதன் பின் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு தோழர் சமுத்திரக்கனி தலைமை  வகித்தார் .வர்த்தக ரீதியாக மேம்படுத்தப்படவேண்டிய ஆலோசனைகளை அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் கண்ணன் தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார் .அதன் பின் மாவட்ட உதவி பொது மேலாளர் திரு .மாரியப்பன் ,துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்குறிய பொருளில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .அதன் பின் தோழமை சங்க பிரதிநிதிகள் தோழர்கள் பரமேஸ்வரன் ,கேசவன் ,குருசாமி  ஆகியோர் பேசினர் . அதிகாரிகள் சங்க தோழர்கள் செந்தில்குமார் ,SNEA, நாராயணன் ,AIBSNLEA , ராஜபாளையம் கோட்ட பொறியாளர் திருமதி அரங்கநாயகி ஆகியோரும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .மாவட்ட பொருளர் சந்திரசேகரன் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது .
















11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...