Wednesday, August 12, 2015

டவருக்கான துணை நிறுவன அனுமதிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலிருந்து...

BSNL நிறுவனத்தில் இருந்து 20000 கோடி மதிப்பில் ஆன 65000 டவர்களை பிரித்து தனி நிறுவனமாக மாற்ற மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை கண்டித்து இன்று  FORUM சார்பாக மாவட்டம் முழுவதும் மிக சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அறச்சீற்றத்தின்  ஆவேச காட்சிகள் . 
ராஜபாளையம் 




ஸ்ரீவில்லிபுத்தூர்



சிவகாசி





விருதுநகர்












அருப்புக்கோட்டை



கையெழுத்து இயக்கம்

Fourm வைத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி மத்திய தொடர்பியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்புவதற்காக அருப்புக்கோட்டையில் ஊழியர்கள் மத்தியில் நடைபெற்ற இயக்கத்தில் ஒரு சில காட்சிகள். அருப்புக்கோட்டையில் அனைத்து தரப்பு ஊழியர்களிடமிருந்தும் ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட அஞ்சலட்டைகள் அனுப்ப ஆயத்தமாகி உள்ளன.






தமிழ் மாநில விரிவடந்த செயற்குழு

சிறப்பு சிறு விடுப்பு மாநில நிர்வாக உத்தரவு படிக்க :Click Here

Tuesday, August 11, 2015

உற்சாகம் ஊட்டிய ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம்

இன்று (11-08-2015)  ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் கிளை தலைவர் தோழர் அனவரதம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது . கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் சமர்ப்பித்த ஆய்படு பொருள் மீது விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 நடைபெற  நிறுத்தத்தின் அவசியத்தையும் அதை வெற்றிகரமாக்க வேண்டிய  கட்டாயத்தையும்   மாவட்ட  உதவி    தலைவர் கண்ணன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் வலியுறுத்தி பேசினர் .பன்னாட்டு கம்பெனிகளின்  வேட்டை களமாக இந்திய தேசத்தை ஆக்கும் மத்திய அரசின் போக்கை  தோழர் மதி கண்ணன் கதைகள் கூறி எடுத்துரைத்தார் .மாவட்ட செயற்குழுவின் முடிவுகளை விளக்கி மாவட்ட செயலர் பேசினார் . ஸ்தல மட்ட பிரச்சனைகளை கையாள்வதில் மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை விளக்கி தோழர் சமுத்திரகனி விளக்கினார் .LCM உறுப்பினர் தோழர் தங்கதுரை ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம் ஆகியோர் செப்டம்பர் 2 போராட்டத்தை பற்றி பேசினர் . மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் நன்றியுரையோடு மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை விரிவாக கூறினார் .பெரும் அளவில் ஊழியர்கள் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் .

















Monday, August 10, 2015

கண்டன ஆர்ப்பாட்டம்

BSNL வசம் இருக்கும் 65000 டவர்களை நிர்வகிக்க ஒரு தனி நிறுவனத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவையும் நியமித்திருக்கிறது. BSNL டவர்களை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் பயன்படுத்துகின்ற ஏற்பாட்டினை செய்து தரவே இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்படுகிறது. Deloitte Committeeன் நாசகரப் பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.
இந்த புதிய நிறுவனம் உதயமாகும் பொழுது BSNLன் துணை நிறுவனமாக இருக்கும். பின்னர் அது ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. துணை நிறுவனம், பின் கூட்டு நிறுவனம் என்பது எதில் போய் முடியும் என்பதற்கு VSNL ஒரு உதாரணம். இன்று VSNL இல்லை, அது டாடாவின் தனி நிறுவனமாக மாறி இருக்கிறது. அதே நிலையை நோக்கித்தான் இன்று டவர் நிறுவனம் உதயமாக இருக்கிறது. ரூ.25000 கோடி சொத்து மதிப்பு உள்ள 65000 டவர்களை BSNL இடம் இருந்து பறிக்கும் முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது.

இதைக் கண்டித்து 12.08.2015 அன்று
கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்துமாறு FORUM அறைகூவல் விட்டிருக்கிறது.
நமது நிறுவனத்தின் சொத்துக்களை,
நமது கண் முன்னே பறிக்க நாம் அனுமதிக்கலாமா?


12.08.2015 அன்று காலை 1100 மணிக்கு
பொது மேலாளர் அலுவலகம் முன்
FORUM OF BSNL UNIONS & ASSOCIATIONS சார்பாக ஆர்ப்பாட்டம்
நிறுவனத்தைக் காக்க வெகுண்டெழுந்து வாரீர்!

Thursday, August 6, 2015

Protest Cabinet decision to form Tower Company, bifurcating BSNL





          தோழர் நம்பூதிரியின் பக்கத்தில் இருந்து
BSNL has got about 75,000 towers which will be handed over to the new company along with a few officers and staff. The new company may be financially viable, but the the revenue of BSNL will come down drastically making its revival difficult. The Modi government wants to seal the fate of BSNL as the earlier BJP government has sealed the fate of VSNL by gifting it to Tata. There is no VSNL now.It is reported that the Central Cabinet in its meeting on 5th August 2015 has decided to form a Tower Company, separating the tower section of BSNL. This is one of the recommendations of the Deloittee Committee and which has been strongly opposed by the Forum of BSNL Unions and Associations. In the two days strike on 21-22 April 2015 called by the Forum, one of the demands was that the proposal to form a Tower Company should be dropped., only Tata Communications. We can not allow such a fate for BSNL.Strong protest action is required to put a stop to this Cabinet decision. BSNL workers under the Forum have stopped Disinvestment of and VRS in BSNL through continuous and mighty struggles. Now it is the turn against the formation of the Tower Company. Any delay will be dangerous for the revival of BSNL.
  VAN Namboodiri's Blog

விரிவடைந்த மாநில செயற்குழு

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...