Thursday, January 10, 2013

சோசலிசமே வளர்ச்சிக்கான மாற்றுப் பாதை என்பதை நிரூபிக்கும் சீனா

          உலக அளவில் பொருளாதார வலிமையில் சீனா, அமெரிக்காவை முந்திவிடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மிக வேகமாக சீனா வளர்ந்து வருகிறது. இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி நிபுணர்கள் கணிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.இதில், சீனாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும், பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக 2019ஆம் ஆண்டில் பொருளாதார வலிமையில் சீனா அமெரிக்காவை முந்திவிடும். இந்த வளர்ச்சி 30 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். எனவே அடுத்த 30 ஆண்டுகளுக்கு சீனா முதன்மை நாடாக திகழும் என கூறியுள்ளனர், மேலும் நாட்டின் சுகாதார வளர்ச்சியிலும் சீனா முதன்மை நாடாக திகழும் என தெரிவித்துள்ளனர். தற்போது சுகாதார வளர்ச்சியில் சீனா 11-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரிவடைந்த மத்திய நிர்வாக குழு

          நமது BSNLEU சங்கத்தின் விரிவடைந்த மத்திய நிர்வாக குழு கூட்டம் வரும் 2013 பிப்ரவரி 26,27,28 தேதிகளில் ஆந்திர மாநிலம் வாரங்கல் நகரில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் CEC உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்க வேண்டும்.

Wednesday, January 9, 2013

அடுத்த தாக்குதல்


          மான்ய விலையில் வழங்கப் படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மேலும் ரூ 100 அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரயில் கட்டணம் உயர்கிறது

          ரயில் கட்டணத்தை உயர்த்தி மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்துள்ளார். இது விசயமாக அவர் மேலும் கூறியதாவது கட்டண உயர்வுக்கு மக்களும் தயாராகி விட்டனர். கடந்த 12 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதை பொது மக்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். கட்டண உயர்வு கஷ்டத்தை ஏற்படுத்தும் என்றாலும் அதற்கான யதார்த்த நிலையை உணர்ந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கட்டணத்தை உயர்த்த இதுவே சரியான நேரம். தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க கட்டண உயர்வு தவிர்க்க இயலாத ஒன்றாகும்.ஆக மொத்தம் மக்கள் கஷ்டப்பட தயாராகவேண்டும் என்பதை இந்த அரசாங்கம் தன் லட்சியமாய் கொண்டுள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்வளிக்கும் சங்கத்திற்கு வாக்குகளிப்போம்


Tuesday, January 8, 2013

விரிவடைந்த மாநில செயற்குழுமற்றும் சேவை கருத்தரங்கம்

          நமது BSNLEU சங்கத்தின்  தமிழ் மாநில விரிவடைந்த செயற்குழுக் கூட்டம் மற்றும் சேவைக் கருத்தரங்கம் வருகின்ற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரோஷன் மஹாலில் மாநிலத்தலைவர் தோழர் K.மாரிமுத்து தலைமையில் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்க உள்ள  விரிவடைந்த செயற்குழு கூட்டத்தை நமது அனைத்திந்திய பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு தொடக்கி வைக்க உள்ளார். அனைத்துக் கிளைச்செயலர்கள் மற்றும் முன்னணித் தோழர்களும் அவசியம் கலந்துகொள்ள தோழமையுடன் மாவட்டச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு சிறு விடுப்பு உண்டு.

Monday, January 7, 2013

6th membership verification

This is the 6th membership verification in BSNL  among which BSNL EU won the last 4 verification in a row and was serving the Employees since 8 long years. Lived as per their aspirations. We can be very proud to say that, with united struggles, until now, we saved BSNL all these years. Our responsibility day by day is increasing. We appeal all the employees to become part and parcel of the BSNL EU fraternity, join the hands in the united struggles for our better future and better BSNL. BSNLEU and its cadres are more confident that we can clinch more than 50% votes in the forth coming 6th Membership verification, which ensures us more power to bargain with either the Government or management. Join the hands together. Vote for BSNL EU for our better and better future.   
                                                                                                                                  BSNLEU , VIRUDHUNAGAR DISTRICT

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...