Tuesday, June 11, 2013

stepping up

          1-1-2007 முதல் ஊதிய நிர்ணயம் செய்தபோது சேவையில் மூத்த ஊழியர்கள் சேவையில் இளையவர்களைவிட ஊதியம் குறைவாக பெற்றதை நிவர்த்தி  செய்ய சீனியர் AO திரு. T.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் stepping up  செய்ய கோரினோம். நமது கோரிக்கையை ஏற்று   இன்று அதற்கான நடவடிக்கையை நிர்வாகம் எடுத்துள்ளது.இதனால் மாவட்டத்தில்  25 ஊழியர்கள் பலன் அடைய உள்ளனர். சீனியர் AO திரு. T.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு BSNLEU சங்கத்தின் நன்றி.

தந்தி சேவை நிறுத்தம்

          தந்தி சேவையை 15-07-2013 முதல் நிறுத்துவதற்கு BSNL நிர்வாகம் இன்று (11.06.2013) உத்தரவு வெளியிட்டுள்ளது.
உத்தரவு நகல் : Click Here

78.2 % IDA இணைப்பிற்கான BSNL உத்தரவு

78.2 % IDA இணைப்பிற்கான BSNL  உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரவு நகல் :- Click HERE

Monday, June 10, 2013

மறு சீரமைப்பு

          BSNL / MTNL மறு சீரமைப்பு விசயமாக அமைச்சர்கள் குழு கூட்டம் 11-06-2013க்குப்  பதிலாக 12-06-2013 அன்று மாலை 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது. 

78.2 IDA இணைப்பில் BSNLEU சங்கத்தின் மகத்தான பங்களிப்பு

          பஞ்சப்படியை சம்பளத்துடன் இணைத்து 01-01-2007 முதல் ஊதிய நிர்ணயம் செய்திட உத்தரவு வெளியாகி விட்டது. (DoT உத்தர்வு எண் 61-01/2012-SU dt. 10-06-2013) 12-06-13முதல் போராட்டம் என்ற அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் சங்க போராட்ட அறிவிப்புக்குப் பின்னர் 12-06-2012ல் ஏற்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது மாபெரும் சாதனை. இது அனைத்து ஊழியர்கள் , அதிகாரிகள் சங்கங்களுக்கு கிடைத்த வெற்றி.

          இதற்கு காரணமான ஊழியர்கள்- அதிகாரிகள் கூட்டமைப்பிற்கும் அதனைத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கின்ற அதன் அமைப்பாளர் தோழர் பி.அபிமன்யூ (பொதுச்செயலர் BSNLEU) அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

          தற்போது 78.2% பஞ்சப்படி இணைப்பு பிரச்சனையை நாங்கள் தான் தீர்வு செய்தோம் என்று வெற்றிக்கு சொந்தம் கொண்டாடும் வேலையில் NFTE நண்பர்கள் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்து கொள்ளட்டும். ஆனால், அவ்வாறு செய்யும் போது, BSNL ஊழியர் சங்கம் பெற்றுத் தந்த ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தைக் குறை கூற அவர்கள் முற்படுகிறார்கள். அதனை நாம் அனுமதிக்க முடியாது. “ஊதிய மாற்றத்தின்போது, BSNL ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளும் அநீதிகளும் இப்போது சரி செய்யப்பட்டுள்ளன” என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

          அதிகாரிகளுக்கு 68.8% பஞ்சப்படி மட்டுமே இணைக்கப்பட்டதால், ஊழியர்களுக்கும் 68.8% பஞ்சப்படி மட்டுமே இணைக்கப்படும் என்றுதான் ஊதிய மாற்றத்தின்போது நிர்வாகம் முன்வைத்தது என்பதை அனைவரும் அறிவர். 68.8% பஞ்சப்படியை ஏற்றுக்கொண்டு ஊதிய மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிர்வாகம் BSNL ஊழியர் சங்கத்தை நிர்பந்தம் செய்தது. ஆனால், BSNL ஊழியர் சங்கம் அதை உறுதியோடு மறுத்து விட்டதோடு, 78.2% பஞ்சப்படியை இணைக்குமாறு போராடிய BSNL ஊழியர் சங்கம், 78.2% பஞ்சப்படி இணைப்பை வலியுறுத்தி, இரண்டு நாள் வேலை நிறுத்தத்தையும் நடத்தியது. இறுதியாக, அதிகாரிகளுக்கு வழங்கப்படும்போது ஊழியர்களுக்கும் 78.2% பஞ்சப்படி இணைப்பு வழங்கப் படும் என்பதை உறுதி செய்து, BSNL ஊழியர் சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது.

