Wednesday, September 4, 2013
தகவல்
லோக்கல் கவுன்சில் உறுப்பினர் நியமனம் தொடர்பாக FNTO சங்கம் கேரளா உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் தீர்ப்பு நாளை (05-09-2013) வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
27-09-2013 அன்று நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு இன்னும் ஓரிரு நாளில் நமது சங்கம் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்க உள்ளது.
செப்டம்பர் 8 ஆம் தேதியில் இருந்து ஏர்டெல் நிறுவனம் தனது மொபைல் போன் கட்டணங்களை அதிகரிக்க உள்ளது .
விருதுநகர் SDOP அலுவலக கிளை மாநாடு
விருதுநகர் SDOP அலுவலக கிளை மாநாடு 04-09-2013 அன்று பழைய தொலைபேசி நிலையவளாகத்தில் தோழர் S.வெங்கடப்பன் தலைமையில் நடைபெற்றது.தோழர் மலைச்சாமி அவர்கள் நமது சங்க கொடியை ஏற்றி வைக்க, தோழர் M.முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க, கிளை செயலர் தோழர் C.சந்திரசேகரன் வரவேற்புரை நல்க கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
தோழர்கள் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர்,A.கண்ணன், மாவட்ட அமைப்பு செயலர், தோழர் M.S.இளமாறன், GM அலுவலக கிளை செயலர், ஓய்வூதியர் சங்க கிளை செயலர் தோழர் S .முருகேசன், SNEA மாவட்ட செயலர் திரு. G.செல்வராஜ், திரு. த.ராதாகிருஷ்ணன், AIBSNLEA மாநில பொறுப்பாளர், K.R.கிருஷ்ணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தோழர் C பழனிச்சாமி மாநில உதவி செயலர் சிறப்புரை நிகழ்த்தினார்.தோழர்கள் P.இலட்சுமணன், K.சிங்காரவேல், M.மோகன் ஆகியோர் முறையே தலைவர், செயலர் மற்றும் பொருளர் ஆக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து பெருந்திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, September 3, 2013
பி.எஃப் கணக்கு விவரம் அக்டோபர் 1 முதல் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இம்மாதம் 6 ஆம் தேதியிலிருந்து அன்றைய நிலவரப்படி சந்தாதாரர்கள் கணக்கில் உள்ள தொகை குறித்த முழு விவரங்களையும் வெளியிட ஆயத்தமாகி வருகிறது என வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் கே.கே.ஜலான் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு : CLICK HERE
20 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி
என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களில் 4219 பேர் ஒரே நாளில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் உள்ளது. இங்கு சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதம், ரயில் மறியல் என மாவட்டம் தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக டெல்லியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோ சர்வ் சொசைட்டியில் சேர்ப்பது; என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வசதி; ஊதிய உயர்வு உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
அதன்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ அடையாள அட்டையும், ஊதிய உயர்வும் உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால் சொசைட்டியில் சேர்ப்பது மட்டும் இழுபறியில் இருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கே காரணம் என கூறப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இப்பிரச்சனையில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அதன் பிறகு ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் சேர்க்க என்எல்சி முடிவு செய்தது. பின்னர் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் 4,219 ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோ சர்வ் சொசைட்டியில் சேர்க்க என்எல்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
நேற்று முன்தினம் முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து சொசைட்டி உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் படிப்படியாக என்எல்சியில் நிரந்தர தொழிலாளர்களாக ஆக்கப்படுவர். கடந்த 20 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்றனர். 4219 ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஒரே நாளில் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...