          அவ்வாறு நாம் ஒப்பந்தத்தில் உறுதி செய்து கொண்டதால்தான், இப்போது மீண்டும் 78.2% பஞ்சப்படி இணைப்புப் பிரச்னையை நாம் மீண்டும் எழுப்பவும், – DoT யையும் BSNL நிர்வாகத்தையும் தீர்வு காண வலியுறுத்தவும் நம்மால் முடிந்தது. BSNL ஊழியர் சங்கம் 68.8% பஞ்சப்படி இணைப்பை ஊதியமாற்றத்தின்போது ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், 78.2% பஞ்சப்படி இணைப்பைப் பெறுவதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டுப்போயிருக்கும்.இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்.

          ஆனால், BSNL ஊழியர் சங்கம் ஏற்படுத்திய ஒப்பந்தத்தைக் குறைகூற முற்படும் சில நண்பர்கள், இப்போதாவது தங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பார்க்கட்டும்.ஊதிய மாற்றத்துக்காகவும், 78.2% பஞ்சப்படி இணைப்புக்காகவும் அவர்களுடைய பங்கு என்ன? BSNL ஊழியர் சங்கம் 78.2% பஞ்சப்படி இணைப்புடன் கூடிய ஊதிய மாற்றத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, இந்த நண்பர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஊதிய மாற்றத்தின் (68.8%) அடிப்படையில் ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றம் வழங்கும் உத்தரவை வெளியிடுமாறு அவர்கள் நிர்வாகத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். “அதிகாரிகளுக்கு வழங்கப் பட்டது போலவே ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்” என்பதே அவர்களின் முழக்கமாக இருந்தது.

          ஊதிய மாற்றத்தின் போது, அதிகாரிகளுக்கு என்ன வழங்கப் பட்டது? 68.8% பஞ்சப்படி இணைப்பு மட்டுமே! BSNL ஊழியர் சங்கம் 68.8% பஞ்சப்படி இணைப்பை ஏற்றுக்கொள்ளாமல், 78.2% இணைப்பிற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, அந்த NFTE நண்பர்கள், ஊதிய மாற்றம் ஏற்படாமல் தடுக்கும் வீட்டோ அதிகாரத்தை BSNL ஊழியர் சங்கத்துக்கு கொடுக்க வேண்டாம் என்று நிர்வாகத்தைக் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? 78.2% பஞ்சப் படி இணைப்புக்கான அனைத்துக் கதவுகளும் மூடப் பட்டிருக்கும்.

          இந்த உண்மைகளையெல்லாம் மறந்து விட்டு, இந்த NFTE நண்பர்கள், இப்போது ஊழியர்களைத் திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.ஆனால் ஊழியர்கள் தெளிவாக இருக்கின்றனர். அதனால்தான் அவர்கள் கடந்த சங்க அங்கீகார தேர்தலின் போது செய்யப்பட்ட இந்தப் பொய்ப் பிரச்சாரங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, BSNL ஊழியர் சங்கத்துக்குத் தங்கள் பேராதரவை அள்ளித்தந்தனர்.

          புறந்தள்ளப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை இனியேனும் நிறுத்திக் கொள்ள வேண்டும் அந்த NFTE நண்பர்கள்.

DoT Order on 78.2% IDA merger

Friday, June 7, 2013

பணி ஓய்வு பாராட்டு

சிவகாசி மூத்த தோழர் .மணிவண்ணன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா சிவகாசி OCB மற்றும் SDOP கிளைகள் சார்பாக 07-06-2013 அன்று மாலை நடைபெற்றது .கிளை தலைவர் தோழர் அழகுராஜ் தலைமை தாங்க கிளைகள் சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவர்கள் தோழர். மணிவண்ணணை    பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .மாவட்ட சங்கம்  சார்பாக மாவட்ட தலைவர் தோழர் .சமுத்திரகனி அவர்கள தோழர் .மணிவண்ணணை    பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .தோழர்கள் அய்யாசாமி , ராஜு ,ஜெயபாண்டியன் ,ராஜாகனி அவர்கள் வாழ்த்தி பேசினர் .தோழர் மணிவண்ணன் ஏற்புரை நிகழ்த்த தோழர் .இன்பராஜ் நன்றியுரை கூற கூட்டம் இனிதே முடிவுற்றது .





11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...